News
கூட்டுறவுத்துறையைப் பொறுப்பேற்ற பின்னர் வீண்விரயம் இடம்பெறவில்லை – அமைச்சர் றிஷாத்
-சுஐப் எம்.காசிம் – கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை இவ்வாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, தாமரைத் தடாகக் கலையரங்கில் 94 வது சர்வதேச கூட்டுறவுதின விழா இன்று (02/07/2016) நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதிதிகளாக பிரதி அமைச்சர் சம்பிக்க…
பிரார்த்தனையினாலும், ஒற்றுமையினாலுமே நமது சமூகத்தைப் பாதுகாக்க முடியும்
-சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களைப் பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும், பெருமானாரையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசார தேரர் மீது, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை (01) கிண்ணியாவில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில், கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த சில வருடங்களாக…
குவைத்தில் தீவிபத்து: 9 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 9 பேர் பலியாகினர். 23 பேர் காயம் அடைந்தனர். குவைத் தென் பகுதியில் 15 கி.மீட்டர் தொலைவில் பர்வானியா என்ற இடத்தில் புறநகர் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். அவர்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் பிடித்த தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும்…
ஞானசார தேரர் மியன்மார் பயணம் !
பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் ஞானசார தேரர் நேற்றைய தினம் (30) மியன்மார் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவரை சர்ச்சைக்குறிய அசின் விராது தேரர் வரவேற்பு அளித்துள்ள அதேவேளை அங்கு தங்கியிருக்க சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மியன்மாரில் பெளத்த மதகுருமார்களை சந்திக்கவும் அங்கு இடம்பெறும் பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ளவும் ஞானசார தேரர் அங்கு சென்றுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
உங்கள் பிரதேசங்களில் இனவாத அச்சுறுத்தலா? – களத்தில் குதிக்க முஸ்லிம் சட்டதரணிகள் தயார்
-AAM. Anzir- முஸ்லிம் பிரதேசங்களில் தற்போது புதிது புதிதாக உருவாகும் இனவாத அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயார் என் அறிவித்துள்ளனர். அந்தவகையில் முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட ஆர்.ஆர்.டி.அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இதனை Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார். கீழ்வரும் இலக்கங்கள் மூலமாக தொடர்புகொள்ளலாம் SHAINAS MOHAMED 0767410287 SHAFRAZ HAMZA 0778198075 SAFEEN RAHIM 0771502043 RUSDHI HABIB 0774440019 அதேவேளை இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தயவுசெய்து…
மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்
தற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உள்ள வட்டிக்குளம் வாவியில் வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பறவைகள் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அப்பிரதேச வாசியொருவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவும் இடங்களின் உரிமையாளர்கள் 139 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மூன்று நாள் கொண்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளான நேற்று (30) நாட்டில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 18,000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பள்ளிவாசலுக்கருகில் பன்றி முட்கள்
அக்குறணை பிரதேசத்திலுள்ள அளவத்துகொடை மல்கம்மந்தெனிய ஜூம்மா பள்ளிவாசலுக்கருகில் பன்றி முட்களை இனந்தெரியாதோர் வீசிச்சென்றுள்ளதாக அளவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் சத்தம்கேட்டு அயலிலுள்ள ஒருவர் வந்து பார்த்த போது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவரின் ஒருவரது கையில் வாள் ஒன்று இருந்ததாகவும் வெளியே வந்தவரை வாளைக்காட்டி மிரட்டியதாகவும் குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நள்ளிரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சற்று விழிப்பாக இருந்த நிலையில், மீண்டும்…
புத்தெழுச்சி பெறத்துடிக்கும் பெரியமடுக் கிராமம்
– சுஐப் எம்.காசிம் – பருவ மழை குறைந்த காலங்களில் விடத்தல்தீவு விவசாயம் பாதிக்கப்படுவதுண்டு. அதனால் வயல்களுக்கு வேண்டிய நீரைத் தேக்கி வைக்கக் குளம் தேவைப்பட்டது. விடத்தல்தீவிலிருந்து எட்டு மைல்களுக்கு அப்பால் கிழக்கில் அமைந்த பெரியமடுக் குளம் தூர்ந்த நிலையில் காணப்பட்டது. இக்குளத்தைப் புனரமைத்துத் தேவையான நீரைப் பெற விடத்தல்தீவு விவசாயிகள் முயற்சித்தனர். அதன் பெறுபேறாக 1955ஆம் ஆண்டளவில் பெரியமடுக் குளம் புனரமைக்கப்பட்டது. குளத்தை அண்டி மக்களைக் குடியேற்ற அரசு தீர்மானித்தது. அதற்கமைய விவசாய முயற்சியில் ஆர்வமும்,…
சற்றுமுன்னர் விடுதலையானார் கம்மன்பில
ஆவண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவணி எம்.பி. யான உதய கம்மன்பில சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் பங்குகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில், விசேட பொலிஸ் விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்ட உதய கம்மன்பிலவை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சி!
இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் யாழ் குடா தீவுப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக உதைபந்தாட்ட பயிற்சியொன்று அண்மையில் (25) நடாத்தப்பட்டது. இச்செயற்றிட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்தர விஜேகுணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி உதைபந்தாட்ட பயிற்சியின் ஒரு கட்டமாக அண்மையில் (27) மண்டை தீவில் அமைந்துள்ள வெலுசுமன கடற்படை முகாமில் நயினாதீவு மற்றும் மண்டை தீவு அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டி நடைபெற்றது. மேற்படி போட்டிகளின் மூலம் தேசிய மட்டத்தில்…
வடக்கில் 700 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியேற்றும் அரசின் செயற்றிட்டங்களுக்கு அமைய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 701.3 ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காங்கேசன்துறையில் இடம்பெற்ற தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குறே மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 201.3 ஏக்கர் காணிகளை…
