News
புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்
-பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2017 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி…
80 வயது முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்த குழந்தை
பங்களாதேஷில் முதிர்ச்சியான தோற்றதுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளமையானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் மாகுரா மாவட்டத்தில் நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. முதிர்வு தோற்றதுடன் பிறந்த அந்த குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என்ற குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இன்று முதல் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நாட்டிலுள்ள 300 க்கும் மேற்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 26 பிரிவுகள் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடங்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 286 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருப்பது…
இலங்கையருக்காக அபராத பணம் வழங்கிய சவூதி
தமது நாட்டில் கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழங்கப்படும் அபராத பணத்தின் ஒரு பகுதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை பிரஜைக்கும் தன்னுடைய சக தொழிலாளிக்கும் ஏற்பட்ட முறுகலிலேயே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரியான Faizer Mackeen தெரிவித்துள்ளார். குறித்த இலங்கை பிரஜை சீதுவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த…
சர்வதேச தகவல் அறியும் உரிமை தொடர்பான மாநாடு நாளை கொழும்பில்
சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தகவல் அறியும் மாநாடு நாளை புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் . மேலும் மாநாட்டில் .120 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று…
லசந்தவின் சடலத்தை படம்பிடித்த ஆளில்லா கேமரா
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்ற ஆளில்லா கேமராவால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைக்காக அவரது சடலம் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடும் பாதுகாப்புடன் பொரளை பொதுமயானத்தில் தோண்டப்பட்டு வருகின்றது. குறித்த பகுதிக்குள் செல்ல ஊடகவியலாளர்கள் உட்பட ஒருவரும் இடமளிக்கப்படவில்லை. எனினும் குறித்த பகுதியில் நுளைந்த ஆளில்லா கேமாரா ஒன்று லசந்தவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்றுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை…
மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த வாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மக்களையும், அமைச்சர் றிஷாத்தையும் அந்நியப்படுத்துவதற்காக சதி முயற்சிகள் அரங்கேற்றம்!
-சுஐப் எம்.காசிம் – தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஹிஜ்றாபுரத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட மைதானத் திறப்புவிழா மற்றும் ஹஜ் விளையாட்டு போட்டியில் பிரதமஅதிதியாகப் பங்கேற்று உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜனூபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழாவில் அமைச்சர் மேலும் கூறியதாவது. இறுதி யுத்தத்தின் உக்கிரம் தாங்க முடியாமல் முல்லைத்தீவு மக்கள்…
லசந்தவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று (27) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8 ஆம் திகதி இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த முரண்பாடுகளை தணிக்கும் வகையில் பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்கு…
ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல்
கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழக்கிழமை (22)அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிலாரி - டிரம்ப் இன்று நேரடி விவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக் கழகத்தில் இன்று நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் வேலை வாய்ப்பு, ஈராக் போர் மற்றும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். இந்த விவாதம் கார சாரமாக நடந்தது. இந்த விவாதத்தை 10 கோடி மக்கள்…
இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்
இலங்கையின் ஜனநாயக மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். அமெரிக்க யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில் நேற்று (26) ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்களிற்கும்…
