Headlines

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 3 இல்

ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்றே இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 3 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற எனத் தெரிவித்திருந்தது. அந்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது – ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர்…

Read More

உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

கிழக்கு உக்ரைன் போராளிகள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற தங்கள் நாட்டு போர் விமானத்தை, ரஷ்யா ஏவுகணையை வீசி சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ’எஸ்.யூ.25’ ரகத்தை சேர்ந்த அந்தப் போர் விமானத்தை ரஷ்ய ஏவுகணை இன்று வழிமறித்து தாக்கி அழித்து விட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அந்த போர் விமானத்தின் விமானி உயிர் தப்பிவிட்டதாகவும் கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உக்ரைன் அரசு நடத்தி வரும் சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட முயற்சி: 8 பேர் பலி, 300 பேர் காயம்

பாகிஸ்தான் பிரதமரின் வீட்டை முற்றுகையிட முற்பட்ட எட்டுப் பேர் பலியாகியுள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக கூறி அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 15 நாட்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடம்…

Read More

நவி பிள்ளை ஓய்வு – ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(AD)

Read More

ZMapp எனும் எபோலா தடுப்பு மருந்து

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற ஆட்கொல்லித் தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தாக (Vaccine) ZMapp என்று பெயரிடப் பட்ட மருந்து ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குரங்குகளிடம் பரிசோதித்து இருப்பதாக தி இன்டிபென்டன்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஷ்மாப் (ZMapp) என்ற மருந்து சேஸ் மகாகுயஸ் இனத்தைச் சேர்ந்த 18 குரங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப் பட்ட போது அனைத்துக் குரங்குகளும் உயிர் பிழைத்தன. ஆயினும் இந்த மருந்து செயற்படுவதில் மனிதர்கள் மற்றும்…

Read More

மியன்மாறில் சனத் தொகை கணக்கெடுப்பு – முஸ்லிம்கள் வந்தேறிகளாம்!

முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் பர்மாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், சனத்தொகை எதிர்பார்த்த அளவுக்கு கூடவில்லை என்று தெரியவந்துள்ளது. மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 5 கோடியே 10 லட்சம் பேராக இருப்பது தெரியவந்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகை குறித்து இதுவரை இருந்த கணிப்பீடுகளை விட 15 சதவீதம் குறைவாகும். 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் பர்மாவில் மக்கள் தொகையை கணக்கெடுக்கும்…

Read More

ஜப்பானில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு முதல் முறையாக தெற்காசியாவுக்கு வெளியே இருதரப்பு விஜயமாக நரேந்திர மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார். கலாச்சார, பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளைப் பொறுத்தவரை இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் ஒன்று ஜப்பான் என்று மோடி கூறியுள்ளார். க்யோட்டோ நகரை வந்தடைந்த பிரதமர் மோடியை நேரடியாக வரவேற்க ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே டோக்யோவில் இருந்து 400 கிலோ மீட்டர் பயணித்து க்யோட்டோவுக்கு வந்தது முன்னுதாரணமற்ற ஒரு செயல் என்று ஜப்பானிய பார்வையாளர்கள் கூறுகின்றனர்….

Read More

வாவியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது!

தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னாலுள்ள ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் ஓட்டமாவடி, மாவடிச்சேனையைச் சேர்ந்த மீராசாஹீப் ஹனிபா (வயது 30) என அடையாளங் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஒரு மனநோயாளி என்றும் நேற்று காலையில் வீட்டிலிருந்து வெளியேறியவர் என்றும் உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஷில்போதயத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது. தேசிய அருங்கலைகள் பேரவை, பனை அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம் ஆகிய நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திகள் மற்றும் ஆக்கப் பொருட்களின் காட்சி கூடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார். இந்த நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேலதிக செயலாளர் சுசந்த டி சில்வா, கைத்தொழில் அபிவிருத்திசைபத் தலைவர் நாவாஸ் ரஜாப்தீன்,…

Read More

சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் தினங்கள்

க.சூரியகுமாரன், வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களம்: வடஅரைக்கோளத்திலிருந்து அதன் அரைக்கோளம் நோக்கிய சூரியனின் நகர்வானது இலங்கைக்கு மேலாக இம்மாதம் ஓகஸ்ட் 28ம் திகதி முதல் செப்தெம்பர் 07ம் திகதி வரை காணப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக அதி உச்சம் கொடுக்கும். இதன்படி இலங்கையின் பின்வரும் நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே தரப்பட்டுள்ள நேரங்களில் சூரியன் அதிஉச்சம் கொடுக்கும்.

Read More

இலங்கையிலும், மியன்மாரிலும் புத்தருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது – பான் கீ மூன்

GTN இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். பௌத்த கடும்போக்குவாத நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்த கடும்போக்குவாதம் அண்மைக்காலமாக தலைதூக்கியுள்ளமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மை மதச் சமூகத்தவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் மதத் தலைவர்களினதும்…

Read More

ஆஸாத் சாலி இனவாதம் பேசினார் – லாபிர் ஹாஜியார்

(JM.Hafeez) சாதாரண குடிமகனான என்னை அரசியல் மூலம் உயர்த்திவைக்கக் காரணம் நான் வாழும் சூழலாகும், வேட்பாளர்கள் அதிகமான பணத்தை தேர்தல்களுக்காகச் செலவிடும் துர்ப்பாக்கியம் எமது மாகாண சபை முறையில் உள்ளது என்று மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஜெய்னுல் ஆப்தீன் தெரிவித்தார். கண்டியிலுள்ள தனது காரியாலயத்தில் நடத்திய ஊடக சந்தப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-  கண்டி மாவட்ட ஐ.தே.க.யின் மாகாண சபை அங்கத்தவர் இரு முறை தான் தெரிவு செய்யப்ட்டதாகவும் தனது…

Read More