News
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை விட சிறந்த மக்கள் பண்புகளை கொண்டவர் அமைச்சர் றிசாத்- பிரபா கணேஷன்
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை விட சிறந்த மக்கள் பண்புகளை கொண்டவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் எனவே தான் கொழும்பு மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இ்லங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எனது கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள கொழும்ப மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன்,தமிழர் எம்மை பொருத்த வரையில் மயில் சின்னம் என்பது கடவுள் பயணிக்கும் வாகனம் என்றும் கூறினார். தனியார் தொலைக்காட்சி அரசியல் விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போது…
முல்லைத் தீவில் கோவில் நிர்மாணிப்பு பணிக்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஹூனைஸ் பாறுக்கால் நதி ஒதிக்கீடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டான்கண்டல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்மாணப்பணிகளுக்கென ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தயாநந்தன் தெரிவித்தார். குறித்த ஆலயநிர்மாணத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் வைபவரீதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் என்னிடம் விடுத்தவேண்டுகோளுக்கிணங்க வன்னி…
கொழும்புவாழ் அனைத்து மக்களுக்கும் எங்கள் பணி தொடரும்
-எம்.சுஐப்- சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் தீய சக்திகளால் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம், சுதந்திரம் இழந்தோம். வீடு வாசல்களையும், விளைச்சல் நிலங்ளையும் இழந்தோம், தொழிலையும் தொழில் சார்ந்த உபகரணங்களையும் இழந்தோம். நமது உயிராக அமைந்திருந்த கல்வியையும் இழந்தோம். அகதிகளானோம். பாதசாரிகளாய் நடையில் புத்தளம் வந்தோம். அங்கே எமக்கு ஆறுதல் கிடைத்தது. அத்தனை குடும்பங்களுக்கும் வாழ்விடம்போதாது மரநிழலில், மக்கள் இல்லாத வீடுகள், மண்டபங்கள் நமக்கு குடிமனையாகின. துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையாகின. 1994இல் ஆட்சி மாறியது. மர்கூம்…
அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரத்தியேக இணையத்தளம் வெளியீடு
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெப்தளமான www.acmc.lk மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின்பிரத்தியேக வெப்தளமான www.rishadbathiudeen.lk ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் (18-03-2014) நடைபெற்றது. அமைச்சர் வெப்தளங்களை ஆரம்பித்து வைப்பதையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.
வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லை-என அமைச்சர் றிசாத் பதியுத்தீன்
தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசிவிட்டு வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லையென்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அரசியல் நடத்துகின்றோம். என அமைச்சர் றிசாத்பதியுத்தீன் தெரிவித்தார். அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் (2014-03-18) மு.பகல் ஊடகவியலாளர்கள் சந்திப்பும், கட்சியின் வெப்தளமும் றிசாத் பதியுத்தீன் வெப்தளமும் ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான ஊடகவியாளர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட், ஏற்றுமதி இறக்குமதி அபிவிருத்தி திணைக்களத்தின் உப தலைவர் கலாநிதி மரிக்காரும் கலந்து…
அரசாங்கத்துடன் நாம் இருந்தபோதும், எமது தனித்துவத்தை ஒருபோதும் இழக்கமாட்டோம் – றிஷாத் பதியுதீன்
மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம், ஜனாதிபதியை மாற்றி விடலாம் என்ற போலியான பிரசாரத்தை முன்னெடுத்து மக்களிடம் ஒரு மாயையை விதைத்து வாக்குகளை கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற தந்திரத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். மாளிகாவத்தை ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் நேற்று மாலை(16) இடம்பெற்ற கட்சியின்தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது, காலாகாலமாக…
“My highest regard for the Judiciary”
“My highest regard for the Judiciary” – Rishad • Contempt application against Rishad settled in CA • “Win-win for both!” – Zuhair PC Rishad Bathiudeen (Minister of Industry and Commerce-right) and MM Zuhair (President’s Counsel representing Minister Bathiudeen-left) address the special press briefing in Colombo on 14 March. Minister of Industry and Commerce Rishad Bathiudeen…
கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் றிசாட் பதீயுதின் குழுவினர்
மன்னார் மாவட்டத்தில் முசலி மக்கள் தற்பேது தங்களின் சொந்த பூர்விக இடத்தில் மீள்குடியேறும் போது பல்வேறு பிரச்சினைகளை ஏதிர்நோக்கி வருகின்றார்கள். அப்பிரச்சினையினை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் முகமாக இன்று 04 கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்மான றிசாட் பதீயுதின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் முசலி பிரதேசத்தில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களான 4ஆம் கட்டை, பிச்சைவாணிப குளம், வேப்பங்குளம், பெற்கேணி, அகத்தி முரிப்பு, புதுவெளி, முசலி , குளாங்குளம், சிலாவத்துறை…
தெஹிவளை பள்ளியை நடாத்துவதற்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும்-அமைச்சர் றிசாத் பதியுத்தீன்
தெஹிவளைப் பிரதேசத்தல் உள்ள பள்ளிவாசல்கள் நிருவாகிகளுக்கும் அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது . நேற்று இரவு தெஹிவளையில் நவாஸ் முஸ்தபா என்பவரின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தெஹிவளை கடவத்தை வீதி பள்ளிவசால் சம்பந்தமான விடயங்களும் பேசப் பட்டது இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் தெஹிவளை கடவத்தை வீதி பள்ளிவசால் சம்பந்தமான வழக்க இன்று நடைபெறுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிருடன் பேசியுள்ளதாகவும் இவ் வழக்கில் சிங்கள சட்டத்தரணிகளை சேர்த்துக்கொள்ளுமாறும்…
காலணி மற்றும் ஏற்றுமதித் துறையில் இலங்கை வலுவான வளர்ச்சியில் உள்ளது
சமீபத்திய வரலாற்றில் இலங்கையின் காலணி மற்றும் தோல் துறைக்கான ஏற்றுமதியில் மிக உயர்ந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது. எங்கள் காலணி மற்றும் தோல் ஏற்றுமதி ஒரு வலுவான வளர்ச்சி போக்கை காணக்கூடியதாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு இத் துறைக்கான ஏற்றுமதி 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு 51 மில்லியனாக காணப்பட்டு ஒரு குறிப்பிடத்தக்க 63% சதவீத அதிகரிப்பினை பதிவு செய்தது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்….
மேல் மற்றும் தென் மாகாண சபைகளில் அ.இ.ம.காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டி
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்;- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட கிழக்கில் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்ததால்…
