News
டேவிட் கேமரூன் நாளை ராஜினாமா!
28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது. அந்த அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருக்கலாமா அல்லது அமைப்பிலிருந்து விலகிவிடலாமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 41.9 சதவீதத்தினரும், எதிராக 51.9 சதவீதத்தினரும் வாக்களித்தனர். இதனால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக போவதாக அறிவித்தார். இதன்படி நாளை…
இன்று முதல் 11% வற் அறவிடப்படும்
‘வற்’ (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி) அதிகரிப்புக்கான தீர்மானத்தைக் கைவிடுமாறு, இடைக்காலத் தடையுத்தரவை உயர்நீதிமன்றம், நேற்றுப் (12 பிறப்பித்தது. மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், வரி அதிகரிப்பைக் கைவிடவேண்டும் என்றும், அவ்வாறு மேற்படி இரண்டு வரிகளும் அதிகரிக்கப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் கட்டளையிட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட இவ்விரு வரி அறவீடுகளும், நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதாக, மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, 11 சதவீதமான வற் அறவிடப்படும்…
அனுர சேனாநாயக்க பிணைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை வழங்குமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் அனுர சேனாநாயக்கவின் பிணை மனுவினை நிராகரித்ததை தொடர்ந்து அதனை மேன்முறையீடு செய்யுமாறு கோரியே குறித்த மனுவினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியொர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை…
நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில்
பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டு சாப்பாடு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்க, சிறைச்சாலை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் இரவு சாப்பாடு சிறைச்சாலையிலேயே வழங்கப்பட்டது. 70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். தனது மகனான நாமல் ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல்…
யோகாசனம் கற்றுக்கொடுக்கும் நாமல்
வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார். இதேவேளை, நாமல் ராஜபக்ஷவை தன்னுடைய தாய், ஷிரந்தி ராஜபக்ஷ, சகோதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்;வையிட்டுள்ளனர். நாமலை பார்த்த தாய், கண்ணீர்விட்டு…
நாட்டை வந்தடைந்தார் மலினோஸ்கி
ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலினோஸ்கி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக, சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தார்.
கணக்கியல் சார்துறையின் பங்களிப்பு அபரிமிதமானது
-சுஐப் எம்.காசிம் – உலகப் பொருளாதார மந்த நிலையில் இருந்து நாடுகளை மீட்டெடுப்பதற்கு முகாமைத்துவ கணக்கியல்சார்துறை பெரும் பங்களித்து இருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றுமாலை தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கணக்காய்வு மாநாடும், ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குப் பதிவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான விருது வழங்கலும் கொழும்பு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், விருதுகளையும் வழங்கிவைத்தார்….
தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு
அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு- 2016 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (11) மாலை கொழும்பு சினமன் )லேக் ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விருதுகளையூம் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைமை வகித்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர்…
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் அடுத்த வருடம் முதல் புதிய வடிவில்!
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டில் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு எல்லோருடையதும் உடனடிக்கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக செய்யப்பட வேண்டிய எல்லா விடயங்களையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் எனக் குறிப்பிட்டார். நேற்று (11) முற்பகல் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது…
மட்டு விமான ஓடுபாதையினை ஜனாதிபதி திறந்து வைத்தார்!
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் இறங்குதுறை ஆகியன நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையில் வந்திறங்கிய முதலாவது விமானத்தில் ஜனாதிபதி, பிரயாணம் செய்தமை விசேட நிகழ்வாகும். இதன் போது ஜனாதிபதிக்கு விமானப்படை அணிவகுப்பு மரியாதை கிடைக்கப்பெற்றதுடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்களவினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையின் நினைவுப் பதாகை ஜனாதிபதியின் கரங்களினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. புதிய…
நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு!
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பங்களாதேஷ்க்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர், அவ் விஜயத்தினை முடித்துக் கொண்டு இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கான இவரது விஜயத்தின் போது இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இவருடன் தெற்காசிய நாடுகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் மன் பிரீட் சிங் ஆனந்தும் வருகை தரவுள்ளார். பங்களாதேஷுக்கான இவரது விஜயத்தில், பங்களாதேஷ் அரசுக்கான அமெரிக்காவின் ஆதரவு, வன்முறைக்கு…
