News
ஊவாவின் முதலமைச்சராக சீந்திர சத்தியப்பிரமாணம்
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சீந்திர சேனாநாயக்க நேற்றுக்காலை 9.14 மணிக்கு சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் ஆளுந்தரப்பு உருப்பினர்களும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். இதேவேளை, ஊவா மாகாண அமைச்சர்கள் நால்வரினதும் பதவிப்பிரமாணம் பிற்போடப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடு திரும்பியதையடுத்தே இவர்களுக்கான பதவிப்பிரமானத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற…
பிணை மனு மீண்டும் ஒத்திவைப்பு- ஜெயலலிதா தொடர்ந்து சிறையில்
ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை ஒக்டோபர் மாதம் 7-ம் திகதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை இன்று 10.30 மணியளவில் நடைபெற்றது. நேற்று இரவு அரசு சிறப்பு வழக்கறிஞராக அவசரம் அவசரமாக நியமிக்கப்பட்ட பவானி சிங் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்னகலா, ஒக்டோபர் 7ம் திகதிக்கு ஒத்திவைக்க…
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் நாடளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதலாம் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது.முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது 2050 ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
இந்திய கற்கைநெறி வழிகாட்டல் கருத்தரங்கு
இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இந்திய கற்கை நெறி தொடர்பான கருத்தரங்கும்,ஆலோசனை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இன்று காலை 10மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் இந்திய கற்கை நெறியினை யாழ்ப்பாணத்திலுள்ள மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதுடன் அவர்களும் இந்தியாவிற்குச் சென்று கற்கை நெறியை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.இந்திய அரசு எட்சில் நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் இந்த கற்கை நெறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் இந்நிகழ்விற்கு இந்திய பதில் துணைத் தூதுவர் எஸ்.டி மூர்த்தி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொழில்துறை வளைய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 460, 000 அமெரிக்க டொலர்
தென்மாகாணத்தில் பாரிய கைத்தொழில்பேட்டையாக விளங்கும் ‘பட அத’ (Bata-Ata Industrial Zone) தொழில்துறை வளையம் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உடனடி மெக வசதிகளை பெற்றுக்கொண்டுள்ளது. தங்காலையில் அமைந்துள்ள இத்தொழில்துறை வளையத்திற்கு கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் விஜயத்தினை மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவ்வயையத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த குறைப்பாடுகளை ஆராய்ந்து வந்ததுடன் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். சில குறைப்பாடுகளை அமைச்சர் 24 மணிநேரத்துக்குள் தீர்த்து…
சுற்றுலா பயணிகள் கையேடு வெளியீடு
யாழ். மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கையேடு இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா இடங்கள், அவசர தொலைபேசி எண்கள் மற்றும் பாதை விபரங்கள் அடங்கிய முதலாவது கையேடு இன்று வெளியிட்டுவைக்கப்படுகிறது.வெளிமாவட்ட மக்களின் சிரமங்களை நீக்குவதற்காகவே இந்த கையேடு வெளியிடப்படுகிறது.இந்தக் கையேட்டில் தெரிவு செய்யப்பட்ட 52 இடங்கள் மட்டுமே காணப்படுகின்றன….
பொதுபல சேனாவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் கண்டனம்
‘பொது பல சேனா முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் சமய ஸ்தாபனங்கள் மீதும். விடுத்திருக்கின்ற அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு போதும் வாழவுமில்லை அவ்வாறு வாழப்போவதுமில்லை’ என்பதை மிகத்தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றோம். யுத்தம் நடைபெற்ற காலங்களில் எங்கே இருந்தார்கள் என்றே தெரியாத ஒரு கூட்டம் யுத்தம் நிறைவடைந்ததும், ஏதோ வீராதி வீரர்கள் போன்று வெளியில் வந்து கடந்த 02 வருடங்களாக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திகொண்டு இருக்கின்றார்கள். நாட்டின் அமைதியின்மையில் ஆதாயம் தேடும் சில…
பலசேனா – விராது தேரரின் கூட்டுக்கு இலங்கையில் ஒருபோதும் இடமில்லை
பொதுபல சேனா மற்றும் மியன்மாரின் 969 கூட்டு சட்ட விரோதமானது. இந்தக் கூட் டணியின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது எனத் தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, இவ்விரு பெளத்த இனவாத அமைப்பு களும் இணைவதால் முஸ்லிம் கள் அச்சமடையத் தேவை யில்லை என்றும் தெரிவித்தார். இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பெளத்த அமைப்பான பொதுபல சேனா, சர்ச்சைக்குரிய 969 அமைப்பு டன் கைகோர்த்துள்ளது….
பலசேனாவின் அச்சுறுத்தல்: ஜனாதிபதி மஹிந்தவிடம் முறையீடு
பொதுபல சேனாவின் அச்சுறுத் தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் விடம் முறைப்பாடு செய்துள்ளது. பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதி ராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய மியன்மார் பெளத்த பிக்கு அஸின் விராதுவிற்கு விசா வழங்கக்கூடாது என ஜனாதிபதியிடம் முஸ்லிம் பேரவை அண்மையில் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கை தொடர்பில் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ் லிம் பேரவைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விராது…
இலங்கை தொடர்பில் மீண்டும் ஆராய்கிறது மனிதவுரிமைக் குழு
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயலகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் குழு, ஜெனீவாவில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தமது அமர்வுகளை நடத்தவுள்ளது.இந்தநிலையில் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளதாக அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேபோன்று, புருண்டி,…
அரசியலில் குதிக்கிறார் ரஜினி?
சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற பரபரப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாஜக தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தையடுத்து பாஜகவில்…
ஜப்பானுக்கு செல்வதே எனது இலக்கு ; யாழில் முதலிடம் பெற்ற மாணவன்
ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றியதாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான கபிசன் தெரிவித்தார்.மேலும் அவர் கருத்துதெரிவிக்கையில்,நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளேன். ஜப்பானுக்கு செல்வதை இலக்காகக் கொண்டு இந்தப் பரீட்சைக்குத் தோற்றினேன்.
