News
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். சுமார் 500 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அனுர சேனநாயக்கவிடம் தீவிர விசாரணை
– எம்.எப்.எம்.பஸீர் – பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினர் நேற்று (19) இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் கீழான சிறப்புக்…
ஜனாதிபதி அவசர பணிப்புரை
– ப.பன்னீர்செல்வம் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் “நிதியை” பிரச்சினையாக்கிக் கொள்ளாது அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர பணிப்புரையை விடுத்தார். வெள்ளத்தால் கொழும்பு மாவட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், இம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி. திஸாநாயக ஆகியோரை ஜனாதிபதி இணைப்பாளர்களாகவும் நியமித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பஸ் கட்டணம் இல்லை
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி இச்சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோள்படி உரிய டிப்போக்களின் ஊடாக போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ராமல் சிறிவர்தன கூறினார். இதற்கிடையில் உடரட்ட மார்க்கத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி…
வடகொரியா அதிபருடன் பேசுவேன்: டொனால்டு டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால்விட்டு வரும் வடகொரியாவுடன் பேச்சு நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் அமெரிக்காவின் உறவு குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பிய போது “நான் அவருடன் பேசுவேன்(கிம் ஜோங்). அவருடன் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும்…
பாதித்தோரை நல்லாட்சி கைவிடாது
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும், தாய்நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும், நல்லாட்சி அரசாங்கம் கைவிடாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை காலவரையரையின்றிக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி, உட்கட்டமைப்பு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் ஏற்படுத்தி…
அரச ஊழியர்களினது விடுமுறைகள் ரத்து!
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனைத்து அரச ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய நிலைமை சீராக்கப்படும் வரையில் விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நிவாரண சேவைகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு சரியான முறையில் வழங்காத பட்சத்தில் 1905 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும்…
அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்தவும்: ஜே.வி.பி
இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தொடர்பில் கருத்துரைத்தபோதே ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் எம்.பியுமான விஜித ஹேரத், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி நின்றார். ‘இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்டோர் மற்றும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளோர் தொடர்பில் நாமும் எங்களுடைய அவதானத்தை செலுத்துகின்றோம். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுகின்ற போது „சுற்றறிக்கை… இடையூறாக இருக்கின்றது. நலன்புரி நிலையங்களில் இருக்கின்ற மக்களுக்கு மட்டுமே உணவுகளை…
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 14 போ் கைது
மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவந்த 14 போ் இன்று (19) அதிகாலை கைதுசெய்யபட்டுள்ளதாக பொகந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனா். மாணிக்கக்கல் அகழ்விற்க்காக குறித்த பகுதி ஒரு வருடத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கபட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா். இதேவேளை, நேற்றயதினம் பொகந்தலாவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது. பொகவந்தலாவை பொலிஸாரால் 9பேரும் விசேட அதிரடிப் படையினரால் ஐந்து பேரும் கைது செய்யபட்டுள்ளதாகவும் மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன் படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனா்.
நிவாரண – மீட்பு பணிகளில் முப்படையினர்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலுக்கமைய பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இராணுவத்தினர் பல்வேறு நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூரமான மண்சரிவில் சிக்கியவர்களை நிவாரண மற்றும் மீட்கும் பணிகளில் 58 ஆவது படைப்பிரிவின் 300 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் (இலங்கை சிங்க ரெஜிமண்ட் மற்றும் 8 விஜயபாகு)…
அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு ஆரம்பம்!
நாட்டில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முப்படையினரின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய முறையில் செயற்படுத்துவதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய 17 ஆம் திகதி பிற்பகல் தொடக்கம் இவ் நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவசர அனர்த்த நிலமைகள் தொடர்பில் தகவல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி இலக்கங்கள்…
இலங்கை விமானப்படையின் அறிவிப்பு
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை விமானப் படை முன்வந்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக பொது மக்களின் உதவிகளை இலங்கை விமானப் படை கோரியுள்ளது. அதன்படி உலர் உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார உதவிகள் உள்ளிட்ட பொது மக்களின் உதவிப் பொருட்களை இலங்கை விமானப் படைத் தலைமையகத்தில் ஒப்படைக்க முடியும். உதவிகளை வழங்க விரும்புவோர் 011 3133105 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
