News
பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் கையளிப்பு
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இவ் வேலைத்திட்டங்கள் அனைத்தும் பிரதி அமைச்சரின் 11.9 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தியாவட்டவான், வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை ஆகிய பிரதேச பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களிடம்…
களுமுந்தன்வெளி பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா
அண்மையில்களுமுந்தன்வெளி யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தேவசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 4 லட்சம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கண்ணன், முஸ்தபா கலீல், சித்திரவேல் மற்றும் பயனாளிகளும் கலந்து…
வில்பத்து சம்பந்தமாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் சிங்கள மொழி விளக்கம் (வீடியோ)
அண்மையில் வில்பத்து சம்பந்தமாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் விளக்கம் (வீடியோ)
அக்றானை ஆதிவாசி தலைவர், பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு
அண்மையில் அக்றானை ஆதிவாசி தலைவர் பிரதி அமைச்சர் அமீர் அலியின் இல்லத்திற்கு வருகைதந்து பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டார். 01. அக்றானை தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார். 02. அப்பிரதேச பிள்ளைகளின் நலன் கருதி தரம் 10 வரை உயர்த்தி தருமாறும் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். 03. பாலம் , பாதை என்பவற்றை அமைத்து தருமாறும் கோரினார். இவ் கோரிக்கைகளை தான் நிவர்த்தி செய்ய நடவடிக்கை…
பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் சொந்த நிதியின் மூலம் பாலர் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெலுகொல்லாகட அல் அக்ஸா பாலர் பாடசாலைக்கான விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கினார்.
தொழிலதிபர் நெய்னா முஹம்மட் JP அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
மருதமுனை 1 ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும் தலைவர் மர்ஹூம் அஸ்ரப்போடு இணைந்து செயல்பட்டவருமாகிய அல்ஹாஜ் நெய்னா முஹம்மட் JP அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன் அவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான அமீர் அலி முன்னிலையில் இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் விசேட…
வில்பத்து தேசிய வனம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு (கட்டுரை)
-லத்தீப் பாரூக் – முஸ்லிம்களின் உரிமைiயைப் பறித்து இனவாதிகளை திருப்திபடுத்துவதாக அமைந்துள்ளது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அந்தப் பிரதேச முஸ்லிம்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களில் குடியேறி சிதறடிக்கப்பட்ட தமது வாழ்க்கையதை; தொடங்க தயாரான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையே இதற்கு முக்கிய காரணம்….
நாட்டு நலனுக்காக ஒரு கருத்தோடு பயணிக்க ஒற்றுமைப்படவேண்டும் – அமைச்சர் றிஷாத்
– M.S.M.ஸாகிர் – நாம் இருக்கின்ற இடங்களிலிருந்து கொண்டு எம் சமுதாய நலனுக்கும், ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து வாழும் ஒற்றுமைக்கும், நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு செயற்படலாம் என்பது தொடர்பாக ஒத்த கருத்தோடு பயணிக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டுமென சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளர் மர்ஹும் எச்.எம்.பாயிஸின் நினைவேந்தல் நிகழ்வும் பாத்திமா…
அல்-ஹிக்மா கல்லூரி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத்
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், பாராட்டு விழாவும், பாடசாலையின் வரலாறு அடங்கிய அல்-ஹிக்மத் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்விலும் அமைச்சர் றிஷாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வின் அதிதிகளாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றோர், ஆசியர்கள் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் புதிய செயளாலராக சிந்தக சமரவிக்ரம லொக்குஹெட்டி
-அஸீம் கிலாப்தீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் புதிய செயளாலராக சிந்தக சமரவிக்ரம லொக்குஹெட்டி பதவியேற்கும் நிகழ்வின்போது, இந்நிகழ்வில் முன்னாள் செயளாலர் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டமும் சிங்கள புத்தகம் வெளியீடும்
-A.S.M. Javid- ஊடகவியலாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டகால பொருலாளருமான மர்ஹூம் பாயிசின் நினைவுக் கூட்டம் நேற்று (20) போரத்தின் தலைவர் என்.எம்.அமீனின் தலைமையில் மாளிகாகந்த அஷ்சபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன்போது பாத்திமா இஸ்ரா எழுதிய கொந்தம மித்ரா எனும் சிங்கள நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீனும், கௌரவ அதிதிகளாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் அசு மாரசிங்க, முஜீபுர் ரஹ்மான்,…
பாவனையாளர் அதிகார சபையில் 62 பேருக்கு அமைச்சர் றிஷாத் நியமனம்
மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின்; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று காலை (2017.01.21) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிந்தக்க…
