News
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய தின நிகழ்வு
– பரீட் இஸ்பான் – 2016ம் ஆண்டிக்கான இஸ்லாமிய தின நிகழ்வு 2016.05.07 – 2016.05.08 ஆகிய தினங்களில் கொழும்பு பல்கலைக்கழக மஜ்லிசின் ஏற்பாட்டில் சட்ட பீட வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொழும்பில் உள்ள 25 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் பங்குபற்றின. இங்கு பேச்சசுப் போட்டி அதான் கூறல் விவாதப்போட்டி ஹஸீதா மற்றும் வினாவிடைப்போட்டி என்பன நிகழ்வை அலங்கரித்தன. அத்தோடு சில போட்டிகள் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெற்றமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில்…
மஹிந்த உகண்டாவுக்கு விஜயம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாத இறுதியில் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டாவின் பிரதியமைச் சர் ஒருவரின் அழைப்பினை ஏற்றே மஹிந்தராஜபக்ஷ அந்நாட்டுக்கு பயணிக்கவுள் ளார். அவருடன் காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த மற்றும் உதித்த லொக்கு பண்டார ஆகியோரும் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் டுபாய் வழியாகவே உகண்டாவின் கம்பாலா நகருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மஹிந்தவுக்கு ஆட்சிக்கு வரமுடியாது
மஹிந்த ராஜபக் ஷவிற்கு மீண்டும் நாட் டில் ஆட்சிக்கு வர முடியாது. அரசியலில் ஈடுபடலாம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, தனிப்பட்ட ரீதியில் மஹிந்த மீது எனக்கு மதிப்புள்ளது. ஆனால் அவரது குடும்ப ஆக்கிரமிப்பு அரசியல் கொள்கைகளை எதிர்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
பொலிஸாருக்கு எதிராக ஆயிரம் முறைப்பாடுகள்!
பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களின் முறைப்பாடுகளை கவனத்திற்கொள்ளாமை, பக்கச்சார்பாக செயற்பட்டமை மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை ஆகியன தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக 467 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 460 முறைப்பாடுகள்…
அமர்வுகளுக்கு செல்லாத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!
நாடாளுமன்ற அமர்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ப்பதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைப்புக்களின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீரசூரிய தெரிவித்துள்ளார் கடந்த வியாழக்கிழமையன்று அரசாங்கத்தின் பிரேரணை ஒன்றின் வாக்கெடுப்பின்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரவின்மையால் குழப்பநிலை ஏற்பட்டது இது மக்களின் ஆணையை மீறும் செயல் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக சரத் வீரசூரிய…
ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம்!
பயண நுழைவுச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துவது குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 5000 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 20,000 ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நாள் தோறும் டிக்கட் இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்து…
திஹாரிக்கு புதிய ஆரம்பப் பாடசாலை – நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம்
– ஸப்ரான் .எம். மன்சூர் – திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு, முதற்கட்டமாக காணி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நேற்று (07) இரவு இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திஹாரிய கிளைத் தலைவரும், “புதிய திஹாரிக்கு புதிய அரசாங்க ஆரம்பப் பாடசாலை” எனும் செயத்திட்டத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அம்ஜத் மௌலவியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வளவாலர்களாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின்…
வதந்திகள் ஊடக எம்மை பிளவுப்படுத்த முடியாது: ஜே.வி.பி
மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி), வதந்திகள் ஊடாகப் பிளவுப்படுத்த முடியாது என்று, முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் உள்வீட்டு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கே.டி.லால் காந்த அல்லது கட்சியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்குத் தலைமையை வழங்குமாறு, கட்சியின் மத்திய குழுவின் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் இதனால் அக்குழுவினருக்கும், தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்கும் குழுவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, அநுரகுமார…
பகிடிவதை செய்தால் 5 வருடங்கள் சிறைவாசம்
பகிடிவதை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான புதிய கொள்கை, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று, களனிப் பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் ஆகியன இணைந்தே இந்தக் கொள்கையை தயாரித்துள்ளன. இந்தக் கொள்கை, களனிப் பல்கலைக்கழகத்திலேயே முதன்முதலில் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு…
எதிர்க்கட்சி தலைவரின் தந்தையை கொன்றவர் சிக்கினார்
கொழும்பு மாநகர சபையின் தற்போதையை எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகவே 1986ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த டப்ளியு. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர் 22 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வருட இறுதிக்குள் நிரந்தர தீர்வு – ராஜித
யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜூன் மாதம் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அந்த அறிக்கை சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் வகையிலும் அதே நிலையில் உண்மைகளை கண்டறியும் வகையிலும் பலமான ஒன்றாக அமையும். வருட இறுதிக்குள் நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்தது. முன்னாள் போராளிகளின் கைது மற்றும் முகாம்கள் தொடர்புடைய பாதுகாப்பு விடயங்களில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. இலங்கை அரசாங்கத்தின்…
மின்னல் தாக்கி நான்கு யானைகள் பலி
அநுராதபுரம், மஹாவிளாச்சி பகுதியில், மின்னல் தாக்கி யானைக்குட்டிகள் முன்று உட்பட நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த யானைகள் நான்கையும் எள்ளுப் பயிற்செய்கை நிலத்திலிருந்து, கிராமவாசிகள் மீட்டுள்ளனர்.
