News
பாராளுமன்றத்தில் குண்டர்களாம்; கண்டு பிடித்த பொதுபல சேனா
நாடாளுமன்றத்தில் குண்டர்கள் இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமது கொள்கைகள் மிக தெளிவாக உள்ளன. நாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை ஏற்க தயாராக இருந்தால், கட்சி, நிறம், சின்னம் அல்லது இன என்ற வேறுபாடு இல்லாமல் பொதுபல சேனா ஆதரவளிக்கும். பொதுபல சேனாவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கொள்கைகள் தொடர்பில் சகல அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பை அனுப்பி வைக்க உள்ளது. பொதுபல சேனாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும்…
சட்டவிரோத இஸ்ரேலிடம் 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் பலஸ்தீன்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சிதைந்து போன பாலஸ்தீனத்தின் காசா நகரை புதுப்பிக்க, 24 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது ஜூலை 8ல் காசா பகுதியில் பயங்கர தாக்குதலை இஸ்ரேல் துவக்கியது. 50 நாட்கள் நடந்த தாக்குதலில், காசாவின் பெரும்பகுதி சிதைந்தது. பாலஸ்தீன மறுகட்டமைப்புக்காக நன்கொடையாளர்கள் மாநாடு, அக்., 12ல், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடக்க உள்ளது. அதில், பாலஸ்தீனம் ரூ.24 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்க உள்ளது.
போராளிகளின் பிடியில் லிபியா (வரைபடம் இணைப்பு)
1.சிவப்பில் இருப்பது : லிபியாவின் உண்மையான புரட்சியாளர்கள் வசமுள்ள பகுதிகள். கடாபிக்கேதிராக போராடி உருவாக்கிய புரட்சியை பாதுகாக்கும் புரட்சிப் படைகள்தான் லிபியாவின் பெரும்பாலான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2.மஞ்சளில் இருப்பது : இந்தப் புரட்சிப் படைகள் ஏனைய குழுக்களுடன் இணைந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலப்பகுதி. 3.பச்சையில் இருப்பது: புரட்சியைக் தோற்கடிக்க கலீபா ஹப்தர் எனும் முன்னால் இராணுவ ஜெனரலின் படைகள் வசமுள்ள நிலப்பகுதி. இந்த அமெரிக்க ஏஜென்டை வைத்து லிபிய புரட்சியை புதைகுழிக்குள் தள்ள எமிரேட்ஸ், சீசி…
சகோதரி தவக்கல் கர்மான், ஹஜ் செய்வதற்கு தடை
Abusheik Muhammed இம்முறை ஹஜ் செய்ய சவூதி அரேபிய ஆட்சியாளர்களால் தடுக்கப் பட்ட யமனிய புரட்சி ஆளுமைகளுள் சகோதரி தவக்கல் ஒருவர். மக்கா என்னமோ சவூத் குடும்ப பரம்பரை சொத்து போலவே கையாளப் படுவது கண்டனத்துக்குரியது.
றோயல் கல்லூரியில் முஸ்லிம் மாணவன் சாதனை
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 2014 ஆம் ஆண்டின் புலமைப்பரிசில் பரீட்சையில் றோயல் கல்லூரி மாணவன் முஹமட் தாஸின் முஹமட் ஆசிப் தமிழ் மொழி மூலம் தோற்றி 186 புள்ளிகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் ஆறாம் இடத்தையும் றோயல் கல்லூரியில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். உடதலவின்னயைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தாஸின் மற்றும் அல்-ஹிக்மா கல்லூரி ஆசிரியை ஷாமிலா பர்வின் தம்பதிகளின் கணிஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் பேச்சாளருக்கு ஹிருணிகாவின் பதிலடி..!
நாட்டில் பொலிஸாரை விடவும் நாம் சிறந்த முறையில் சேவையாற்றுவோம் என மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில், வெல்லம்பிட்டிய சேதவத்த சித்தார்த்த வித்தியாலயத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தவிர்ப்பு நிவாரண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வோர் மற்றும் செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும் என குறிப்பிட்டேன். யார் விற்பனை செய்கின்றார்கள் என்று ஹிருணிகா சொன்னால்,…
சர்வதேசத்திற்கு ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை!
இலங்கை விவகாரங்களில் தலையீடும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன. புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது….
பொருத்தமற்ற ஆசனத்தில் அமர மாட்டேன் – மேர்வின்
அரசியலிலிருந்து ஓரம் கட்ட சூழ்ச்சி செய்யப்பட்டதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். சேர் டி.பி. ஜயதிலக்கத்தான் களனி தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர், அவர் பிரதமராகக் கூடிய தகுதியைக் கொண்டவர். உட்கட்சி சூழ்ச்சித் திட்டங்களினால் அவர் ஓரம் கட்டப்பட்டார். சூழ்ச்சித்திட்டமொன்றின் மூலம் இந்தியாவின் உயர்ஸ்தானிகராக பதவி வழங்கப்பட்டது. அதே வேளையை எனக்கும் செய்ய சிலர் முயற்சித்தார்கள். ஒரு ஆண்டும் இரண்டு மாதங்களும் களனி தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்….
சூடுபிடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விவகாரம்
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனினும் என்ன குற்றச்சாட்டு என்ற விடயம் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த வாரத்தில் ஜனாதிபதி குழுவினர் அமரிக்காவுக்கு சென்றிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிறிஸ் நோனிஸின் கன்னத்தில் அறைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து நோனிஸ் தமது பதவிவிலகல் கடித்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெளியுறவு அமைச்சின்…
பொதுபலசேனாவின் நிதிச் செயலாளர் கைது!
பொதுபல சேனா அமைப்பின் நிதிச் செயலாளரான வெல்லம்பிட்டியே சுமணதம்ம தேரர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 75 லட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நெருங்கிய சகாவான சுமணதம்ம தேரர் மீது அந்த அமைப்பில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுமணதம்ம தேரர் பேலியகொடவில் உள்ள வீடொன்றில் ஒழிந்திருந்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை…
அசின் விராது + 969 அமைப்பு தீவிரவாதியல்ல!
மியன்மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயமல்ல. இலங்கைக்குள் குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் இல்லையென தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெளஹித் ஜமாஅத் அமைப்பிற்கு இலங்கை வர அனுமதி உண்டெனின் விராது தேரர் ஏன் வரக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினார். மியன்மாரின் 969 அமைப்பின் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்று வினவிய போதே பிரிகேடியர் ருவான்…
ஞானசாரரை, மாடுகளுடன் ஒப்பிடும் சோபித தேரர்..!
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் முடியாது என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களின் கைப்பொம்மையாக சோபித தேரர் செயற்பட்டு வருவதாக ஞானசார தேரர் அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பதிலளிப்பதன் மூலம் அவர்களுக்கு ஓர் இடம் ஏற்பட்டு விடும் என சோபித தேரர் தெரிவித்துள்ளார். மாடுகள் இருக்கின்றனதானே? (இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு,அவ்வாறான மாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை) பதிலளிக்காமல் இருப்பதே…
