Headlines

அபிவிருத்தியில் மூழ்கும் வன்னி…… அமைச்சர் றிஷாதுக்கு மக்கள் நன்றி ( படங்கள் இணைப்பு )

ஊடக பிரிவு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம்    மன்னார் மாவட்டம் – அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மானம் செய்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 220 வீடுகளுகளை நிர்மாணிப்பதற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், வழங்கப்பட்ட குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான…

Read More

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 320 ரூபாயில் இரயிலில் பயணிக்கலாம்..!

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளின் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன. குளிரூட்டப்பட்ட கடுகதி  ரயில் சேவையில் பதிவுசெய்து பயணிப்பதற்கு   1,500 ரூபாய்யும் முதலாம் வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு 900 ரூபாயும் இரண்டாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  800 ரூபாயும் மூன்றாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  500 ரூபாய் மற்றும் மூன்றாந்தர வகுப்பில் சாதாரணமாகப் பயணிப்பதற்கு  320 ரூபாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது”

சட்டத்தை காலில் உதைத்து தள்ளிவிட்டு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது என  ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் போட்டியிடுவது பொது வேட்பாளரா அல்லது வேறும் ஒர் வேட்பாளரா என்பதனை விடவும், சட்டவிரோத தேர்தலை நடத்த அனுமதிக்கக் கூடாது. அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்படுவது அரசாங்கத்திற்கு வாடிக்கையாகியுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தலையும் அறிவிக்க அரசாங்கம் தயாராகி…

Read More

அதுரலிய ரதன தேரரின் முக்கிய முடிவு, இன்று வெளியாகிறது..!

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் இன்று 14-10-2014  முக்கிய சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தீர்மானமிக்க ஓர் சந்திப்பினை நடத்த உள்ளார். தூய்மையான நாளை என்ற அமைப்பின் தலைவராக செயற்பட்டு வரும் ரத்ன தேரர், அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருந்தார். தமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்….

Read More

எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்க ஐ.தே.க. குள் இணக்கப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் எதிரணி வேட்பாளராக பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதில் ஐக்கிய தேசியக்கட்சி தயாராகி வருகின்றது. பொது எதிரணியில் களமிறங்குவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு சவாலானதும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொது வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் எதிரணி வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு…

Read More

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்க சர்வதேச சக்திகள் முனைகின்றன: ஹிஸ்புல்லாஹ்

எம்.எஸ்.எம். நூர்தீன் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில்  இடைவெளியை ஏற்படுத்தி பிரச்சினையை உருவாக்க சர்வதேச சக்திகள்  முனைந்துவருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான நிதியுதவி  458 பேருக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் திங்கட்கிழமை (13) வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது,  முழுமையாக சேதமடைந்த 79 வீடுகளின் புனரமைப்புக்காக தலா  பயனாளிக்கு 100,000 ரூபாய்…

Read More

யாழ். முஸ்லிம்களுக்கும் வீடுகள் வேண்டும்! ஜனாதிபதியிடம் – அமைச்சர் றிஷாத் முறையீடு

எ.எச்.எம்.பூமுதீன் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து மீளக் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு வீடுகளை வழங்கும் வகையில் திட்டமொன்றை உருவாக்கி செயற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார். சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு அமைச்சர்களுக்குப் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்ரசிறி, யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைச்சர்களுக்கு உதவியாகச் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார். வட…

Read More

காத்தான்குடி இஸ்லாமிய நூதன சாலை: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழு துபாய் பயணம்

பழுலுல்லாஹ் பர்ஹான பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பெரும் முயற்சியின் பயனாக காத்தான்குடியில் அமைக்கப்பட்டுவரும் இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலையின் இறுதிக் கட்டப் பணிகளை பூரத்தி செய்வதற்கான மேலதிக அனுபவங்களையும், ஆலோசனைகளையும் பெறுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய, தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய தலைமையிலான விஷேட குழுவொன்று நாளை (14) செய்வாய்க்கிழமை மாலை துபாய் நாட்டுக்கு பயணமாகவுள்ளது. இவ் விஷேட குழுவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக், நூதனசாலைகள்…

Read More

அரசாங்கம் கவிழும் அபாயத்தில் உள்ளது! அமைச்சர் டியூ குணசேகர

வார இறுதி ராவய சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவுகின்றது. மஹிந்த சிந்தனை மூலம் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் இதுவரை முழுமை பெறவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிப்பு தொடர்பான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. யுத்தம் முடிவுற்ற பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்துச் செய்யும் 18வது சட்டதிருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்தது. நாங்களும் நிபந்தனையுடன் அதற்கு ஆதரவளித்தோம். ஆனால்…

Read More

உடல் நிலையை காரணம் காட்டி ஜெயலலிதா ஜாமின் கேட்டால் சிக்கல்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கேட்டால் அது அவரது வருங்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னுதாரணமாக ஹரியானாவின் சட்டசபைத் தேர்தலுக்காக முனைப்புடன் செயற்பட்டு வரும் ஓம் பிரகாஷ் சௌத்தாலாவுக்கு நடந்த நிலைமையை இங்கு கூறலாம். 2013 ஜனவரியில் ஓம் பிரகாஷ் சௌத்தாலாவும் அவரது 54 சகாக்களும், ஆசிரியர்கள் பணியிட வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் போது ஊழல் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 10 வருட…

Read More

இலத்திரனியல் அடையாள அட்டை 2016இல் நடைமுறைக்கு

இலத்திரனியல் முறையிலான அடையாள அட்டை 2016ம் ஆண்டளவில் நடைமுறைக்கு வருவதாக ஆட்பதிவு  திணைக்களத்தின் பணிப்பாளர் சரத்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த வருடத்தில் அடையாள அட்டை எடுத்தவர்களுள் அதிகமானவர்கள் க.பொ.த சாதாரண  தர பரீட்சையில் தோற்ற இருப்பவர்கள் தான். இந்த வருடத்தில் இலங்கையில் 1 மில்லியன் அடையாள அட்டைகள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் க.பொ.த சாதாரண பரீட்சைக்காக 3700 ஆயிரம் பேர் அடையாள அட்டைக்கு இந்த வருடம் விண்ணப்பித்துள்ளனர். இதேவேளை இலங்கை வாழ் மக்களுக்கு அடையாள…

Read More

24 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த யாழ்தேவி

பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.09 மணியான சுபமுகூர்த்த நேரத்தில் ஆரம்பித்துவைத்தார். வரும் வழியில் கொடிகாமம், நாவற்குழி ஆகிய ரயில் நிலையங்களையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். 24 வருடங்களுக்கு பின்னர் யாழ்தேவி யாழ்ப்பாணத்தை இன்று வந்தடைந்தது. வழிநெடுக்கம் மக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் யாழ்தேவியை வரவேற்றனர். அத்துடன் ரயிலிலும் பலநூற்றுக்கணக்கானவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணித்தார். இன்று முற்பகல் 11.20 மணிக்கு யாழ்.பிரதான ரயில் நிலையத்தை யாழ்.தேவி வந்தடைந்தது. அங்கு ஜனாதிபதி மற்றும்…

Read More