News
நில உரிமையும் நில மீட்பும்
நிலத்தில் நன்கு அக்கறை செலுத்துங்கள். அது உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டதல்ல. அது உங்கள் சந்ததிகளால் உங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டதாகும். நிலம் நம்முடைய முன்னோர்களிடம் இருந்து வாரிசுரிமை பெற்றதல்ல. எங்கள் குழந்தைகளிடம் இருந்து கடன் பெற்றதேயாகும்’;. மேற்கூறிய வார்த்தைகள் அமெரிக்க செவ்விந்தியர்களால் 1700 களில் கூறப்பட்ட உபதேசங்களாகும். இக்கூற்று நிலத்தின் பெறுமதியை வெளிக்காட்டுவதோடு , நிலமானது எதிர்கால சந்ததிகளின் உடமைகள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. மனிதன் நீரிலோ, ஆகாயத்திலோ வாழ முடியாது. வாழ்வதாயின் அவன் நிலத்திலேயே வாழ்ந்து தீர…
கழுத்தை அறுத்து கொள்வேன்: மஹிந்த
தான்,18 மில்லியன் டொலரை களவெடுத்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டிள்ளது. தான் களவெடுத்ததை நிரூபிக்கப்பட்டால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குற்றம் நிரூபணமானால் கம்மன்பிலவுக்கு 5 ஆண்டு சிறை!
போலி ஆவணத்தை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர். எந்த நபருக்காவது நஷ்டத்தை ஏற்படுத்தும் நோக்கில், மோசடி செய்யும் எண்ணத்தில் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டால் இந்த தண்டனை வழங்கப்படும் என சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். போலி ஆவணம் என்பது ஆவணத்தை முழுமையாக மாற்றுவது மாத்திரமல்ல, ஆவணத்தில் ஒரு பகுதியை மாற்றுவது, கையெழுத்திடுவது, மாற்றங்களை செய்வது போன்றவை,…
அகதிகள் படகிலிருந்து தரையிறங்க இந்தோனேசியா அனுமதி!
இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரமாக படகில் பரிதவித்த 44 இலங்கைத் தமிழர்கள் தரையிறங்க அந்த நாட்டு அரசு நேற்று(18) அனுமதி அளித்தது. கடந்த 11 ஆம் திகதி இந்தோனேசியாவின் ஆசே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு இன்ஜின் கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளிப்பதை அந்த நாட்டு மீனவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இந்தோனேசிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். படகில் 9 சிறுவர்கள், பெண்கள்…
பேட்டரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்
அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விமானங்கள் தற்போது பெட்ரோலில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு அது குறிப்பிட்ட தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பேட்டரியில் பறக்கும் விமானத்தை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அதற்கு ‘மோஸ்வெல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 14 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விமானத்தின் ‘புரோபெல்லர்’கள் இயங்க…
ஏழாண்டுகால வனவாசம் நீங்கி மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கும் ஜார்ஜ் புஷ்
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக 2001-2009 ஆண்டுகளுக்கிடையே இருமுறை பதவி வகித்தவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்(69). 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சி தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து, பதவி விலகிய ஜார்ஜ் புஷ், அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் விலகி இருந்தார். வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட்…
அன்று மௌனித்திருந்தவர்கள் இன்று எதிர்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது
இலங்கையில் யுத்தத்தை முடிக்க இந்தியா உதவியபோது மௌனித்திருந்தவர்கள் இன்று அபிவிருத்திக்கு உதவும்போது எதிர்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டுமென்பதில் அரசு அக்கறையுடன் செயற்படுகிறது என்றும் குறிப்பாட்டார்.
மெகா போலிஸ் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஆலோசனை
மேல் மாகாண மெகா போலிஸ் திட்டத்தை துரிதப்படுத்துமாறு துறைசார் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாண அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கில் மெகா போலிஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மெகா போலிஸ் திட்டம் குறித்து அலரி மாளிகையில விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். கொழும்பு நகரின் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த உரிய திட்டமொன்று…
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி
கொலன்னாவை வெல்லம்பிட்டிய பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.. இம் மக்களுக்காக உடன் தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காக முதற்கட்டமாக 10ஆயிரம்ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேற்று (18)ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து பகிா்ந்தளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிஙக நிதி அமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு . பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. இங்கு…
மட்டு,மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்ட வீழ்ச்சி சிந்திக்க வேண்டிய விடயமாகும் – அமீர் அலி
– அபூ செய்னப் – மட்டு,மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்ட வீழ்ச்சி சிந்திக்க வேண்டிய விடயமாகும்.கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த வீழ்ச்சியானது இந்த பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து தரப்பினரையும் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “ஈஸ்ட் கேட்” நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா கல்லூரியில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை…
நிவாரணம் வழங்குதலை முறைமைப்படுத்த ஜனாதிபதியினால் விசேட குழு!
கொஸ்கம சாலாவ ஆயுதக் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை முறைமைப்படுத்துவதற்கான ஒரு விசேட குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயன்த, ஆகியோரின் தலைமையில் இக்குழுவை நியமிப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் இக்குழு ஒருங்கிணைப்புச் செய்வதற்கும்…
ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா? இங்கிலாந்தில் வாக்கெடுப்பு நடப்பது சந்தேகம்
28 நாடுகளின் அரசியல், பொருளாதார கூட்டமைப்பாக ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. இந்த ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்ற சர்ச்சை அங்கு எழுந்தது. இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தார். இந்த கருத்து வாக்கெடுப்பு வருகிற 23-ந் தேதி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரசாரமும் நடைபெற்று வந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாகூட கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வந்து, ‘ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து…
