News
ரதிதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி திறப்பு விழா
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் புகாரிதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 2.00 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி அமைக்கப்பட்டது.
வில்பத்து விவகாரம்: பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்துச் செல்ல யோசனை
மீண்டும் இனவாத கோணத்தில் கொண்டு செல்லப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை அரசியல் தலைவர்களை நேரடியாக அப்பிரதேசத்துக்கு அழைத்துசெல்ல கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை சிலர் இனவாத ரீதியில் சித்தரித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் அறிவிப்பு அதனை மேலும் வழுவூட்டும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் சிங்கள பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்து சென்று…
வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் பயணம் செய்தேன்.. ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை
-ஆதில் அலி சப்ரி – வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் தான் சஞ்சாரித்ததில் அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென்றும் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நல ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். நேற்றுமுன்தினம் வில்பத்து, சிலாவத்துர, மரிச்சுகட்டிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்த நேரடி விஜயத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சிங்கராஜவனம், முத்துராஜவெல போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள காடழிப்புகள் தொடர்பாக கவனம்…
அமைச்சர் றிஷாதின் முயற்சியினால் அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம் ..
நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர் அதிக விலை கொடுத்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றனர் இந்த நிலையை மாற்றி மக்களின் நலனுக்காகவும் வர்த்தகர்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார். அதாவது வடக்கு தெற்கு கிழக்கு போன்ற மாகாணங்களில் தம்புள்ளை…
முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு
-A.R.A.Raheem – வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி…
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதிக்கும் – அமைச்சர் றிஷாத்
திய அரசியலமைப்புக்கு முன்மொழியப்பட்டுள்ள சில விடயங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றமை முஸ்லிம் சமூகத்தை வெகுவாகப் பாதிக்குமெனவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி நல்லாட்சிக்கு பங்களிப்பு செய்த முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியையும் பிரதமரையும் வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ளமை தொடர்பில்…
அமைச்சர் ரிஷாட்டின் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபை வீறுநடைபோடுகிறது. – தலைவர் ஹசித திலகரட்ன
-அமைச்சின் ஊடகப்பிரிவு – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் 62 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், நுகர்வோர் அதிகார சபையானது நுகர்வோர் பாதுகாப்பை நிர்ணயிப்பதுடன் நியாயமான சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவதன் ஊடாக உள்நாட்டு சந்தையை திறன்மிக்கதாக மாற்றுவதே…
உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்
8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு நுவரெலியா புனித சேவியர் கல்லூரியிலிருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை விஞ்ஞானப் பிரிவில் பரீட்சை எழுதிய 8 முஸ்லிம் மாணவிகள் தமது பரீட்சைப் பெறுபேறு வெளியிடப்படாது பரீட்சைத் திணைக்களத்தினால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாட்டினை கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்தனர். மாணவிகளது சார்பில் அவர்களது பெற்றோர் முறைப்பாட்டினைச் சமர்ப்பித்தனர். க.பொ.த….
அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு
-ஐ.ஏ.ஸிறாஜ் – அம்பாறை மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்களின் சிவில் சமூக அமைப்பான காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியானது பேரினவாத செயற்பாடுகளினால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களது காணிகளை மீட்டுத்தருமாறு கோரியும் அது தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நோக்கிலும் கொழும்பில் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியது. இதன் ஓர் அங்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது….
கல்வியே எமது சமுகத்திற்கு முக்கியமானதாகும் – அமைச்சர் றிஷாத்
-A.S.M. Javid – தற்போது சில ஊடகங்கள் முஸ்லிம்களை மலினப்படுத்தியும் கேவலப்படுத்தியும் செய்திகள் வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும் என வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு-12 வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் கே.எம்.எம்.நாளிர் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் இடம் பெற்றபேதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மிக மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப்பாட சலையின்…
யூசுப் கச்சி மரைக்கார் கலாநிதிப் பட்டம் பெற்றார்
தாராபுரம், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூசுப் கச்சி மரைக்கார் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புப் பிரிவினால் 19.12.2016 இலிருந்து மனித உரிமையில் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவரது ‘உண்மையறிதல் மீளிணக்கத்திற்கான சவால்களும் வாய்ப்புகளும்:இடம்பெயர்ந்த வடபுல முஸ்லீம்களைப்பற்றிய ஒரு தனிநிலை ஆய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொண்டு இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தனது ஆரம்பக் கல்வியை தாராபுரம் அல்மினா முஸ்லீம் மகாவித்தியாலயம், எருக்கலம்பிட்டி மத்திய வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்கொண்டார். பின்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்…
வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரியவசம்
வில்பத்துவில் வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை. முஸ்லிம்கள் தாங்கள் குடியிருந்த காணிகளையே துப்புரவு செய்து குடியேறியுள்ளனர். பொதுபலசேனா அமைப்பும், சில சூழலியலாளர்களுமே வில்பத்து தேசியவனம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தவறாகப் பிரசாரம் செய்கிறார்காள். இதன் பின்னணியில் பொதுபலசேனா அமைப்பே செயற்படுகிறது என தேசிய சூழலியலாளர் அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் திலக் காரியவசம் தெரிவித்தார். சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்…
