News
பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு
பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு நான்கு மாதங்களில் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பிரதமர்…
அமைச்சர் றிஷாத்தை வீழ்த்த சதி!
முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது அவர்களது அரசியல் இருப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயாகுமென்று மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார். அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருவதை உணர்ந்துள்ள மு கா தலைவர் ஹக்கீம் அம்பாறை அரசியல்வாதிகளை பகடைக்காயாக பயன்படுத்தி அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான ஊடகவியலாளர் மாநாடுகளை…
ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம்
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 71வது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இதற்காக ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்ட அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான மஹிந்த சமரவீர, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட பலர் இடம்பெறவுள்ளனர். ஐக்கிய நாடுகள்…
கட்டுநாயக்கா விமானநிலையம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின்…
எவன்கார்ட் ; இறுதி விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
எவன்கார்ட் விவாகரம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 5 திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காலி நீதவான் நிலுபுலி லங்காபுர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்துள்ளார். மேலும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த…
திவிநெகும பரீட்சை நடத்துவதில் சிக்கல்
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. குறித்த பரீட்சைக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சைக்கு தோற்ற வாயப்பு வழங்கப்படாதவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று திவிநெகும திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் பரீட்சையை நடத்தும்…
ஹெலியை வீடியோ செய்தவர் கைது
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய அலை பேசியில் வீடியோ செய்த்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த ஹெலி, பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில், நேற்று தரையிறங்கிய போதே, வெள்ளவத்தையில் தங்கியிருந்து தொழில் புரியும் 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அழைப்புக் கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை
அலைபேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்குமாறு சோஷலிச இளைஞர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் காரணமாக அழைப்பு மற்றும் இணைய தரவுக் கட்டணம் என்பன 100க்கு 50 சதவீதமளவில் அதிகரிக்கப்படும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணங்களுக்கு இவ்வாறு வரி அதிகரிப்பது நாட்டிளுள்ள இளைய சமூதாயத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாரதூரமான விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே மீதான பிடி வாரன்ட்டை ஸ்வீடன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 2010-ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக ஜுலியன் அசாஞ்சே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார் லண்டனில் தங்கியுள்ள அசாஞ்சே-வுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த பிடி வாரன்ட்டை ரத்து…
பலுசிஸ்தான் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இந்தியா முடிவு?
பாகிஸ்தானில் இருந்து விடுதலை கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான் தலைவர்களுக்கு அரசியல் புகலிடம் அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தான் தலைவர்கள் முறைப்படி அரசியல் புகலிடம் கேட்டு விண்ணப்பித்தால் ஒரு சில வாரங்களில் அவர்களுக்கு முறைப்படி புகலிடம் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. பலுசிஸ்தானின் முதன்மை தலைவராக விளங்கும் பிரமாகத் புக்டி, இந்த முடிவை வரலாற்று சிறப்பு மிக்கது என்று வரவேற்றுள்ளார். கடைசியாக கடந்த 1959 ஆம் ஆண்டு தலாய் லாமாவிற்கு இந்தியா…
துருக்கி நாட்டில் இங்கிலாந்து, ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி: 4 பேர் கைது
துருக்கி நாட்டில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி தூதரகங்களுக்கு எதிராக சதி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் அவர்களுக்கும், எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இல்லை என துருக்கி அரசின் ‘அனடோலு ஏஜென்சி’ கூறுகிறது. அந்த தூதரகங்களுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான உளவு தகவலை அடுத்தே போலீசார் நடவடிக்கையில் இறங்கியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் அங்காராவிலும், ஒருவர் இஸ்தான்புல் நகரிலும் கைதாகினர். இதற்கிடையே அங்காராவில் உள்ள…
அமைச்சர் றிஷாத் அன்று தடுத்தார் பைசால் காசீம் இன்று நன்றி மறந்தார்
-ஏ.எச்.எம்.பூமுதீன் – 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முஸ்லிம் எம்பிக்களுக்கும் – அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்களின் மாவட்ட தொகுதிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு வழங்கும் அடிப்படையில் தான் இச்சந்திப்பு இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்த போது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதிக்கு பொறுப்பான எம்பியான தற்போதைய சுகாதார பிரதியமைச்சரான iபாசல் காசீம், தமது பொத்துவில் சுற்றுலா பிரச்சினை குறித்து…
