News
கண்டி பாடசாலை மாணவி வல்லுறவு : சாரதி கைது
கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவியை பாடசாலைக்கு ஏற்றிச்செல்லும் வாகனத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கண்டி வாவி சுற்றுவட்ட சிவப்பு மதகு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் வல்லுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். குறித்த மாணவி வாகன சாரதியான 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையால் மூன்று வருடங்களாக இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது….
தெற்காசிய நாடுகளில் முதியோர் வாழ, மிகவும் உகந்த நாடாக இலங்கை
தெற்காசிய நாடுகளில் முதியோர் வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை கண்டறியப்பட்டுள்ளது. 96 நாடுகளின் வாழ்க்கைத் தரச் சுட்டி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் பின்னரான தரப்படுத்தல்படி இலங்கை 43ஆவது இடத்தை பிடித்துள்ளது. உலகில் முதியோர் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நாடாக நோர்வே தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் முதியோர் வாழக்கூடிய சூழல் இல்லாத நாடாக ஆப்கானிஸ்தான் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்ப்ஏஜ் சர்வதேச குளோபல் AgeWatch குறியீட்டு ஆய்வானது சமூகம், பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு…
மக்காவின் அபிவிருத்தி குறித்து மாறுபட்ட கருத்துக்கள்..!
புனித நகரங்களான மக்கா மற்றும் மதினாவிற்கு வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்னும் புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் கருதுவர். உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்களால் மக்கா நகரம் போற்றப்படுகின்றது. அனைவரும் ஒன்றுகூடும் இடமாக புனித மக்கா விளங்குகின்றது. அதிகரித்து வரும் யாத்ரிகர்களின் வருகையை முன்னிட்டு இந்த நகரங்களுக்கான விஸ்தரிப்புப் பணியை கடந்த 2000-வது ஆண்டு மத்தியில் சவுதி அரசு தொடங்கியது. தற்போது இன்னும் இதன் பணிகள் முழுமையாக நிறைவடையாத…
‘பேஸ்புக்கில் எமது சமூகம் ஒன்றிப் போவது நன்மையல்ல’ ஜனாதிபதி மஹிந்த
நாட்டில் இடம்பெறும் நல்லவற்றைப் பாராட்டுவது அரசாங்கத்திற்குச் சாதகமாகிவிடும் என குறுகிய நோக்கில் ஊடகங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டில் நடப்பவற்றில் நல்லவற்றைக் குறைவாகவும் கெட்டவற்றை அதிகமாகவும் வெளியிடுவது ஊடகங்களின் வழங்கமாகிவிட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மட்டுமன்றி எப்போதும் ஊடகங்கள் அவ்வாறே செயற்பட்டுள்ளன என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். சர்வதேச சிறுவர் தினத்தின் தேசிய நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மஹரகம…
சஜின் வாஸினால், கிறிஸ் நோனீஸ் தாக்கப்பட்டதற்கான காரணம் சுவாரஸ்யமானது…!
இலங்கை வெளிவிவகார சேவையைசாரத, அரசு தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டாத இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரிட்டன் தூதுவர் பதவவிலகியதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து தெளிவுபடுத்தப்படுதல் அவசியம். ஏனெனில் இது இலங்கையின் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம். அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்த வி;டயங்கள் இந்த விடயத்தில் குழப்பம் நிலவுவதை புலப்படுத்தியுள்ளன. மிகத்…
முசலி பிரதேச செயலகத்தினால் உருளை கிழங்கு வினியோகம்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலையினை கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் 7,500 கிலோ உருளை கிழங்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளினை அடுத்து நேற்று (01) முசலி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது. அதனை அடுத்து முசலி பிரதேசத்தில் உள்ள 21 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் ஒரு குடும்பத்திற்கு 3 கிலோ விகீதம் பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியா பாய்…
18 வயது முஸ்லிம் இளைஞனை 13 தினங்களாக காணவில்லை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 476, ஹிழுறியா ஜும்மா பள்ளிவாயல் வீதி, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட் சியாம் (வயது 18) எனும் முஸ்லிம் இளைஞனை கடந்த 19.09.2014 திகதி தொடக்கம் இன்று வரை காணவில்லை என அவரின் தந்தை இப்றாஹீம் றவூப் தெரிவித்தார். தனது மகன் முஹம்மட் சியாமை காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 20.09.2014ம் திகதி முறைபாப்பாடு செய்ததாகவும், அவரை கண்டவர்கள் 0779344130 எனும் எனது…
ஹஜ்ஜுப் பெருநாளுக்காக எதிர்வரும் 6ம் திகதி அரசாங்க, வங்கி விடுமுறை
முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமையை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விசேட அரசாங்க சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை (6ம் திகதி) அரசாங்கம் மற்றும் வங்கி விடுமுறையாக்கப்பட்டுள்ளது. துல்ஹிஜ்ஜஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஹஜ் பெருநாளை அக்டோபர் 6ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. முன்னர் ஹஜ் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை என குறிப் பிடப்பட்டிருந்ததால் அன்றைய தினமே அரச விடுமுறையாகக் குறிப்பிடப்பட்டது. (TK)
கிறீன்காட் விஸாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
கிறீன்கார்ட் என பரவலாக அறியப்படும் பல்வகைத்தன்மை விஸா விற்கான 2016ஆம் ஆண்டு லொத் தர் குலுக்கலுக்கான விண்ணப்பங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று இரவு 9.30 முதல் நவம்பர் மூன்றாம் திகதி இரவு 9.30 மணிவரை ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை குறித்த காலப்பகுதியில் www.dvlottery.state.gov ஆலிஸ என்ற இணை யத்தளத்தினூடாக மாத்திரமே சமர்ப் பிக்கமுடியும். இந்த கிறீன்கார்ட் விஸா விண்ணப்பம் தொடர்பான விபரங்களை usvisas.state.gov என்ற இணையத்தளத்தில் Diversity Visa என்ற பகுதியில்…
தேர்தலுக்கு தயாராகுமாறு சு.கவினருக்கு பணிப்புரை
கே.பாரதிராஜா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புகளால் கொழும்பு அரசியல் களம் பரபரப்படைந்துவரும் நிலையில், தேசிய தேர்தல் ஒன்றுக்குத் தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்க ளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களிடையே இடம்பெற்றுவரும் கருத்து…
மஹிந்தவின் வத்திக்கான் விஜயத்துக்கு பிறகே ஜனாதிபதித் தேர்தல் ஆலோசனை
அ.அருண் பிரசாந்த் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வத்திக்கான் விஜயத்திற்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச் சரவையின் பேச்சாளரும் ஊட கத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல நேற்று தெரிவித்தார். அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகவிய லாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் 25 வீத மின்கட்டண குறைப்பையும் இதன் போது அமைச்சர்…
ரணிலிடம் நாம் கற்க வேண்டும் – மஹிந்த தெரிவிப்பு
கே.பாரதிராஜா தோற்றாலும் வெற்றிபெற்று விட்டோம் என்று எப்படிக் கூறுவது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாக எதிர்க்கட்சி செய்த பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊவா மாகாண ஆளுந்தரப்பினர் பதவிப் பிரமாண நிகழ்வில் உரையாற்றியபோதே மேற்கண்ட வாறு தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் மேலும் தெரிவித்தவை வருமாறு, வட…
