News
பேஸ்புக் காதலால் பிக்கு கைது
பேஸ் புக் ஊடாக 18 வயது யுவதியை காதலித்து ஏமாற்றிய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமாகி தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிய பிக்குக்கு எதிராக குறித்த யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரான பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்னர்.இதன்போது எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளார்.பௌத்த பிக்கு குறித்த யுவதியிடம் தம்மை சாதாரண ஓர்…
இலங்கையின் சூழ்ச்சியால் ஜெயலலிதா கைது.?
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி இடம்பெற்றுள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.அதில் பேசிய அவர்,சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. தீர்ப்பை நீதிபதி படித்தபோது, “நீங்கள் மக்கள் நம்பிக்கையை…
ஒக்ரோபர் 6 வரை ஜெயா சிறையில்
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், பிணை கேட்டு, ஜெயலலிதா தரப்பில், கர்நாடகா உயர் நீதிமன்றில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று கூடிய சிறப்பு அமர்வு, இந்த மனு மீது விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணையை வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை கதவினை அடைத்து வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
எம்.ரீ.எம். பாரிஸ் /எம்.ரீ.எம். பஹத் / அஹமட் இர்ஸாட் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (29) திங்கட்கிழமை காலை பாடசாலையின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையின் உயர் தர விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டு, அருகாமையில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பாடசாலை மாணவர்கள் குற்றஞ்சாட்டி இவவார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனைப் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நலன் கருதியே, இப்பாடசாலைகள் ஆண், பெண் பாடசாலை என வெவ்வேறாகப்…
இஞ்சி, மஞ்சல் பயிர் செய்கை வாகரை விவசாயிகளுக்கு வெற்றியளித்துள்ளது
எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை முறையிலான பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் வாகரை வடக்கு பிரதேச செயலாளர் செல்வி எச்.ஆர். ராகுலநாயகி அவர்களின் வழிகாட்டலில் வேள்ட் விசன் லங்கா நிறுவனத்தின் வாகரை பிராத்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புனானை கிழக்கு குகனேசபுரம், கேனிநகர் பிரதேசத்தில் கெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு இஞ்சி, மஞ்சல் பயிர் செய்கை செய்வதற்கான…
எரிசக்தி சேமிப்பு திட்டத்தினுடாக தொழிற்பேட்டைகள் 20% மின்வலு பயன்பாட்டை குறைக்க வேண்டும்’ – அமைச்சர் ரிஷாட்
இலங்கையின் பல உயர்மட்ட உற்பத்தி நிறுவனங்கள் முதல் முறையாக மின்வலு தொழில்துறை முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வெற்றியின் விளைவாக, தற்போது இரண்டாவது மின்வலு உற்பத்திக்கான முயற்சியில் துணிகரமாக செயற்படுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டுவருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (26.09.2014) கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 12ஆவது மின்வலு சர்வதேச எக்ஸ்போ கண்காட்சி- 2014இன் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட்…
புலமைப்பரிசில் மீள்திருத்தம் ; ஒக்ரோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம்
நேற்றைய தினம் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் மீள்திருத்தத்திற்கு ஒக்ரோபர் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பில் இலங்கை வரும் ஹயாத் மதானி
இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் செயலாளர் நாயகம் ஹயாத் மதானி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை அடுத்து, அவர் இலங்கை வரவுள்ளதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மதானியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக அவரது அதிகாரிகள் இலங்கைக்கு வந்து, விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரி வரலாற்றில் முத்திரை பதித்த பாத்திமா எப்.எம்.
பிறவ்ஸ் முஹம்மட்) கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரின் ஊடகப்பிரிவும் அதன் பழைய மாணவிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாத்திமா எப்.எம். கடந்த 20ஆம் திகதி சனிக்கிழமை வெற்றிகரமாக ஒலிபரப்பானது. அடுப்படிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பெண் சமுதாயம் இப்போது சகல துறைகளிலும் தங்களது இருப்பிடங்களை தக்கவைத்துள்ளனர் என்பதை இந்த வானொலி மூலமாக பாடசாலை மாணவிகள் நிரூபித்துக்காட்டினார்கள். ஒருநாள் சேவையாக ஒலிபரப்பான பாத்திமா எப்.எம். அனைவரது மனதிலும் பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை புடம்போட்டுக் காட்டியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக்…
புலமைப் பரீட்சையால் கண்ணீர் சிந்திய பெற்றோர்கள்.!
முஹம்மட் ஜெலீல் நிந்தவூர் 2014 ம் ஆண்டிற்கான ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தம்பி, தங்கையர்கள் அனைவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து நேற்றைய தினம் எமது பிரதேசங்களில் சித்தியடையாத மாணவர்கள் சகிதம் மாணவர்களின் பெற்றோர்கள்கூட கண்ணீரில் மூழ்கியதை காணக்கிடைத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது, இது தவிர சில பொற்றோர்கள் தமது குழந்தைகளை வெறித்தனமான பேச்சுக்களால் திட்டித்தீர்த்தும் அடித்தும்மிருக்கின்றார்கள். உண்மையில் இது பெற்றோர்களின் அறியாத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. இதுதான் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கு…
பதுளை நகரில் தற்பொழுது பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்
-ZIMAM AMMAR- பதுளை நகரில் பதுளை பிரதேச செயலகம் முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடவளை நியூஸ் பதுளை செய்தியாளர் சிமாம் அம்மார் தெரிவித்தார்.திவிகிரிய திட்டதின் கீழ் பயனடைந்து வந்த பிரதேச விவசாயிகள் திவினெகும திட்டம் அமுலுக்கு வந்த பின்னர் அதனூடாக தமக்கு அசாதாரனம் நிகழவதாக கூறி திவினெகும திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.குறித்த ஆர்பாட்டத்தில் சுமார் 200 க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
பலசேனாவுடன் இணைந்து 969 அமைப்புக்கள் செயற்படும் ; அஸின் விராது தேரர்
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க மியான்மாரின் 969 அமைப்பு பொது பல சேனாவுடன் கைகோர்த்து செயற்படப் போகிறது அதன் நிறுவுநர் அஸின் விராது தேரர் நேற்றுக் கொழும்பில் வைத்து பகிரங்கமாக அறிவித்துள்ளார். விராது தேரரின் வருகையே முஸ்லிம் மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் இந்த பகிரங்க அறிவிப்பு முஸ்லிம்களின் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் மேலும் கிளப்பிவிட்டுள்ளது. உள்நாட்டு அமைப்பான பொதுபல சேனா அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இலங்கையர்…
