News
களனி கங்கையின் சீற்றம் (படங்கள்)
களனி கங்கையின் சீற்றம்: விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
ஹெலியில் சென்று பிரதமர் பார்வை
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலியில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இயற்கை அனர்த்தங்களை வானிலிருந்து நேற்று புதன்கிழமை பார்வையிட்டார். இயற்கை அனர்த்தங்களை பார்வையிட்டதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹெலியிலேயே வருகை தந்தார். அவைக்கு வருகை தந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை, பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நானும்,…
கரு ஜயசூரிய அனுதாபம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றம் நிர்க்கதியாகியுள்ள அனைவருக்கும், நாடாளுமன்றம் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த அனர்த்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார். நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய அசாதாரண வானிலையினால்…
69 பயணிகளுடன் விமானம் மாயம்
எகிப்துக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று 59 பயணிகள் மற்றும் 10 விமான சிப்பந்திகளுடன் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி பயணித்த எகிப்து விமான சேவைக்கு சொந்தமான எம். எஸ். 804 என்ற பயணிகள் விமானமே நேற்று இரவு 11 மணியளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எகிப்தின் வான்வெளி விமான பரப்பிலிருந்து 80 மைல் தொலைவில் கட்டுப்பாட்டறைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் விமானத்தை தேடும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் எகிப்து விமானவேவை…
கண்டி – அம்பலமான தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம்
கண்டி, கலஹா பிரதேசத்தில் அம்பலமான பெருந்தோட்டப் பகுதியில் திரிவானா கற்பாறையுள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்றும் கனமழைக்கான சாத்தியம்
நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய…
அடைமழையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் நட்டம்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக கூறியுள்ளார். இதேவேளை, அனர்த்த நிலைமைகளினால் பணியாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா
பரபரப்புடன் 232 தொகுதிகளில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகிறது. இதுவரை 220 தொகுதிகளின் நிலவரம் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆளும் அதிமுகா 139 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது.
23 வயது இளைஞரை கடத்திய 25 வயதான யுவதி கைது!
23 வயதான இளைஞர் ஒருவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள பலவந்தப்படுத்தியகுற்றச்சாட்டின் பேரில் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் மாத்தறையில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் முகநூலின் ஊடாக ஏற்பட்ட நட்பை அடுத்தே இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த யுவதி, இராணுவ வீரர் ஒருவர் உட்பட்ட 6பேரை கொண்டு இளைஞனை கடத்தியுள்ளார். இது தொடர்பில் இளைஞனின் நண்பர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார்விசாரணையை மேற்கொண்டு யுவதியை கைதுசெய்தனர்
தமிழ்நாடு தேர்தலில் ஆளும் அதிமுக முன்னிலை!
கடந்த 16ம் திகதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தற்போதைய நிலைவரப்படி 115 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், திமுக 81 இடங்களைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
அரநாயக்க பாரிய மண்சரிவு! 134 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்?
மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் புதையுண்ட 14 சடலங்கைள மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். எனினும் இன்னும் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க, எலங்கபிட்டிய சாமசர மலை இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டது. மலையடிவார கிராமங்களில் காணப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மலையின் நூறு ஏக்கர் பகுதி சுமார்…
வெள்ளப்பெருக்கு ; காத்தான்குடி பள்ளிவாயல்கள் விடுத்துள்ள அறிவித்தல்
-பழுலுல்லாஹ் பர்ஹான் – தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம். 2011 ம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்த்தத்தின் போது தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நமக்கு அதிகளவான நிவாரண உதவிகள் செய்ததை நாம் மறக்க முடியாது. அதனடிப்படையில் நமது பிரதேசம் தழுவியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ள அனர்த்த நிவாரன நிதி…
