News
இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு – ஆய்வில் தகவல்
மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா-அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி…
சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சிறுமியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என தெரிவித்து மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது எனக் கேட்டு சுலோகங்களை…
ISIS க்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம், பெரும் முதலாளிகள் மகிழ்ச்சி
(Kalaiyarasan Tha) ஈராக், சிரியாவில் ISIS இயக்கத்தை அழிப்பதற்கான திட்டத்தை ஒபாமா அறிவித்துள்ளார். ஒபாமாவின் “ISIS அழிப்புப் போர்”, அமெரிக்க பொருளாதாரத்திற்கு உதவும் என்பதால், பெரும் முதலாளிகள், குறிப்பாக எண்ணை வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், கடந்த ஒரு வருடமாக எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பரல் ஒன்று $115 க்கு விற்ற எண்ணை, தற்போது நூறு டாலருக்கு கீழே இறங்கி உள்ளது. ஐரோப்பிய தரத்திலான Brent $99,90; அமெரிக்க தரத்திலான WTI $92,30 என, இறுதியாக…
பச்சை மிளகாய் சவாலை ஏற்ற ஐ.தே.க. எம்.பி.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பச்சை மிளகாய் சவாலை ஏற்றுக் கொண்டு அதனை செய்து காட்டியுள்ளார். இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இளைஞர்கள் சிலர் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். “ஐஸ் பக்கட் செலன்ஞ்” திட்டத்திற்கு எதிராக “பச்சை மிளகாய் சாவால்”´ என்ற திட்டத்தை இளைஞர்கள் அறிமுகம் செய்துள்ளார். சவாலின் விதிகள்படி, சவால் விடுக்கப்படும் நபர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டால் 100 ரூபா நிதி உதவி அளிக்க வேண்டும்….
கோட்டாபய ராஜபக்ஸ, அரசியலுக்கு வருவதற்கு பூரண தகுதியை பெற்றுவிட்டார் – கொழும்பு மேயர் முஸாம்மில்
கோட்டாபய மிகவும் தூர நோக்கோடுதான் தனக்கு நகர அபிவிருத்தி அமைச்சு வேண்டுமென கூறியிருக்கின்றார். அவர் தற்போது அரசியலுக்கு வருவதற்கான மிக முக்கியமான தகுதியை பெற்றுவிட்டார் என கொழும்பு மாநகர மேயர் ஜே.எம் முஸாம்மில் தெரிவித்தார். 450 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொழும்பு மாநகரசபையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இந்நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் புதன்கிழமை (10) மாலை இடம்பெற்றது. அவர்…
ஜெயாவின் அவதூறு வழக்கு: சுவாமிக்கு அழைப்பாணை
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவா தியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணி யன் சுவாமியை ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமிழ்நாடு நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. தமிழக மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதல் வரை விமர்சித்து ஆங்கில ஜெயாவின் நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா, சுப்பிரமணியனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்….
விரோத சக்திகளை ஒன்று திரட்டி ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம் – ரணில்
நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார். இலங்கையின் அடையாளத்தை உறுதி செய்து அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு. ராஜபக்ச விரோத சக்திகளை ஒன்று திரட்டி ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம். ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் விவசாயிகள், இளைஞர் யுவதிகள், மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என சமூகத்தின் பல்வேறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைகளை…
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
எல்லைதாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 21பேர் நேற்று இரவு பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாகை மாவட்ட பூம்புகார் பகுதியினைச் சேர்ட்ந்த இருந்து 70 அடி நீளமான படகில் நேற்று மீன்பிடிக்க வந்த 21 தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். மேலும் அனைவரையும் இன்று பிற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாங்கள் எல்லை…
இலங்கையின் சுற்றாடலை இந்திய மீனவர்கள் அழிக்கின்றனர் – ஜனாதிபதி
இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் சுற்றாடலை அழிக்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் ஒவ்வொரு நாளும் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (OU)
ஐ.எஸ் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி
ஐ.எஸ் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் நாடுகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்தோடு போர் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிரான நடவடிக்கைகளை நேட்டோ நாடுகளுடன் இணைந்து எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட்களின் ஆதரவு இல்லாமல், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக சிரியாவில் தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலில் அதிபர்…
ஷரியா சட்டம் நாட்டில் இல்லாதபோது, அதனை நீக்க வேண்டுமென்பது முட்டாள்தனமானது – அசாத் சாலி
ஷரியா சட்டம் என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லாதபோது அதற்கு எதிரான கண்டனம் தெரிவித்து அதனை நீக்க வேண்டுமென்று பொதுபலசேனா கூறுவது முட்டாள் தனமான நகைப்புக்குரிய விடயமாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். ஷரியா சட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் அதனை பற்றிப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. திருடியவர்களின் கையை வெட்டுவதுதான் ஷரியா சட்டம். அது இலங்கையில் உள்ளதா? உண்மையில் ஒவ்வொரு முஸ்லிமும் ஷரியா சட்டத்தினை பின்பற்றித்தான் நடக்க வேண்டும். ஆனால், இலங்கையில்…
பொதுபல சேனாவுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து சூடான பதில்..!
(விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி) சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும்…
