News
1990க்கு அழையுங்கள்
முழுமையான வசதிகளுடன் அவசர அம்புலன்ஸ் சேவைக்கான தொடர்பை ஏற்படுத்துவதற்காக, 1990 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தச் சேவையை, இலவசமாகவே முன்னெடுக்கப்பதற்கு அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அறியமுடிகின்றது. அந்த அம்புலன்ஸ் சேவையை சுகாதார அமைச்சுடன் இணைந்து, இந்தியாவின் Vk.Emri என்ற நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.
வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக ‘பிரேரணை கொண்டுவருவேன்’
‘இனங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான தடைச் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் விரைவில் தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவருவேன்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ‘பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதத்திலான வெறுப்புக் கருத்துகளை, மஹியங்கனையில் வைத்துத் தெரிவித்திருந்தார். இது, கண்டிக்கத்தக்கதாகும்’ என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். இந்த…
புதிய ஆளுநர் எந்த நேரத்திலும் நியமிக்கப்படலாம்
மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்குத் தகுதியான ஒருவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆறு வருட காலப்பகுதிக்குள் எந்த நேரத்திலும் நியமிப்பார் என்று பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நேற்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். tm
3 ஆம் திகதி ஸ்தம்பிக்கும்
-சத்துரங்க பிரதீப் – நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் பஸ்கள், ஞாயிற்றுக்கிழமை (03) அன்று இரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரியன்ஜித், நேற்று வியாழக்கிழமை (30) அறிவித்தார். ‘தங்களுடைய கோரிக்கைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தராமையின் காரணத்தினாலேயே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி, பெண்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்…
மத்திய வங்கி ஆளுநர் இலங்கையராக இருத்தல் வேண்டும் : மஹிந்த
மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவுசெய்யப்படும் போது அவர் முதலில் இலங்கையராக இருக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். பெபிலியான சுனத்ரா தேவி பிரிவெனாவில் சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மத்திய வங்கி ஆளுநரை தெரிவு செய்யும்போது, மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறுவதுடன், அவர்கள் யாரை மத்திய வங்கி ஆளுநராக ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களை மாத்திரமே மத்திய வங்கி…
நல்லாட்சிக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை!
அரச வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையில் வைத்தியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் மற்றும் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியின் மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதி வழங்குவதற்கு முயற்சித்தல், வெளிநாட்டு பயிற்சிகளை முடித்து வரும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை வழங்காமை உள்ளிட்ட…
கோப் குழுவுடன் விஷேட சந்திப்பு
கோப் குழுவுடன் விஷேட சந்திப்பு ஒன்று எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை பத்திரங்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகை சம்பந்தமாக, தான் வழங்கிய சுயாதீனமான அறிக்கை தொடர்பாகவும் கோப் குழுவுடன் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவு!
பதவிக்காலம் முடிவடைந்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார். மேலும்,உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் வரை அவற்றின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை குறிப்பிடத்தக்கது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தெவரப்பெரும!
மீகஸ்தென்ன பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உண்ணாவிரதம் இருந்து வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும திடீரென நேற்று பகல் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இவரை காப்பாற்றிய பொதுமக்கள் இவரை உடனடியாக நாகொட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்துடன், பிரதி அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இவர் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பிரதி…
ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அத்துமீறிவிட்டன. ஜனாதிபதிக்கு றிஷாத் கடிதம்!
-சுஐப் எம் காசிம்- பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதமொன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆட்சியில் அழுத்கம, பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் ஞானசார தேரரே மூல காரணமென ஆதாரங்களுடன் பொலிசாரிடம்…
தற்போதய அரசில் கல்வி அபிவிருத்திக்காக பெருமளவு நிதி!
தற்போதய அரசாங்கத்தில் கல்வி அபிவிருத்திக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 83 பில்லியன் ரூபாக்களை கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கியிருக்கின்றமையானது பாடசாலை, கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கியிருப்பது இலங்கையின் வரலாற்றிலே இதுவே முதல் தடவையாகும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன் இன்று வியாழக்கிழமை (30) காலை மட்டக்களப்பிலுள்ள அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு வருகை தந்து அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டதுடன் கலாசாலை முதல்வர் மற்றும் கல்வியியலாளர்கள் ஆசிரிய பயிலுனர்களுடனும்…
ஆட்டுக்கொட்டிலில் தீ பரவியதில் 47 ஆடுகள் இறந்துள்ளன
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை (ஜுன் 29, 2016) ஆட்டுக் கொட்டில் தீப்பற்றி எரிந்ததில் அந்தக் கொட்டிலில் அடைக்கப்பட்ட ஆடுகளில் சுமார் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து மடிந்துள்ளதாக அதன் உரிமையாளரான கந்தப்போடி விஸ்வநாதன் (வயது 38) தெரிவித்தார். மொத்தமாக தன்னிடமிருந்த 56 ஆடுகளில் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து போக மீதமாக 9 ஆடுகளே தீக்காயங்களுக்கு உட்பட்டு எஞ்சியிருப்பதாகவும் அவர் மேலும்…
