News
யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி
மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.
ஞானசாரரை கைது செய்திருந்தால், வன்முறை வெடித்திருக்கும் – பசில்
அளுத்கமையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்திருந்தால் நாடெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் உருவாகியிருக்கும். இதனாலேயே ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார் . பத்தரமுல்லை,நெலும் மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, அளுத்கமயில் பொதுபலசேனா ஏற்பாடு செய்த…
ஞானசாரதேரருக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் திருத்தம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை திருத்தி, எதிர்வரும் 13ஆம் திகதியன்று முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை கட்டளையிட்டுள்ளது. திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் தொடர்பில் ஏதாவது எதிர்ப்பு இருக்குமாயின், அதனை எழுத்துமூலமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
எலும்புக்கூடு முழுமையாகவுள்ளது
‘லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தினது எலும்புக்கூடு, முழுமையாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம், குறித்த சடலம், பொலித்தீன் உறையொன்றினால் முழுமையாகச் சுற்றிவைக்கப்பட்டிருந்தது. இதனாலேயே, சடலத்தைத் தோண்டி எடுக்கும்போது அதன் எலும்புக்கூடு முழுமையாக இருந்தது” என சடலம் தோண்டியெடுக்கப்பட்ட இடத்திலிருந்த அரச தரப்பு சட்டத்தரணி சீ.ரணகல தெரிவித்தார். சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த லசந்த விக்கிரமதுங்கவை, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய டாக்டர் மொஹான் சில்வாவின் அறிக்கைக்கும் அவரது மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கும் இடையே, பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்றது….
யார் முன்னிலையிலும் அரசாங்கம் மண்டியிடாது
நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமானது யார் முன்னிலையும் மண்டியிடாது. எனினும், சகலருக்கும் காது கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சாதாரண கோரிக்கைகளை யாராவது முன்வைத்தால், அவற்றுக்கு அரசாங்கம் காதுகொடுக்கும். எனினும், கண்டித்தோ அல்லது பயமுறுத்தியோ…
எட்கா (ETCA) பேச்சு எவ்வித அழுத்தங்களுமின்றி தொடர வேண்டும் – இந்தியா
-சுஐப் எம்.காசிம் – இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அழுத்தங்களுமின்றி காலவரையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று, இறுதிக்கட்டத்துக்கு வரவேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக, அந்நாட்டின் கைத்தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய உயர்மட்டக்குழுவுடன் இங்கு வந்துள்ள இந்திய இணையமைச்சர், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இலங்கை…
நியமனம்பெற்ற புதிய அதிபர்களுக்கு உரிய பாடசாலை வழங்க அமைச்சரவை அனுமதி
அதிபர் சேவை தரம் மூன்றுக்கு புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனவே அவர்கள் விரைவில் தமக்கான பாடசாலைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த பாடசாலைகளில் தற்போது அதிபர்களாக பதில் கடமையாற்றுபவர்கள் மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக கடமையாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வியமைச்சில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையிலுள்ள 10ஆயிரத்து நூற்று…
ஹிலாரி அசத்தல் – டிரம்ப் சொதப்பல்
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடந்த, முதல் நேரடி விவாதத்தில், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன், (வயது 68) தன் நேர்த்தியான வாதத் திறமையால் அசத்தினார். அவருடைய வாதத்தை சமாளிக்க முடியாமல், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், (வயது 70), சொதப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்கிறது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு…
தேங்காய் திருட முயற்சித்தவர் சுட்டுக் கொலை
கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இம்புல்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்
இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் இணக்கம்
இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று (27) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடன்களை குறைப்பதற்கு,…
இஸ்ரேல் – டிரம்ப் கூட்டு சதி!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜெரூசலத்தை இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக அங்கீகரிப்பதாக குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கடந்த ஞாயிறன்று டிரம்ப் டவரில் இருக்கும் தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்த டிரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். நெதன்யாகு ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். “3000 ஆண்டுகளுக்கு மேலாக ஜெரூசலம் யூத மக்களின் தலைநகர் என்பதை டிரம்ப் அறிந்தே உள்ளார்….
படுகுழியில் விழப்போகும் மஹிந்த
-M.I.முபாறக் – அரசியல் தீர்வு மற்றும் யுத்தக் குற்ற விசாரணை போன்ற தேசிய பிரச்சினைகளை விடவும் ஜனாதிபதி மைத்திரிக்கு தலையிடியாக இருப்பது மஹிந்த தரப்பின் கூத்துத்தான். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுதல் அல்லது அக்கட்சியைப் பலவீனப்படுத்தி புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்ற நோக்கில் அவர்கள் செயற்படுவதே இதற்கு காரணம். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுவது முடியாத காரியம் என்றாலும் புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்பது சாத்தியமே.அவ்வாறு புதிய கட்சி ஒன்று உருவாகும்போது…
