News
கணனியால் தாமதமான விமான சேவைகள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக விமான சேவைகள் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே! – ஜனாதிபதி மஹிந்த
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சிகள் மாத்திரமன்றி பொதுமக்களும் என்னுடன் இணைந்தே உள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், பொது வேட்பாளர் நானே தவிர வேறு யாரும் அல்ல. இந்த தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் தனி வேட்பாளர்களே ஆவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொல்காவெவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
யாழ்.பல்கலையில் மலர் வளையம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு என்று எழுதப்பட்ட வாசகமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை யார் வைத்தார்கள் என்பது அங்கள்ள எவருக்கும் தெரியாதுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக குறித்த மலர் வலையம் வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹக்கீமுக்கும் அரசுக்குமிடையிலான இரகசியம் அம்பலமாகிறது!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமை தொடர்பில் பல தரப்பிலுமிருந்தும் தொடர்ந்தும் அதிருப்தியே தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் ஹக்கீம் கூட இந்த விடயத்தில் இப்போது கவலைப்படுகிறார். உண்மையில் இந்தச் சட்டமூலத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஆதரவு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கான காரணம் பலருக்கும் தெரியாது. அதேவேளை, அமைச்சர் ஹக்கீமும் அந்தக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலரும் இந்த நிலைமை ஏற்பட்டதற்கான காரணத்தை வெளியில் சொல்ல முடியாதவர்களாக…
முஸ்லிம்கள் Facebookஐ எவ்வாறு கையாள வேண்டும்
ஓட்டமாவடி அஹமட் இர்சாட் இன்றைக்கு Facebook இல் நமது முஸ்லிம் சகோதரர்கள் செய்யும் அட்டகாசம் ஒன்றல்ல இரண்டல்ல. இந்த facebook ஆனது நமது சமுதாயத்தில் கூடுதலான மக்களின் இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் தொலைத்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சில வரம்புகளை நமக்கு போட்டுள்ளார்கள். அதில் பலவற்றை நாம் facebook இல் மீறிக் கொண்டிருக்கின்றோம். அதாவது நபி அவர்கள் ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் எப்படி பழக வேண்டும்…
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம் (படங்கள் இணைப்பு )
பூமுதீன் மன்னார் நாணாட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மண்டம் நேற்று திற்ந்து வைக்கப்பட்டது. வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இக் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்தனர். நாணாட்டன் பிரதேச மக்களின் தேவையைக் கருத்திற்கு கொண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினால் இக்கலாச்சார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்திநகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திர சிறி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக்,…
துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கு காத்தான்குடி அல்மனாரில்…
அல் மனார் ஊடகப்பிரிவு தேசிய தொழிற் தகைமை ஊடாக தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கொன்று எதிர்வரும் 15.10.2014 புதன் கிழமை மாலை 4:00 மணிக்கு அல் மனார், அர் ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இம்முறை க.பொ.த. உயர் தரப்பரீட்சை எழுதியவர்களும், தகவல் தொழில் நுட்பத்துறையில் பல்கலைக்கழகம் செல்லவிருப்பவர்களும் இக்கருத்தரங்கில் பங்கு கொள்ள முடியும். மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நூறு மாணவர்களை…
ரணில் களமிறங்குவது உறுதி – யானை சின்னம் விட்டுக்கொடுக்கப்படும்…?
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் அக் கட்சியின் தேர்தல் ஆணையகம் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி இருபது உறுப்பினர்களை கொண்ட தேர்தல் கமிட்டி நியமிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரைக் களமிறக்குவது, தேர்தல் கொள்கை, வேறு…
எம்முடன் சேர்ந்து பயணம் செய்ய முடியாதவர்கள், தமக்குப் பொருத்தமான இடமொன்றுக்கு சென்று விட முடியும்
மஹிந்த சிந்தனையின் முன் நோக்கு திட்டத்திற்கமைய செயற்பட கூடிய அதிகாரிகளுடன் இணைந்து கடந்த மாகாண சபையில் செயற்பட்ட விதத்தை விட பன்மடங்காக செயற்பட்டு ஊவா மாகாணத்தை எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் நாட்டின் சிறந்த மாகாணமாக மாற்றியமைப்போம் என மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபையின் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; அரச இயந்திரமும் அரசியல்வாதிகளும் ஒரு வண்டியின் இரு சக்கரம்…
மன்னார் மாவட்டம் – அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு )
பூமுதீன் மன்னார் மாவட்டம் – அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் வன்னி மாவட்ட அபிவிருத்த்தி குழு தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பின் பேரில் – அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ கலந்து கொண்டபோது
வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது- அரசாங்கம்
வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருட இறுதிக்குள் மீள கையளிக்கவேண்டும் என்று வட மாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் வட மாகாண சபையில் யாப்புக்கு முரணான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்காகவே தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எதுவித இணக்கப்பாடும் கிடையாது என…
கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிவேக பாதை – 19 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
கொழும்பு – கண்டி அதிவேக பாதையின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட பணிகள் பொத்துஹர-ரம்புக்கன மற்றும் ரம்புக்கன-கலகெதர இடையே ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையைச் சேர்ந்த எட்டு ஒப்பந்தக் காரர்களுக்கு இந்த வீதி நிர்மாணப்பணி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
