News
பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்!- ராம்குமாரின் வக்கீல் வருத்தம்
ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். ஜாமீன் கிடைத்த பின்னர் கொலையில் உள்ள முக்கியத்தடயங்களை வெளியே சொல்வதாக சொன்னார். அதற்குள் அவரை கொன்று விட்டனர் என்றும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின் கம்பியை கடித்து அவர்…
புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு
தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாகஇலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச் சீட்டுகளை வழங்கவும், மற்றைய இயந்திரம் பயணிகள் தாமாகவே பணத்தினைசெலுத்தி அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்….
ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு
ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலையம் சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில், விஷேட அதிதிகளான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (18/09/2016) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதிகளாக எம்.பிக்களான சுமந்திரன், சித்தார்த்தன், டாக்ட ர். சிவமோகன், மஸ்தான், டக்லஸ் தேவானந்தா, சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா…
13வருடங்கள் குழந்தைப் பாக்கியமின்றி தவித்த இஸாம் ராகிபிற்கு 03 அழகிய குழந்தைகள்
பதிமூன்று வருடங்கள் குழந்தைப் பாக்கியமின்றி தவித்த இஸாம் ராகிப் என்ற காஸாவைச் சேர்ந்த இவருக்கு அல்லாஹ் ஒரே பிரசவத்தில் மூன்று அழகிய குழந்தைகளை வழங்கியுள்ளான். அல்லாஹ்வின் அருளிலிருந்து ஒரு போதும் நிராசை அடைந்து விடாதீர்கள்.
இலங்கையின் நிதித்துறையை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் மேலும் உதவி
சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மூன்று வருட திட்டத்தின் செயற்பாடுகள்தொடர்பில் நிதியத்தின் உயர் மட்ட பிரநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் நாட்டிள் நிதித்துறையை வலுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் ஓத்துழைப்பு வழங்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின்பிரநிதிகள் உறுதி தெரிவித்துள்ளனர். 150 கோடி அமெரிக்க டொலர்கள செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது நிதியத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் நாடு வளம் பெறுகிறது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கானவேலைத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உலகின் பொருளாதார சுற்றாடல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட இலங்கையினால் பொருளாதார இலக்குகள் பலவற்றை பூர்த்திசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வெனிசுவெலாவில் 18 ஆம் திகதி நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தவிடயங்;களை குறிப்பிட்டார். இறைமைஒற்றுமை சமாதானம் ஆகியவற்றின் ஊடாக அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில்அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில்…
இலங்கையில் அடுத்த – நீல பச்சை சகாப்த மாநாடு கொழும்பில் நடைபெற ஏற்பாடு
கடல்வளம் குறித்து ஆய்வொன்றை முன்னெடுத்து 2018ஆம் ஆண்டளவில் பாரிய அளவிலான கடல் தொழில் தகவல்கட்டமைப்பு தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த – நீல பச்சை சகாப்த மாநாடு ( ‘ Sri Lanka NEXT – Blue Green Era conference’) என்ற தலைப்பில்மாகாநாடொன்றை நடத்துவதற்கானஎ ஏற்பாடுகளையும் இலங்கை மேற்கொணடுவருவதாகவும் அமைச்சர் கூறினார். எங்கள் சமுத்திர மாநாடு 2016 என்ற மாநாட்டில் உலையாற்றுகையிலேயே அமைச்சர் மங்கள…
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு : மேலும் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வழக்கில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் நுகேகொடை பிரதேசத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், துமிந்த சில்வாவின் தலையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, நீதிமன்ற நடவடிக்கைகளை…
போலி கச்சேரியை சுற்றிவளைப்பு
மாத்தறை கொப்பராவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்திவரப்பட்டபோலி கச்சேரியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவரும் கைதசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் மாத்தறை பிரதேசத்ததைச் சேர்ந்த 41 வயதாகனவர் என தெரிவிக்கப்படுகின்றது. சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது குறித்த இடத்திலிருந்து போது அடையாள அட்டைகள், பிறப்புச்சான்றிதல்கள் , அரச நிறுவனங்களின் முத்திரைகள் மற்றும் இதற்காக பயன்படுத்தப்பட்டகணினி என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நியுயோர்க்கில் பாரிய வெடிப்பு: 25 பேர் காயம்
ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு ஆபத்தானதாய் அமையவில்லை என நியுயோர்க் நகர தீயணைப்புத் திணைகளம் தெரிவித்துள்ளது. வெடிப்புக்கான காரணம் தெளிவில்லாதபோதும், குப்பைக்கூடையிலிருந்தே வெடிப்பு நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத…
ஹிலாரியின் பாதுகாவலர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. இதில் 51.44 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதவாகியுள்ளதாக விசேட பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
