News
வாக்குமூலம் வழங்க வந்தார் சத்தாதிஸ்ஸ தேரர்
சொந்த தேவைகளுக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் 7 அரச வாகனங்களை பெற்றுகொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று (13) காலை வருகை தந்துள்ளார்.
றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களும், நெசவுத்தொழிலில் ஈடுபடுவோரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் வகையில் அவர்களை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமைச்சரவையின் உபகுழுக் கூட்டம் இன்று காலை (12/07/2016) நடைபெற்றபோது அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹகீம், தயாகமகே ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றே, இந்த சந்திப்பை அவர் நடத்தவுள்ளார். இந்த மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை அமைச்சர்கள், நிதி அமைச்சர் ரவியிடம் எடுத்துரைத்தனர்….
இந்தியாவின் நடைமுறையைப் பின்பற்றி ஆகக்கூடிய சில்லறை விலை
-சுஐப் எம் காசிம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று மாலை தெரிவித்தார். “வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை” விளக்கும் செய்தியாளர் மாநாடு நிதியமைச்சில் இடம்பெற்ற போது பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிஸன், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…
சிறுவனை தூக்கி, பறந்துசெல்ல முயன்ற கழுகு (படங்கள்)
மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர் ஸ்தம்பித்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்தவர்கள் அந்த பறவை, அச்சிறுவனை ஒரு சிறிய விலங்கைப் போல தூக்கிச் செல்ல…
தென்கிழக்குப் பல்கலை பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
-கலாபூசணம் – மீரா.எஸ்.இஸ்ஸடீன் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 96/97 கல்வி ஆண்டில் கல்வி கற்று 2002ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலை,கலாசார பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களின் குடும்பத்துடனான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 2016.07.16ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00மணி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில்; பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க உத்தியோக பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற உள்ளது. இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப்…
பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை
கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,134 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் அனைத்துப் பிரச்சினைகளையும், தேவைகளையும் ஒரே…
தலைமன்னார் கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானில் அணு மின்நிலைய அலகுகளை மூடும் அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ஜப்பான் நாட்டில் மேற்கு பகுதியான கன்சாய் மாகாணத்தில் இயங்கிவந்த டகாஹாமா அணு மின்சார உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு அலகுகளை மூடும்படி உத்தரவிட்ட அரசின் முடிவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மனசாட்சியுடன் செயற்படுவதன் மூலம் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம்!
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் தமது மனசாட்சிக்கு ஏற்ப உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுவதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்காக சிறந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். காலம்சென்ற முன்னால் கலாசார பிரதியமைச்சரும் அகில இலங்கை சிங்கள கவிதைகள் சம்மேளனத்தின் மூலகர்த்தாவுமான சோமவீர சந்திரசிறி அவர்களின் 45 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று (11) பிற்பகல் கெஸ்பேவ நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்…
நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் காற்றுடன் மழை?
நாட்டைச்சூழவுள்ள பிரதேசங்களில் இன்று(12) கடும் காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு அதிகமாக காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதுடன் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் காற்றின் தாழமுக்கம் நாளையுடன்(13) குறைவடையலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக…
பொதுமன்னிப்பு காலத்தில் 14000 இராணுவ வீரர்கள் சட்டபூர்வமாக விலகல்
பொதுமன்னிப்பு காலவேளையின் போது முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 14000 படைவீரர்கள் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து நீங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேவையை கைவிட்டு தப்பிச் சென்ற முப்படையினர் மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நாளை(13) யுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய நேற்று முந்தினம் (11) ஆம் திகதி வரையில் 12,347 இராணுவ வீரர்களும், 544 விமானப்படை வீரர்களும் 756 கடற்படை வீரர்களும் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்…
கல்வி நிர்வாக சேவைக்குள் ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை
இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. சேவை அனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இல் நிலவும் பொது மற்றும் விசேட சேவை பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை நேற்று முந்தினம் 10 ஆம் திகதி…
