News
மக்கள் காங்கிரஸின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு இறுதிக்கட்டத்தில்
-சுஐப் எம்.காசிம் – அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் நேற்று மாலை (29/08/2016) கொழும்பில் கூடி, தீர்க்கமாக ஆராய்ந்து இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு, அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து காத்திரமான முடிவுகளை மேற்கொண்டனர். கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து பெற்ற தகவல்கள்,…
மனைவியின் சடலத்துடன் பஸ்ஸிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன்
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்த மனைவி யின் சடலத்துடன் நபரொருவர் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல் நலக் குறைவால் பிறந்து 5 நாட்களேயான குழந்தை மற்றும் தாய் சனியா பாயுடன் தனியார் பஸ் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார். மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர் பஸ்ஸில் செல்லும்…
இந்தோனேசியாவில் உலகிலேயே வயதான மனிதர்: 145 வயது என ஆவணங்களில் தகவல்
இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145. இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் வசிக்கிறார். ஆவணங்களின்படி அவரது பிறந்த தேதி 1870-ம் ஆண்டு, டிசம்பர் 31 ஆகும். இது உண்மையானால், உலகிலேயே வயதான நபர் என்ற பெயரை மபஹ் தட்டிச்செல்கிறார். உலகளவில் பிரான்சை சேர்ந்த ஜென்னி கால்மென்ட்தான் வயதான நபர் என கூறப்பட்டு வந்தது. இவருக்கு வயது 122. மபஹ்,…
மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!
கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சிறப்பாகச் சித்தியெய்திய 12 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்குவதென சிங்கர் நிறுவனம் தெரிவித்தி ருந்தது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கணனிகளை வழங்கிவைத்தார். இலங்கை மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதே தமது நோக்கம் என்று கூறிய சிங்கர் நிறுவன அதிகாரிகள், போட்டிகள் நிறைந்த இன்றைய நிலையில் இந்தக் கணனிகள் மாணவா்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று…
தனித்து போட்டி – சவால் விடுத்த நாணயக்கார
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் விரைவான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இதுவரையில் தெளிவு படுத்தப்படவில்லை என்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்ப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவ்வளவு அவசரமாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணம் என்னவென அவர் கேள்வியெழுப்பினார். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த சட்ட மூலமானது முன்கூட்டியே விவாதித்துள்ளதுடன் சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அவசியத்தை அரசாங்கம் வெளிப்படுத்த…
வெளிநாடு போக அனுமதிவேண்டும்: தம்மாலோக்க தேரர்
வெளிநாட்டுக்கு சென்றுவருவதற்கு அனுமதியளிக்குமாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரர், சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொல்ஹேன்கொட எலன்மெதிணியாராமவில், சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர், சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும், வெளிநாட்டுக்கு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார். இதுதொடர்பில், அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
சுதந்திரம் பறிபோய்விட்டது – மஹிந்த
நாட்டுக்குள் நிலைகொண்டிருந்த சுதந்திரம், படிப்படியாக வரையறுக்கப்பட்டு வருகின்றது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். திம்புலாகல தேரர் தொடர்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘நாடாளுமன்றத்துக்குள்ளும், சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், பெயர் மற்றும் ஊர்கள் குறிப்பிடப்பட்டு, நேரடியாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் அழைக்கப்பட்டு, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன’ என்றும் குறிப்பிட்டார். அத்துடன், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையே, நல்லாட்சி அரசாங்கம் திறந்து வைத்து வருகின்றது…
சர்ச்சைக்குரிய மும்மன்ன பிரதேசத்திற்கு அமைச்சர் றிஷாத் விஜயம்!
-சுஐப் எம் காசிம் – மும்மன்ன பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் (27) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்தும் சிங்கள -முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பரஸ்பர நம்பிக்கையீனங்கள் தொடர்பிலும் உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார். மும்மன்ன ஜும்மா பள்ளிவாசலில் ஊர்பபொதுமக்களை சந்தித்து அவர்களின் மனக்குறைகளை அவர் அறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் பங்கேற்ற பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், பாடசாலை அதிபர், சமூக நல இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் மைதான பிரச்சினையின் பின்னர் இந்த ஊரில்…
உயர்தர விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என். ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் 6 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் மேலும் அவற்றுடன் மேலும் சில பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா…
கொழும்பில் முஸ்லிம்கள் பேரணி
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்கியிருக்கும் போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலான அமைதிப் பேரணியொன்று ஐ.நா.காரியாலயத்தின் முன்பாக நடாத்தப்படவுள்ளது. வடக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவது போன்று கிழக்கிற்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கேட்டறிய வேண்டும் என அமைதிப்பேரணியில் வலியறுத்தப்படவுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தை கிழக்கிற்கும் அழைத்துச்…
மஸ்கெலியாவில் பிரதமர் ரணில்
மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள்ளும் நிகழ்வு 28.08.2016 அன்று அட்டன் நகரில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க இதில் கலந்துகொண்டார். இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.கவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார். அட்டன் விஜிதா திரையரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், இராஐhங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…
மாலபே கல்லூரி விவகாரம் குறித்த போராட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை – கெமுனு
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாலபே தனியார் பல்கலைக்கழக பெற்றோர் அமைப்பின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிராக 6 மருத்துவ பீட மாணவர்கள் சத்தியாகிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் குறித்த மாணவர்களின் பெற்றோர்களும் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
