News
சுவிஸில் நண்பியை கொலை செய்த இலங்கையருக்கு நியூஸிலாந்தில் விளக்கமறியல் நீடிப்பு
குறித்த இலங்கையர் இன்று ஒக்லேன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். 42 வயதான இந்த இலங்கையர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் நண்பியான 23 வயதான கவிதா கந்தையா என்பவரை 2000 ஆம் ஆண்டு பாசெல் நகரில் வைத்து இந்த இலங்கையர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர் சார்பில் இன்று பிணை மனு எவையும் தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த…
சோமாலியாவில் 43.000 குழந்தைகள் பசியால் இறக்கும் ஆபத்து
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தின் பேரழிவில் சிக்கி இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2012-ம் ஆண்டில் சர்வதேச ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை சீரமைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. ஆனால் இஸ்லாமிய ஷெபாப் போராளிகளின் தொடர் தாக்குதல்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் தலைநகரின் உள்ளேயே நிலவும் பட்டினி நெருக்கடிகளும் அரசின் சாதனைக்கான தடையாகவே அறியப்படுகின்றது. இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை ஒன்றில்…
யாழ் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியின் நிகாப் விவகாரம் சுமூகமாக தீர்க்கப்படும் – உபவேந்தர் வசந்தி அரசரட்ணம்
(பாறூக் சிகான்) யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இனிவரும் காலங்களில் நிகாப் எனப்படும் இஸ்லாமிய ஆடை அணிவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். மருத்துவ பீடத்திலுள்ள மருந்தகவியல் கற்கை நெறியினை தொடரும் முஸ்லீம் மாணவி ஒருவர் கடந்த கல்வியாண்டு இடம்பெற்ற பரீட்சை ஒன்றிற்கு நிகாப் அணிந்த நிலையில் தோற்றியிருந்தார்.இந்நிலையில் பரீட்சை மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் இனி வரும் காலங்களில் பரீட்சைக்கு வரும்போது நிகாப் அணிந்து வர வேண்டாம் என அறிவித்துள்ளார். இதனை அடுத்து…
சவூதி அரேபியாவில் போதைபொருள் விற்ற மூவரின் தலை வெட்டப்பட்டது
சவூதியில் போதைப் பொருள் விற்ற மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் தலைகளை வாளால் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம், அரசு செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ.வுக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரம், சிரியாவைச் சேர்ந்த ஹமூத் ஹஸன், ஹஸன் முஸல்மானி, யூசுப் அல்ஹல்கி ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை ஏராளமான அளவில் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண…
மலேசியாவிலுள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!
வீசா காலம் முடிவடைந்த பின்னர் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை மலேசியா கால அவகாசம் வழங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. மலேசியாவுக்கு வேலைசெய்யும் நோக்கில் சென்று வீசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருப் பவர்கள் இந்தக் காலப்பகுதி யில் எதுவித தண்டனையு மின்றி நாடு திரும்ப முடியும் என பணியகம் தெரிவித் துள்ளது. கடவுச்சீட்டைத் தொலைத்த நிலையில் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் கூட தற்காலிக பயண…
ஆண் பாதுகாவலர் இன்றி வரவேண்டாம் – சவூதி அரேபியாவின் எச்சரிக்கை..!
புனித ஹஜ் கடமைக்காக சட்டபூர்வ ஆண் பாதுகாவலர் இன்றி 45 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களை அழைத்துவரும் விமான சேவைகள் மீது சவூதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறும் விமான சேவைகள் மீது 50,000 சவூதி ரியால் (17,35000 ரூபா) அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஆண் பாதுகாவலர் இன்றிவரும் யாத்திரிகர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம்…
மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பு மனுவை, தேர்தல் ஆணையாளர் நிராகரிக்க முடியும் – விஜயதாசராஜபக்ஷ
GTN ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த இரண்டாம் தவணைக்காக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரே 18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேட்பு மனுவை நிராகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்….
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் – JVP
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் என ஜே.வி.பி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சித்தால் வழக்குத் தொடரப்படும் என கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியான அல்லது தார்மீக ரீதியான உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் – சிரேஸ்ட சட்டத்தரணி
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் என சிரேஸ்ட சட்டத்தரணி பெற்றி வீரக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எத்தனை தடவையும் பதவி வகிக்கக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பது…
கல்வியியல் கல்லூரிக்கான போட்டிப் பரீட்சைப் பெறுபேறு இன்று இணையத்தில்!
கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் கல்வி அமைச்சின் www.moe.gov.lk எனும் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளதாக கல்விக் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். ஆங்கில பாடநெறிக்கு 320 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், தொழில்நுட்ப பாடநெறிக்கு 100 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இப்பாடநெறிகளுக்கான போட்டிப் பரீட்சையில் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
மிகின் லங்காவின் ஒருநாளைய நட்டம் ரூபா ஒரு கோடி-ரணில் விக்கிரமசிங்க
மிகின் லங்கா விமான நிறுவனத்தை மூடிவிட்டால் வருடத்திற்கு 365 கோடி ரூபா பணத்தை மீதப்படுத்தலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். பொலன்னறுவையில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அந்நிறுவனத்தின் ஒருநாளைய நட்டம் ரூபா ஒரு கோடி எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.(iln)
பௌத்தர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் புத்தகம் அடித்து வினியோகம் பொதுபல சேனாவினா
இலங்கை பெளத்தர்களுக்கு எதிராக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிநாடுகளுக்கு விநியோகிப்பதற்கு இங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது தொடர்பான அனைத்து தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. இத் தேசத்துரோகிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பான் கீ மூன், நவிப்பிள்ளை மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பெளத்தர்களுக்கு எதிரான சதித்திட்டத்தை தகர்க்க உலகின் பெளத்த நாடுகளுடன் இணைந்து செயற்படும் திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம் என்றும் தேரர்…
