News
வறட்சி, வெள்ளப் பெருக்கினை நிறுத்த அரசாங்கத்தினால் முடியாது: நாமல் ராஜபக்ச
மழை, வெள்ளம் ஏற்படும் போது மழையை நிறுத்தவும் வறட்சிக் காலத்தில் வெயிலை நிறுத்தவும் அரசாங்கத்தினால் முடியாது. எனினும், மக்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்ல நிவாரணங்கள் வழங்க முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் நம்ப வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் நிலவி வரும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும். நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்படும். தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரம் கனேவல்பொலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு…
மக்களின் வாழும் உரிமையை ஜனாதிபதியே உறுதி செய்தார்!– பசில் ராஜபக்ச
நாட்டின் அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய பின்னணியை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தியது. நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாக மாறியுள்ளது. வெளிநாட்டு சக்திகளிடமிருந்தும், உள்நாட்டு சதிகாரர்களிடமிருந்தும் நாட்டை காக்க வேண்டியது அவசியமானது. ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வரும் உலக நாடுகளில் இலங்கையின் சுதந்திரக் கட்சி முக்கிய இடத்தை வகித்து வருவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து தின்ற 5 பேர் பலி
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அங்குள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தது. பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டையை தினந்தோறும் உடைத்து குடிக்கும் பழக்கம் கொண்ட அந்த நாயின் தொல்லை தாங்க முடியாத கோழிகளின் உரிமையாளர் முட்டைகளில் விஷம் வைத்து அந்த நாயை கொல்ல முயன்றுள்ளார். விஷம் கலந்த முட்டைகளை சாப்பிட்ட நாயின்…
பலஸ்தீனத்தை மீண்டும் ஆக்கிரமித்தது இஸ்ரேல்
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலினால் கைப்பற் றப்படும் பலஸ்தீனத்தின் பாரிய நிலப்பகுதி இதுவென கருதப்படுகிறது. கடந்த ஜன் மாதத்தில் மூன்று யுத இளைஞர்கள் குறித்த பகுதியில் கடத்திக் கொல் லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணு வத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளுர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த…
புதிய மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஹுசைனுடன் இணைந்து பணியாற்ற தயார் – இலங்கை
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் சையத் அல் ஹுசைனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. கண்டியில் 1-9-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், புதிய ஆணையாளரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக முடிவுகளை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர், புதிய…
இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு, நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது – மஹிந்த
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் நான்கு சதுர கிலோமீற்றர் பலஸ்தீன நிலப்பகுதியை கையகப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு பெத்லஹாமில் இருக்கும் நிலப்பகுதியே இஸ்ரேலினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலினால் கைப்பற் றப்படும் பலஸ்தீனத்தின் பாரிய நிலப்பகுதி இதுவென கருதப்படுகிறது. கடந்த ஜ{ன் மாதத்தில் மூன்று யு+த இளைஞர்கள் குறித்த பகுதியில் கடத்;திக் கொல் லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் இராணு வத்தால் நிர்வகிக்கப்படும் உள்ளுர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த…
இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு, நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது – மஹிந்த
இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வடக்கு, தெற்கு – தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ்…
ஞானசாரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை…!
பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி மைத்திரிகுணரட்னவை “நாய்” என நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஞானசார தேரர் திட்டியமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போதே, ஞானசார தேரர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டுமென கோரியுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த ஜூன் மாதம்…
”இலங்கையிலுள்ள பாகிஸ்தான் அகதிகளால் மதப் பிரச்சினைகள் எழக்கூடிய வாய்ப்பு” ஹெல உறுமய
இலங்கையில் இருந்து பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் அகதிகளில் அதிகமானோர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கின்றனர். இவர்களால் மதப் பிரச்சினைகள் எழக்கூடிய வாய்ப்புள்ளதாக ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இவர்களைத் திருப்திப் படுத்துவதற்கும், சந்தோசப்படுத்துவதற்கும் இலங்கையின் அமைதியை இழக்க வேண்டியேற்படலாம். ஆகவே பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக்…
லிபியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முஸ்லிம் போராளிகளின் வசம்
லிபியாவில் அரசுக்கும், முஸ்லிம் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. சமீபத்தில் தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை போராளிகள் கைப்பற்றினர். அப்போது நடந்த சண்டையில் 15–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து திரிபோலியில் உள்ள தனது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அமெரிக்கா மால்டாவில் உள்ள வல்லெட்பாவுக்கு மாற்றியது. அலுவலகம் மட்டும் மாற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க தூதரக அலுவலகத்தை போராளிகள் கைப்பற்றினர். அந்த வீடியோ காட்சிகள் ஆன்லைனில் ஒளிபரப்பாயின. இதை அமெரிக்க அதிகாரிகள்…
IS க்கு உலகநாடுகள் பதிலடி கொடுக்க வேண்டும் – அப்துல்லா
மும்பையில் நடைபெற்ற தாக்குதலைப் (26/11) போல பிரிட்டனிலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் சிரியா, இராக் நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், இப்போது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு உலக தலைவர்களும், சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை அது தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில்…
ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறை மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிட முடியாது: சட்டவல்லுநர்கள்
18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் நழுவிப்போய்விட்டதென சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் என்று சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா முதன் முறையாக வெளியிட்ட சட்ட ரீதியான தர்க்கம் சக்திமிக்கதெனவும் அதனை மீற முடியாதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியலமைப்பின் 32/2 ஷரத்தின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் அதன் பின்னர் அந்தப் பதவிக்கு மக்களால் தெரிவு…
