News
1 கோடிக்கு விலை போன தாய்
உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் தாயை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள். அவ்வளவு விலை மதிப்புடையது தாய்ப்பாசம். ஆனால் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். அதாவது குயாங்கானை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும். அவருக்கு நல்ல…
சாமியைக் கைது செய்யுங்கள்! மீனவப் பிரதிநிதிகள் கொதிப்பு
இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதாக தனியார் தொலைக்காட்சி பேட்டியில் ஒப்புக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மீனவர் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி யேற்று 100 நாள்கள் கடந்துவிட்டன. இந்த மூன்றரை மாதங்களில் மட்டும் 350-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 63 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு…
கல்முனைக்குடி பள்ளிவாசல் வாகனத் தரிப்பிட சிக்கல் தீர்ந்தது
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டு வந்த வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முஹைதீன் குறித்த தடையுத்தரவை நீக்குவதாக அறிவித்தார். இதன்போது, குறித்த வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கடந்த 2014.08.18ஆம் திகதி தன்னால் வழங்கப்பட்ட 14 நாட்களுக்கான இடைக்கால தடையுத்தரவை நீக்குவதாக நீதிபதி அறிவித்ததுடன், குறித்த வாகனத்…
மரக்கடத்தலில் ஈடுட்ட பிரதேசசபைத் தலைவரின் தம்பி சிக்கினார்
நாகொடை பிரதேச வனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், பிரதேசசபைத் தலைவரின் சகோதரர், உடுகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி – நாகொடை பிரதேசசபைத் தலைவரான ஹேமசந்ர விலேகமவின் தம்பி எனக் கூறப்படும் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குறித்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, குறித்த மரங்களைக் கொண்டு செல்ல பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார். எனினும் சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர்…
வட்டரக்க தேரரின் இரகசிய கடிதப் பையை பெற்றுத் தாருங்கள் – நீதிபதியிடம் வேண்டுகோள்!
ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் மீதான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.பாணந்துரை பிரதான மஜிஸ்த்ரேட் ருசிர வெலிவத்தவினால் இவ்வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கியதாக கூறப்பட்டு தேரருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சிகள் ஆறுபேரை அடுத்த விசாரணையின் போது நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு…
திவி நெகும வாழ்வின் எழுச்சி திட்டதினுடாக மன்னாரில் சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000-50000 ரூபா வரை கடன் உதவி
பொருளாதார அமைச்சினால் நடாத்தப்படும் திவி நெகும வாழ்வின் எழுச்ச்சிதிட்டம் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டதினுடாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகள் 25 பேருக்கு 5000 ரூபா முதல் 50000 ரூபா வரை நுகர்வு மற்றும் சுய தொழிலுக்காக கடன் வழங்கப்பட்டது. மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு இக்கடன் தொகைகளை…
முஸ்லிம் கூட்டமைப்பின் வெற்றிதான் இந்த சமுகத்தின் வெற்றி 20இலட்ச முஸ்லிம்களின் வெற்றி – ரிசாத் பதியுதீன் ஆவேசம்
பொதுபலசேனாவையும் ஞானசாரரையும் அடக்கி ஒடுக்காததன் விளைவுதான் இந்த பதுளை மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை என்பதை அரசுக்கு உணர்த்துவதென்றால் இத்தேர்தலில் பதுளை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு முஸ்லிம் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் பதுளை நகரில் சூடு வைத்துள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீனும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும்; ஒரு மேடை ஏறிய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் பதுளை நகரில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிசாத்…
தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை
தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.றோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்டம், வீதி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.இதன்படி இந் நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தையிலும், யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக நாளையும், முல்லைத்தீவு பேருந்து நிலையம் முன்பாக நாளை மறுதினமும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.இந் நிகழ்வுக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதுடன் பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்று தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும்…
நீதிமன்றுக்கு துப்பாக்கியுடன் நுழைவு
கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிக்கு அனுமதிப் பத்தரம் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் சந்தேகநபர் ஏன் துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை அண்மையில் ஹல்ஸ்டப் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உயிருடன் புதைக்கப்பட்ட 7 வயது சிறுமி மீட்பு
உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, 7 வயது சிறுமியை, ஒருவர் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியையே குறித்த நபர் மீட்டுள்ளார். கரும்பு தோட்டத்திற்குள் சிறுமி ஒருவரின் அழுகுரல் கேட்டதாகவும், இதனையடுத்து விரைந்து செயற்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். விசாரணையில், சிறுமியின் பெயர், தனு என்பது தெரிய வந்துள்ளது, சில…
அளுத்கமவில் முறுகல் நிலை 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது
பிக்குகளின் வற்புறுத்தலை அடுத்து தர்ஹா நகர், வெல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர் களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்தே இவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ள னர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்ட போட்டியயான்றில் கலந்து கொண்டுவிட்டு தமது பிரதேசத்தை நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் அண்மையில் அளுத்கமவில் நடந்த கலவரத்தில் காலை இழந்த அஸ்கர் என்பவரும் இருந்துள்ளார்….
அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன், றவுப் ஹக்கீம் ஒரே மேடையில்; மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
பதுளை மாவட்டத்தில் இரட்டை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லீம் காங்கிரஸ், அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் றிசாத் பதீயுதீன், றவுப் ஹக்கீம் ஒரே மேடையில் உரையாற்றினார்கள். இப் பிரச்சாரக்கூட்டத்திற்கு பல பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
