News
சு.கா மாநாடன்று மஹிந்த, இலங்கையில் இல்லை?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியன்று, குருநாகலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினரால் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரும் அவ்வழைப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு, மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன், எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர், இத்தாலி செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அங்கு செல்லும் அவர்கள், எதிர்வரும் 4ஆம் திகதியன்று, இத்தாலியிலுள்ள, சிங்கள…
போலி வீசா மற்றும் கடவுச்சீட்டு தயாரிக்கும் கும்பல் சிக்கியது
போலி வீசாவைப் பயன்படுத்தி ஆட்களை கனடாவுக்கு அனுப்ப தயாராக இருந்த சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கர விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 200க்கும் அதிகமான போலி கடவுச்சீட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அந்த கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு நபரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை ஆகிய பகுதில்…
புதிய நாட்டுடன் ஒரே பயணம்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாமாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள், இன்று வெள்ளிக்கிழமை (19), மாத்தறையில் நடைபெறவவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில், ‘புதிய நாட்டுடன் ஒரே பயணம்’ என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. தேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி உள்ளார். கடந்த அரசாங்கத்தில் அரச பொறியிலாலளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
பதவி விலகுவதாக டலஸ் அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். vk
துறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் விழும் – JVP
அரசாங்கத்தினால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாடு அதல பாதாளத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் நிலவுகின்றன. எனவே இது தொடர்பான பூரணமான அறிக்கையொன்று எதிர்வரும் வாரம் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர்…
சப்ரகமுவ பல்கலையில் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள்.!
சப்ரகமுவ பல்கலைக்கத்தினுள் மாணவ நலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அதன் பொது மாணவ சங்க அமைப்பின் தலைவர் சமீர கப்புவத்த தெரிவித்துள்ளார். மாணவர் விடுதி, பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்கப்படல், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் அங்கு நிலவுவதாக மாணவ சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு குரல்கொடுக்கும் மாணவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளும் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை!
காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக் கல்லூரியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், காணாமல் போன பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் காணாமல் போனோர் அலுவலகம் விசாரணை நடத்தும். எதிர்காலத்தில் ஓர் அங்கமாக மனித உரிமைகளை கருதி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த அலுவலகத்தின் அனைத்து பணிகளும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு…
தேசிய அரசாங்கத்தின் முதலாமாண்டு நிறைவு!
இலங்கையின் சமகால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும். புதிய நாடு, புதிய பயணம் மற்றும் ஐந்து வருடங்களுக்கான பயணத்திற்கு முதலாண்டு நினைவாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளனர். சமகால அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சலுகைகள், உரிமைகள் போன்றவற்றை வெளிக்காண்பிக்கும்…
கிராம உத்தியோகத்தர் தேர்வு போட்டி பரீட்சை அடுத்த மாதம்
கிராம உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 858 மத்திய நிலையங்கள் ஊடாக இந்தப் போட்டி பரீட்சை நடைபெறவுள்ளதோடு இதில் 109021 பேர் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது இதற்கான அனுமதியட்டைகள் தபால் மூலம் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.என்.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்பாக அனுமதியட்டைகள் கிடைக்காதவர்கள் 1911 அல்லது 0112 785230, 0112…
மோடி எல்லை மீறிவிட்டார்: பாகிஸ்தான்
பலுசிஸ்தானில் ‘பலூச் தேசிய இயக்கம்’ என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர். மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்றுள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்கு முறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்நிலையில் பலுசிஸ்தான் பற்றிய மோடியின் பேச்சு எல்லையை மீறயது என்றும் நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் கடுமையான முறையில் எழுப்புவோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது….
200 மீட்டர் ஓட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றார், உசேன் போல்ட்
ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில்…
