News
பிரித்தானிய மகாராணிக்கு ஜனாதிபதி விசேட நினைவுக் குறிப்பு!
பிரித்தானிய எலிசபெத் மகாராணியாரின் 90 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று (16) பிற்பகல் பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து விசேட நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார். மகாராணியாரின் 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று இரவு ஒரு விசேட நிகழ்வு பிரித்தானிய உயரிஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வரவேற்றார்….
கொரியாவில் நடைபெற்ற இலங்கை கலாசார நிகழ்வு!
தென்கொரியாவில் இலங்கை நாட்டின் கலை கலாசார நிகழ்வொன்று கடந்த 11 ஆம் திகதி சியோல் கிரான்ட் பார்க்கில் நடைபெற்றது. கொரியாவின் இலங்கைக்கான தூதரகமும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் கலாசார நிகழ்வில் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை நாட்டினால் தென்கொரியாவுக்கு வழங்கப்பட்ட இரண்டு யானைக்குட்டிகளின் பிறந்தநாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டது. இலங்கை நாட்டின் கலாசார அம்சங்களை கொரிய விருந்தினர்கள் மற்றும் சிறுவர்களுடன் பல்வேறுபட்ட வழிகளில் பரிமாற்றி நாட்டின் கலாசாரத்தினை ஒருங்கிணைப்பதே இந்நிகழ்வின்…
டெங்குவை கட்டுப்படுத்த ஒன்றிணைவோம்!
நாடு முழுவதிலும் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபால தெரிவித்தார். நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கம்!
ஐரோப்பிய ஒன்றியத்தினால் (European Union – EU) இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, அவ்வொன்றியம் முழுமையாக நீக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இத்தடை நீக்கம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அது குறித்தான உத்தியோகபூர்வ முடிவை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில், இலங்கை ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித்…
தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவு
இலங்கையின் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (16) நள்ளிரவு முதல் நிறைவுக்கு வந்ததாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சூரிய சக்தி
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கும் சூரிய சக்தியை (சோலார் பெனல்கள்) பயன்படுத்த, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, மின்சாரத்தை சேமிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகவும் மின்விளக்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சக்தியை மிச்சப்படுத்தி, அதனை தேசிய மின் கட்டமைப்புக்குள் சேர்ப்பது தொடர்பில் அமைச்சினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், எஸ்.எம். ரஞ்சித்
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார். அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்: கால எல்லை நீடிப்பு
மண்சரிவு, வெள்ளம் மற்றும் சாலாவ வெடிப்புச் சம்பவம் ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கான காலத்தை இரண்டு மாதங்களாக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வாகனங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களும் தமது தவணைக் கட்டணங்களை இரண்டு மாதங்கள் காலம் தாமதமாகி செலுத்தலாம். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமது மின்சார மற்றும் தண்ணீர்…
ஹஜ் குழுவுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு
-ARA.Fareel- இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகளில் ஹஜ் குழு 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளை (Guide Lines) மீறியுள்ளதாகவும் இவ்வருட ஹஜ் கோட்டா பகிர்வு முறையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழி முறைகளின் கீழ் கோட்டாவை மீள் பகிர உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதிகளாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர், அமைசின் செயலாளர், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள்…
பொருளாதார வளர்ச்சி 5.5 வீதமாக உயர்வு
இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது நூற்றுக்கு 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு
மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிகரெட்டொன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே விசேட விடயங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன நியமனம்
ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக நேற்று (16) பதவியேற்றார்.
