News
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை அபகரிக்க சதி
தெஹிவளை மிருகக்காட்சி சாலை தொடர்பில் உலகம் முழுவதும் பொய் குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலை இலங்கையிலுள்ள பெண் வர்த்தகர் ஒருவரும், அவரது குழுவினரும் முன்னெடுத்து வருவதாக மிருக வதைக்கு எதிரான சங்கம் தெரிவித்துள்ளது. மிருகக்காட்சி சாலையின் அமைவிடம் பெறுமதியான இடமென்பதால் அதனை அபகரிக்கும் நோக்கில், இங்கு மிருகவதை இடம்பெறுவதாக குறிப்பிட்டு போலியாக தயாரிக்கப்பட்ட ஒளிப்பதிவினையும் குறித்தப் பெண் இணையங்களில் பதிவேற்றி வருவதாகவும் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் சாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பெண்ணுக்கு…
பிரிட்டனின் புதிய அமைச்சரவை
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரசா மே, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை நியமித்துள்ளார். நிதியமைச்சராக பிலிப் மேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா? வேண்டாமா? என்று சமீபத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து நேற்று விலகினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ராணி எலிசபெத், புதிய பிரதமராக தெரசா மேவை…
பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு: மைத்திரி வாழ்த்து!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசாவிற்குவாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது டுவிட்டர் பக்கத்தில்பதிவேற்றம் செய்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய காலகட்டத்தில் இந்த மாற்றம் இடம்பெறுகின்றமையினால் பிரித்தானியாவிற்கு வலிமையை வழங்கும் என்றும் தன்நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனிற்கு பதிலாக நேற்றைய தினம் (13) தெரேசாபதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
புகையிலை உற்பத்திக்கான 90 சதவீத வரி உயர்வு!
புகையிலை பொதியை வெள்ளை நிறத்தில் கவர்ச்சிகரமற்றதாக அமைக்கவும்,புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்தவும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இலவசமாக இரத்த பரிதோதனைகளை செய்து கொள்ளவும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஔடத மருந்து விலை அறிக்கை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக தரமான மருந்துகளை கொள்வனவு செய்யவும், மருந்து…
பாரிய இயந்திர சிலந்தி
பாரிய சிலந்தி உருவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் பிரான்ஸின் நன்டேஸ் நகரில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது. “லா மெசின்” எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தய சிலந்திக்கு குமோ நீ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இராட்சத இயந்திர சிலந்தி வீதியில் செல்வதைப் பார்ப்பதற்கு பல்லா யிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
கண்மூடித்தனமான செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஊடக தர்மம் பாதிக்கப்படுகிறது
அண்மைய காலங்களில் சில ஊடகங்கள் கண்மூடித்தனமாக தவறான செய்திகளை பிரசுரிப்பதன் மூலம் ஊடக தர்மம் மீறப்படுகிறது என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உண்மையான செய்தி மூலங்களை தவிர்த்து, அவற்றினை ஒழுங்காக ஆராயாது ஊடகத்துறையின் ஒழுக்க கோவைகளை மீறி சில கண்மூடித்தனமான செய்தி வெளியீடுகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்தின் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவதில் அண்மைக்காலமாக சில ஊடகங்களினால் சில…
இந்திய ஊடகங்களுக்கு இன்று பேட்டி வழங்கும் ஜாகிர் நாயக்
பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு இன்று -14- ‘ஸ்கைப்’ வழியாக ஸாகிர் நாயக் விளக்கம் அளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்….
மகன்மார் கைது செய்யப்படும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்?
அரசை கவிழ்க்க தெரிந்தால் தனது மகன்மார் கைது செய்யப்படும்வரை ஏன் காத்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (13) மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே இம்ரான் மஹரூப் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசை கவிழ்ப்பதாக கூறிக்கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் மக்கள் முன் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் அமைச்சர்களாக…
மாத்தளையில் டெங்கு அதிகரிப்பு!
மாத்தளைப் பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோர் தொகை நாளாந்தம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகின்றது. மேற்படி டெங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான மாத்தளை பொது வைத்தியசாலை வார்ட் நிரம்பி வழிவதைக் காணக்கூடியதாகவுள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு முறையான படுக்கை வசதியின்றி பாய் விரித்து தரையிலே படுக்க வைத்திருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கிறது. மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து நாளாந்தம் மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டொரு மாதங்களாகவே விட்டுவிட்டு பெய்யும்…
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நிறைவு
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவிற்கு வருகின்றது. எனினும் தற்போது காணமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்ற காரணத்தினால் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இந்நிலையில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள் தெடர்பான அறிக்கையொன்று தயார் செய்யப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை தற்போதுவரை 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறையான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் 4 ஆயிரம் முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர்…
மின்சாரம் தாக்கி பச்சிளம் குழந்தை பலி
வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (13) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற 1 வயதும் 10 மாதமும் ஆன குழந்தையே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த குழந்தையும், அவரது பெற்றோரும் கடந்த வாரம் அளவில் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இவர்கள் வென்னப்புவ பிரதேசத்தின் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று…
