News
ரயிலில் மோதி இரு இளைஞர்கள் பலி
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18) ஆகிய இரு இளைஞர்கள், இன்று சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு…
செல்லப்பிராணி நாய்களை பதிவு செய்யாவிட்டால் 10ஆயிரம் ரூபா தண்டம்
கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யத் தவறின் 10ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வினவியபோது, கட்டாக்காலி நாய்களின்…
மஹிந்த அணியில் எனக்கு எதிராக சூழ்ச்சி: சஜின்வாஸ்
எனக்கு எதிராக பாரிய சதித்திட்டம் ஒன்று கூட்டு எதிர்க்கட்சி பக்கம் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. அரச சாட்சியாக மாறுவதற்கு நான் குற்றவாளியல்ல. பாம்பின் கால் பாம்பறிவது போன்று மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் கடமையை தவிர வேறு ஒன்றும் நான் செய்யவில்லை என்று முன்னாள் வெளிவிவகார கண்காணிப்பு எம்.பி. சஜின் டி வாஸ் குணவர்த் தன தெரிவித்தார். ஊடகங்கள் எனக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்களை எவ்விதமான அடிப்படை தன்மையுமின்றி முன்வைக்கின்றன. அவ்வாறு பாரியளவிலான குற்றத்தை நான் செய்திருந்தால் என்னை…
நாய்களுக்கும் வரி
வெள்ளைக்காரன் ஆட்சி மீண்டும் நாட் டில் தலைதூக்கியுள்ளது. நாய்களுக்கான அனுமதிப் பத்திரத்திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொது எதிர்க்கட்சியினர். சிறுநீரக நோயாளர்களின் இரத்தப் பரிமாற்றம் செய்யும் கட்டணத்திற்கும் புற்று நோயாளர்களின் எக்ஸ்ரேக்கும் 15 வீத வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியது. பாராளுமன்ற குழு அறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொது எதிரணி யின் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பொது எதிரணியினர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்; இலங்கையர்களிடம் அனைத்து…
பொது மன்னிப்புக் காலம்: 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளன
பொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்திருந்தது….
உயிருடன் பிடிக்கப்பட்ட மரை
பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உயிருடன் மரை ஒன்றை தோட்ட பொது மக்களும் பொலிஸாரும் இணைந்து பிடித்துள்ளனர். உணவு தேடிவந்த குறித்த மரையின் கால் ஒன்று உபாதைக்குள்ளாகியிருந்த நிலையிலேயே பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மரை தற்போது நல்லதன்னி வனலிலங்கு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லண்டனின் நகர மேயராக முதல் இஸ்லாமியர்
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் முஸ்லிம் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்படுகின்றனமை இதுவே முதல் முறையாகும். பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்….
காற்று மாசடைதலில் கண்டி முதலிடம் – ஜனாதிபதி
கொழும்பு நகரத்தை தோல்வியடைய செய்து காற்று மாசடைதலில் கண்டி நகரம் முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். இலங்கையின் காற்று மாசடைதல் தொடர்பிலான ஆறாவது தேசிய மாநாடு நேற்று (5) மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பத்தரமுல்லையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
தகவலறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விரைவில்!
விரைவில் பாராளுமன்றில் தகவல் அறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தார தெரிவித்தார். நேற்று முன்தினம் (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னர் குறித்த சட்ட மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சட்ட மூலத்தில் கவனம் செலுத்தக்கூடிய…
எம்.பி. பதவியைத் துறக்கத் தயார் – பாலித
நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் ஆயுள் முழுமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பாலித, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து உண்மையான தகவல்களை அறிந்தவர் அமைச்சர் சரத் பொன்சேகா என்ற வகையில் அவரது உரையை கூட்டு எதிர்க்கட்சியினர் செவிமடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கெட்ட…
இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்
இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…
ஹஜ் கடமையை நிறைவேற்ற விண்ணப்பித்துள்ளவர்களின் கவனத்திற்கு
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற விண்ணப்பித்தவர்களில் 50 வீதமானோர் கடமையை நிறைவேற்றுவதில் அக்கறையின்றியும் விருப்பமின்றியும் இருக்கின்றனர். ஹஜ் விண்ணப்பதாரிகள் தமது பயணத்தை எழுத்து மூலம் உறுதிசெய்யாவிட்டால் ஹஜ் பயணத்துக்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாதென ஹஜ் குழுவின் உறுப்பினரும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்தார். 2016 ஆம் வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வருடம் ஹஜ் கடமையை…
