News
களனி பிரதேசத்தில் இன்று விமானப்படை மீட்புப் பணிகள்!
களனி ஆற்றின் வெள்ளம் காரணமாக வீடுகளில் சிக்கிக் கொண்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளில் இன்று விமானப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மல்வானை, களனி, கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் இந்த மீட்புப் பணிகள் இன்று முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்காக விமானப்படையினரின் இரண்டு ஹெலிகொப்டர்களில் மீட்புக்குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். களனி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் அதிகரித்த நீர் மட்டம் காரணமாக தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்….
கத்தாரில் சாக்கீர் நாயிக்
உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் சாக்கீர் நாயிக் அவர்களின் சொற்பொழிவு கத்தாரில் 26.05.2016 வியாழக்கிழமை மாலை 8.00 மணிக்கு Katara’s Amphitheatre இடம் பெறவுள்ளது. மாற்று மத சகோதரர்களுக்கும் தெரியப்படுத்தி உரையை கேட்பதற்கு உங்களுடன் அழைத்து வாருங்கள். தலைப்பு: Does God Exit? அனுமதி: இலவசம் தகவல்: எம். வை. இர்பான் www.fb.com/akpcq
மழையால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள்
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ‘இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்’ என சஜீத் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளார். அவரது அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சொன்னார்.
கம்பளை நகரில் ஆர்பாட்டம்
-எம்.எம்.எம். ரம்ஸீன் – கம்பளை நகரில் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொட்டப்படும் குப்பைகூழங்கள் கடந்த ஒரு வார காலமாக அகற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 18.05.2016 கம்பளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. கம்பளை நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி கம்பளை நகர சபையை சென்றடைந்தது.இதில் கம்பளை பகுதி சமயத் தலைவர்கள் நகர வர்த்தகர்கள் குடியிருப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இந்தஎதிர்ப்பு ஆரப்பாட்டத்திற்று ஒததுழைப்பு வழங்கும்…
பிரதமரை விட மஹிந்தவின் பாதுகாப்பு அதிகமானது!
பிரதமரின் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமானது வழங்கியுள்ளது. அந்தவகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இது தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பகரமான கதைகளை பரப்பிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார். சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
26400 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் 26400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார். இடைப்போகத்திற்கென செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்களே நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மண்டூர் வெல்லாவெளி வாழைச்சேனை கண்டங்களில் அதிகப்படியான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீர் இருதினங்களுக்குள் வடியா விட்டால் செய்கை பண்ணப்பட்ட அத்தனை நெல் வயல்களும் நீரில்…
சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலி
தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று (18) காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 81 ஆயிரத்து 212 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் தலைநகரம் கொழும்பில் 35 ஆயிரத்து 513 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடுகண்ணாவை மண்சரிவில் காணாமல்போனோரின் பெயர் விபரம்
கடுகண்ணாவை, இலுக்வத்தைப் பிரதேசத்தில் இடம் பெற்ற மண் சரிவில் பின்வருவோர் காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. கடுகண்ணாவை பிரதேசத்திலுள்ள ரம்மலக, வட்டப்பொல என்ற இடத்திலுள்ள 104, மற்றும் 103 ஆம் இலக்க வீடுகள் இரண்டும் மண்ணில் புதையுண்டாதகவும் அப்போது 104ஆம் இலக்க வீட்டிலிருந்தவர்களான சபீனா பேகம் (42 வயது), மொகமட் சியான் (08 வயது), மொகமட் சபீக்(15 வயது) ஆகியோரும் 103 ஆம் இலக்க வீட்டிலிருந்த மும்தாஸ் பேகம் (49 வயது), மொகமட் ரஸ்மீன்( 25வயது), மொகமட்…
வத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு
வத்தளைப் பிரதேசத்திலிருந்து இரண்டு சடலங்களை இன்று (18) மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்விரு சடலங்ளும் 16 மற்றும் 09 வயதுடைய சிறுவர்களுடையது என்றும், வெள்ளத்தினால் சிக்குண்டே இவ்விருவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்
-சுஐப் எம்.காசிம் – பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பின் பல இடங்களுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் சென்று பார்வையிட்டார். இந்தப் பிரதேசங்களில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பில் அமைச்சர் கடற்படைத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன் அவசரமாக படகுகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினார். அமைச்சரின் கோரிக்கையை அடுத்து இன்று காலை (18/௦5/2016) இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரதேசங்களுக்கு நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பல படகுகளை அங்கு…
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் மீண்டும் கோரிக்கை!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என கூறப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடு செய்யப்படாத சர்ச்சைகளற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட…
அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்புவது சாத்தியமா?
– சுஐப் எம்.காசிம் – மன்னாருக்கு மணி மகுடம் என விளங்கும் பிரசித்தி பெற்ற கிராமம் விடத்தல்தீவு. இறையளித்த இயற்கை வளங்களான கடல்வளமும், நிலவளமும், நீர்வளமும் கொண்டது இக்கிராமம். எமது முன்னோர்களும் நாமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த பதி இது. மன்னார் நகரில் இருந்து வடதிசையில் செல்லும் பூநகரிப்பாதையில் 15ஆவது மைலில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. தேவையான அளவு வாழ்க்கை வளம் காணப்படுவதால் மக்கள் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். கிராமத்தின் மேற்கு எல்லையில் ஆழமற்றதும், மீன்…
