News
கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம்
– எம்.ஐ.அப்துல் நஸார் -விடிவெள்ளி புனித கஃபாவுக்கு நேராக நாளை வெள்ளிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாண்டின் இரண்டாவதும் இறுதியானதுமான சந்தர்ப்பமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று புனித கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக ஜித்தாவிலுள்ள வானியல் சங்கம் தெரிவித்தள்ளது. இது லுஹர் தொழுகைக்கான அதான் இடம் பெற்றதன் பின்னர் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.27 இற்கு நிகழவுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் மஜீட் அபூ ஸாஹிர்…
15 பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு
-சுஐப் எம்.காசிம் – 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாடு விலைகளை அமைச்சர் றிசாத் இன்று காலை (14/07/2016) அறிவித்தார். அமைச்சில் இடம்பெற்ற அருங்கலைகள் பேரவையின் நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார். இந்தப் பொருட்களுக்கான விலைகள் இன்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 01. மைசூர் பருப்பு ரூபா. 169 02. நெத்தலி (தாய்) நெத்தலி (துபாய்) ரூபா. 495 ரூபா. 410 03. கடலை ரூபா. 260 04….
பதிவு செய்யப்படாத தொலைபேசி வர்த்தக நிலையங்களை சுற்றிவளைப்பு
பதிவு செய்யப்படாமல் உள்ள கைத்தொலைபேசி மற்றும் தொலைபேசி உபகரணங்கள் விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாதத்தின் இறுதியில் நாடளாவிய ரீதியில் குறித்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த வர்த்தக நிலையங்களை பதிவு செய்வதற்கு 3 மாதம் கால எல்லை வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல வர்த்தக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை பதிவு…
வலுவான ஆதரவை, அமெரிக்கா வழங்கும் – ரணிலிடம் நிஷா
சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சுக்கள்…
5 மாணவர்களும் உயிருடனுள்ளனர் – வைபரில் செய்தி வந்ததாக பெற்றோர் தெரிவிப்பு
-எம்.எப்.எம்.பஸீர் – கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக தாம் இந்த செய்தியை அறிந்துகொண்டதாக கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திடம் தெரிவித்தார். ஐந்து மாணவர்…
வற் வரி தொடர்பில் 20 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள்
ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் 20 ஆம் திகதி வற்வரி தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார்கள். இதன்போது அவ் வரியில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி அறவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காக விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு…
நிஷா பிஷ்வாலிடம் றிசாத் வலியுறுத்து
-சுஐப் எம்.காசிம் – இனப் பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும், இதன் மூலமே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலி நவ்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். யுத்த முடிவுக்குப் பின்னர் இலங்கையின்…
முஸ்லிம்கள் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாகும் – ரண்முத்தகல சங்கரத்ன தேரர்
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் (12.07.2016 செவ்வாய்கிழமை) அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல்(பிலால் ஹாஹி) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஒற்றுமைக்கான நோன்பு பொருநாள் இரவு நேர ஒன்று கூடல் மற்றும் இராப்போசன நிகழ்வு மட்டக்களப்பு ரெஸ்ட்-இன் ஹோட்டலில் இடம் பெற்றது. மதத் தலைவர்களை மதிக்கின்ற தன்மை மனிதர்களிடையே உருவாக வேண்டும் என கல்முனை சுபாத்ரா ராம விகாராதி பதி ரண்முத்தகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.; மத்தலைவர்கள் மூலம்தான் அந்தந்த இனத்தவர் தங்கள் மத விடயங்களை…
நிஷா பிஷ்வால் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய தெற்காசிய பிராந்தியங்களுக்கான, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்களை, செயற்பாட்டுக்குழுவினர் நேற்று (13) மதிய போசனத்தின் போது சந்தித்து உரையாடினர். இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு கைலாகு கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ராம்குமார் ஆஜர்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் 14ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
12 மீனவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை
-ரஸீன் ரஸ்மின் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்திலுள்ள சிறுகடலில் தடை செய்யப்பட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களை இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
தாஜூடின் கொலை வழக்கு : சீ.சி.டி.வி ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்பிப்பு!
பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கிடைக்கப் பெற்ற சீ.சி.டி.வி( CCTV) ஆதாரங்களில் இருந்து 10 டி.வி.டிகள் (DVD) மற்றும் சி.டி(CD) பிரதிகள் கொழும்பு மேலதிக நீதவானிடம் பொலிஸார் நேற்று கையளித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி நாரஹென்பிட்டிய சந்தியில் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து இந்த சீ.சி.டி.வி (CCTV) ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் சீ.சி.டி.வி( CCTV) பிரிவிற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி டி.ஜி.கம்லத்திடம் இதற்கான மூல ஆதாரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்…
