Headlines

எனக்கு பள்ளிவாசலுக்குச் செல்லக்கூட முடியாத நிலை இருக்கிறது – அசாத் சாலி

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான அசாத் சாலி, மத்திய மாகாண சபை உறுப்பினராக உள்ளார். முஸ்லிம் தரப்பில் இருந்து அரசாங்கத்தை விமர்சிப்பதில் முதலாமவராகவும் உள்ளார். இதன் காரணமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அவரது கைத்துப்பாக்கிக்கான லைசென்ஸை புதுப்பிக்க பொலிசார்…

Read More

கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு நிகழ்ச்சி. ஏற்பாடு Sri Lanka Da’wa Centre – Qatar இடம் MIC Sports Club– Ummsaeed Time 05/10/2014 (காலை 9 இலிருந்து ) பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள் . جـــــــزاكم الله خيـــــــــــــــــــــــرا ،،،،، Sri Lanka Dawa Centre Qatar – SLDC…

Read More

ஞானசாரர் விவாதத்திற்கு செல்வாரா..?

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் நேரடி விவாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்னெடுத்துவரும் பொய் பிராசரங்கள் குறித்தே இவ்  நேரடி விவாதத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார். பொதுபல சேனாவின் சங்க சம்மேளன மாநாடு கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது…

Read More

மக்கள் மன்றம் அரசியல் நிகழ்ச்சியில் உங்கள் கேள்விகளை Y.L.S ஹமீடிடம் கேளுங்கள்

ஊடகப்பிரிவு தமிழ் எப்.எம் வானொலியில் நாளை நடைபெறவுள்ள மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை எல் எஸ் ஹமீட் கலந்து கொள்கின்றார். இந்நிகழ்சி நாளை காலை 08-10வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நேயர்களும் தங்களது கேள்விகளை நேரடியாக வை எல் எஸ் ஹமீடிடம் கேட்க முடியும்  107.8 அலைவரிசையில் இவ் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகின்றது  

Read More

ஜெயாவுக்கு நீதி கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண் டிக்கப்பட்டு, பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலி தாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று ‘மெளன உண்ணா விரத அறப்போராட்டம்’ நடத்தினர். இந்திய நாடாளுமன்ற வளா கத்திற்கு உள்ளே அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், இந்திய நாடாளுமன் றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக…

Read More

ஜனாதிபதி மகிந்தவிற்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் தளர்ச்சி தெரிவதைதான் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது உணர்ந்ததாக அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக வெளியான செய்திகளையே அமெரிக்கா நிராகரித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் வெளிவிவகார…

Read More

குறைந்தது எரிபொருளின் விலை!

சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் நிலவும் கேள்வியுடன் ஒப்பிடும் போது சமமான எரிபொருள் விநியோகம் காணப்படுவதாக சர்வதேச வலுசக்தி முகவர் நிறுவனம் முன்வைத்துள்ள கருத்துக்கு அமைய சவுதி அரேபியா எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பின்படி பிரன்டி மசகெண்ணை ஒரு கலன் 93 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. 2012 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பதிவாகும் ஆதிகூடிய…

Read More

தமிழகத்தின் புதிய முதல்வரின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கச்சத்தீவை மீள பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்திருந்தார். எனினும், அவ்வாறு செய்ய முடியாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்வர் மீண்டும் அது குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Read More

20 வீத பால்மா மாதிரிகளில் டீசிடீ கலப்பு

கடந்த ஆண்டு முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகளில் 20 சதவீதமான பால்மாக்களில் டீசிடீ இரசாயன  நச்சுப் பொருள் கலந்துள்ளதாக   தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டில் 84 ஆயிரம் மெற்றிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த வருடத்தில் 6,000 மெற்றிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மாக்களும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தினால் டீ.சி.டீ பரிசோனை…

Read More

கூட்டமைப்புடன் பேசப்போவதில்லை- மு.கா.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து  பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் இந்த சந்திப்பு நடத்தப்படவிருந்தது.  எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த சந்திப்பு நடத்தப்படவில்லை. எதிர்வரும் வாரத்தில் கொழும்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.அதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தமிழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி…

Read More

ஹஜ் கடமை – செல்பி?

புனித ஹஜ் கடமையின்போது யாத்திரிகர்களிடம் சுயமாக படம் பிடித்துக்கொள்ளும் ~செல்பி’ படங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில் அதுகுறித்து மதத்தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் அதிகரித்துள்ளன. ஹஜ் கடமையின்போது யாத்திரிகர்கள் தம்மை தாமே படம்பிடித்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதில் பிரதான வழிபாடான கஹ்பாவை வலம்வரும் போதும் செல்பி படங்கள் எடுத்து சமூக தளங்களில் போடுகின்றனர். புனித தலத் திற்குள் கெமரா இணைக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளுக்கு நிர்வாகத்தினர் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டதை அடுத்தே யாத்திரிகர்களிடம் இந்த பழக்கம் தொற்றியுள்ளது. இந்த செல்பி…

Read More

சிரியாவில் பாடசாலையில் குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் மரணம்

சிரியாவில் அரசுப் பள்ளி ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவின் கோம்ஸ் நகரில் நேற்று அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த 41 குழந்தைகள் பலியாகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல மாணவர்களைக் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை…

Read More