News
புதுச் சட்டம் வரும்
‘ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 வயது சிறுவன், கல்வியில் திறமைசாலியாவார். அவருக்கு, புலமைபரிசில் பெற்றுக்கொடுக்க எமது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்க்கின்றோம்’ என தொலைதொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ‘குற்றவியல் சட்டத்துக்கு அமைவாக இணைய குற்றங்களுக்கு (சைபர் கிரைம்) தண்டனை வழங்க புதியச் சட்டத்தை கொண்டு வரவுள்ளோம்’ என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சிறிகொத்தவில் நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
வடக்கின் கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்கு ஜப்பான் உதவி
ஜப்பானின் கீழ்மட்ட மனித பாதுகாப்பு திட்டத்துக்கான நன்கொடை உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், இலங்கையின் வட பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்துக்கு, 86,399,929 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணிவெடி அகற்றும் திட்டமானது ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகநுமா மற்றும் ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு முகாமையாளர் ரொபட் சைபிரட் ஆகியோருக்கடையே, கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவராலயத்தில் நேற்று வியாழக்கிழமை (01), இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை…
‘இலங்கையே உதாரணம்’
‘வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கு ஐக்கிய அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து உருவாக்கிய செயற்றிட்டங்களை இரு நாட்டு அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பிரதிநிதித்துவத்தின் சார்பில் வர்த்தக மற்றும் முதலீட்டு அனுசரணை ஒப்பந்த உள்ளகக் கலந்துரையாடல் அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ‘எமது இந்த பரஸ்பர நோக்கானது இரு நாடுகளுக்கிடையே வெறுமனே பொருளாதார உறவை மட்டும் வலுப்படுத்தவதாக…
எமது சேவைகள் அம்பாறையில் தொடரும் – அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – விளையாட்டாக கல்லெறிந்தாலும் அல்லது விளையாட்டு அமைச்சர் கல்லெறிந்தாலும் எமது சேவைகளை அம்பாறையில் தொடரும். ஒரு அரசியல் கலகம் என்ன வேலையை செய்ய வேண்டுமோ அந்த வேலையை இந்த சமூகத்திற்காக எமது கட்சியும்,அதன் தலைமையும் கனகச்சிதமாய் செய்து வருகின்றது. அந்த விடயத்தில் நாங்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஎஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கல்முனைத் தொகுதியின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் தலைமையில் கல்முனையில்…
ஷகீப்பின் நாக்கு தொங்கியது!
வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள், அவரை மாவனெல்ல பகுதிக்கு அழைத்துச் சென்று, கப்பம் கேட்பதற்காக சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது. அதனையடுத்தே அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்ற விடயத்தை, கடத்தல்காரர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி – கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு…
12 ஆம் திகதி ஹஜ் பெருநாள்!
புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முஸ்லிம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் தகிதி அறபா தினம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமையே பிறை பார்க்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Hajj is an annual piligrimage to Mecca for millions of Muslims from all over the world. In 2016, Hajj, one of the world’s largest gatherings,…
சுலைமான் கொலை – மேலும் ஐவர் கைது
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று மேலும் ஐவர் கைது…
கூட்டு அரசாங்கமே சிறந்தது!
கூட்டு அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இன்று கூட்டாக இணைந்து ஆட்சி நடத்தும் தரப்பினர், நாட்டை அபிவிருத்தி செய்ததன் பின்னர் பிரிந்து சென்றால் பிரச்சினையில்லை. ஏழு கூட்டுக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் அமைத்த காலங்களும்…
கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய தென்னாபிரிக்க விமானம்!
சீனா நோக்கி பயணித்த தென்னாபிரிக்க விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா பயணித்த விசேட விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா நோக்கி பயணித்த நிலையில், விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் போது விமானத்தில் இருந்து…
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவர்கள் பிணையில் விடுதலை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தை ஹேக் செய்த இரு இளைஞர்களையும் பிணையில் விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தை ஹேக் செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களில் 17 வயது மாணவரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டிலும், 27 வயதான இளைஞரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை நான்கும், 25 000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும்…
குருணாகலில் கோர விபத்து!
குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு: வேனில் பிரசவமான கொடூரம்!
ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், அவருக்கு தனியார் வேனில் பிரசவமாகியுள்ள சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராயகாடா மாவட்டம் பலக்கமனா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து சுனிதாவின் கணவர் ஆம்புலன்ஸ் சேவையான 102க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவசர ஆம்புலன்ஸ் சேவையான 106க்கும் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்பு கொண்டு ஒரு மணிநேரத்திற்கு மேலாகிவிட்டதால், குடும்பத்தினர் உதவியுடன் சுனிதாவை சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் கணவர். பாதி வழியில் பிரசவ…
