News
தமிழ்,முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்
-சுஐப் எம் காசிம் வடக்கு முஸ்லிம்கள் கடந்த காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து தமது தாயகத்தில் மீளக்குடியேறி வாழத்தலைப்படும் போது இனவாத சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் அதனைக்குழப்பி மீண்டும் துளிர் விடுகின்ற தமிழ்,முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைப்பதே அவர்களின் உள்நோக்கமாகும் என்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறினார் மன்னார் உப்புக்குளத்தில் அல்பதாஹ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்ற அமைச்சர் றிஸாட் …
கல்ஹின்னை சம்பவம் இனவாதமல்ல!
-விடிவெள்ளி ARA.Fareel- கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவம் இனவாத செயலல்ல. மது போதையில் இருந்தவராலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுவொரு சிறிய விடயம் இதனை பெரிது படுத்த வேண்டாம். பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறார்கள் என அங்கும்புர இஹலமுல்ல பன்சலையின் இஹலமுல்ல சுகுன குணவன்ச தேரர் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சரிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹலீம் “கல்ஹின்னை சம்பவத்தினையடுத்து சிலர் இனவாதத்தைத்தூண்ட முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது….
ஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது
மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில்; மறைந்திருந்த ஒருவரை திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்கச்சங்கிலியைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திருகோணமலை, முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த…
வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இலங்கையில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வேலையற்றோர் வீதம் 4.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளி விபரவியல் மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவைத் துறையில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும். முதல் காலாண்டு இறுதியில் நாட்டின் பணிகளில் ஈடுபட்டு வருவோரின் மொத்த எண்ணிக்கை 7,969,000 ஆகும். இந்தக் காலப் பகுதியில் சேவைத் துறையில் புதிதாக 155,638 பேர் பணிகளில் இணைந்து கொண்டுள்ளதுடன், கைத்தொழில் துறையில் 72,273 பேர்பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர். முதல்…
கால அவகாசம் தேவை – அமைச்சர் செனவிரத்ன
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க திணைக்கள அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என அமைச்சர் W.D.J.செனவிரத்ன தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் குறித்த அதிகாரிகளுடன் அமைச்சர் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தன்னால் இயன்றதை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், எனினும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் மிகவும் நிதானமாக குறித்த விடயங்களுக்கு தீர்வைப் பெற வேண்டும்’ எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அதன் அறிக்கையினை அமைச்சரவையில் சமர்பிப்பதற்கு கால அவகாசம்…
முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டம்!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலிருந்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச்சபைக் கூட்டம் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது. இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பது சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் முன்வைக்கப்படும் மற்றுமொரு நகர்வாகும்….
சஜின் வாஸூக்கு பிணை
மிஹின் லங்கா நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கலில் 833 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவினால், அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவர், இரண்டறை இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் முன்னிலையில், இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு…
பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சீருடை கூப்பன் நவம்பர்முதல் விநியோகம்
அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்குமான இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் நவம்பர் மாதம் முதலாம் வாரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடங்களில் பெற்றோர்கள் சந்தித்த பல இடர்கள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடத்தைப் போன்று இம்முறை சீருடை கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் வருகை தரத் தேவையி ல்லையெனவும், வகுப்பாசிரியர் குறித்த மாணவரின் கையொப்பத்துடன் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…
அம்பாறையில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க வீதியை மறித்து பட்டதாரிகள் எதிர்ப்பை வெளிக்காட்டியதை அடுத்து, பொதுமக்களின்…
இலங்கையில் கால் பதிக்கும் பஜாஜ் நிறுவனம்
இந்தியாவின் இலத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனமான பஜாஜ் எலெக்ரிக்கல்ஸ் நிறுவனம் தரமான தனது இலத்திரனியல் சாதனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது. இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் பாரிய சேவையாற்றும் பஜாஜ் நிறுவனம், இலங்கையில் இரு வர்த்தக நிறுவனங்ளை தனது ஏக விநியோகஸ்தர்களாக நியமித்துள்ளது. சுமாராக 300 வர்த்தகர்களை தமது அறிமுக உற்பத்திப் பொருட்களை நேரில் பார்வையிடும்படி குறித்த இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. பொருட்களின் தரம் மட்டுமல்ல, அனுபவஸ்தரான பாவனையாளரின் கையிலும் அது இருந்தால்தான்…
துமிந்தவிற்காக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு
பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் மரண தண்டை தீர்ப்புக்குள்ளாகியுள்ள துமிந்த சில்வா உட்பட நான்கு பேர் குறித்து விதிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றினை எதிர்வரும் செவ்வாய்(20) அன்று பதியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்..
