News
பாகிஸ்தானின் நிதியுதவியில் மன்னாரில் 220 வீடுகள் நிர்மாணம்
வட மாகாணத்தின் மன்னார் மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேசங்களில் 220 வீடுகளை நிர்மாணிக்க பாகிஸ்தான் அரசாங்கம் முன்வந்துள்ளது. யுத்தகம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்கியுள்ளது. இதற்கான இலங்கை அரசாங்கத்திடம் காசோலை நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காசீம் குரைஷி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் இந்த காசோலையினை கையளித்தார். கைத்தொழில்…
வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான மின்சார விநியோகத்தை திறந்து வைத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (படங்கள் இணைப்பு )
வவுனியா, கண்டான்குளம் பிரதேசத்திற்கான மின்சார விநியோகத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று திறந்து வைத்தபோது வைப்பதை படங்களில் காணலாம்.
பாலியல் துஸ்பிரயோக வழக்குத் தீர்ப்பு ஒரு கண்ணோட்டம்!
அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது. சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். குற்றச் செயல் ஒன்றை விசாரணைக்குட்படுத்தும் போது குற்றச் செயல் புரியப்பட்ட சந்தர்ப்பமும், சாட்சியும் முக்கியமாகும். இங்கு உதாரணத்திற்காக நடந்து முடிந்த…
சிறுவர் ,முதியோர், மாற்றுத்திறனாலிகள் தின விழா (படங்கள் இணைப்பு )
ஜஹான்ஸர் சிறுவர் ,முதியோர், மாற்றுத்திறனாலிகள் தின விழா இன்று 2014.10.09 செட்டிக்குளம், பிரதேச செயலகத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் வெகு விமர்சையாக நடை பெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய போகும் மஹிந்த ராஜபக்ச – கயந்த கருணாதிலக்க
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் எனத் தெரிந்து கொண்டே சிலர் பொய்யாக பிரச்சாரம் செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் ஜனாதிபதி வெற்றியீட்டுவார் என அரசாங்கத்தினால் ஒரம் கட்டப்பட்டுள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் கூறுவது மனச்சாட்சிக்கு இணக்கமாகவல்ல. ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய சாத்தியமில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். சிரேஸ்ட…
கற்பழிக்க முயன்றவனை கத்தியால் குத்திய பெண்ணுக்கு தலை துண்டிப்பு
ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு சரத் பொன்சேக்காவின் ஆதரவு..??
நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, நேர்மையான பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பதா என்பனவே இந்த மூன்று விடயங்கள் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ராஜகிரிய மெட்டி அம்பலம பகுதியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்…
இலங்கை விமானத்திற்கு நடுவானில் இயந்திரக் கோளாறு…!
இலங்கையின் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து கொழும்பு புறப்பட்ட விமானமே இவ்வாறு நடு வானில் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் ஓர் என்ஜின் இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எயார்பஸ் ஏ320 ரக விமானமே இவ்வாறு இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. இந்த விமானத்தில் 142 பேர் பயணித்துள்ளனர். விமானம் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே இயந்திர கோளாறை கண்டு கொண்ட விமான ஓட்டி மீளவும் விமானத்தை…
ஆங்கில தினப் போட்டியில், தேசிய மட்டதிற்கு பாத்திமா ஷிம்றா தெரிவு
சுலைமான் றாபி அண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டியில் (English Day) நிந்தவூர் மினா பாடசாலையில் தரம் 08இல் கல்வி பயிலும் மாணவி செல்வி எம்.ஜே. பாத்திமா ஷிம்றா கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் பங்கு பற்றி 02ம் இடத்தினைபெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். மேலும் ஆங்கில தினப்போட்டியில் இம்மாணவி கோட்டம், வலையம் மற்றும் மாவட்ட மட்டங்களில் முதல் இடத்தினைப்பெற்று மாகாண ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்காக…
தமிழர்கள், பொதுபல சேனாவுடன் கொள்ளும் உறவு ஒரு எச்சரிக்கையாகும்…!
த. மனோகரன் நாட்டு மக்களிடையே சமத்துவம், இணக்கப்பாடு, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, மதிப்பளிப்பு போன்றவை இருந்தால் மட்டுமே நாடு வளம் பெறும். முன்னேற்றமடையும். இதைவிடுத்து இனப்பகை, எதிர்ப்புணர்வு, புறக்கணிப்பு, அடக்குமுறை போன்றவை மேலோங்கி செயற்பட்டால் நாடு அல்லல்படும். அவலப்படும். இதற்கு நமது நாடும் சான்றாகவுள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முடிவுகட்ட நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் முன்வர வேண்டும். நாட்டின் இன்றைய தேவையும் அதுவாகவேயுள்ளது. இதற்குத் தடையாக இருப்பவர்கள், ஊறு செய்பவர்கள், அதிகார நோக்கம் ö0காண்டவர்கள்…
2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 24 இல்
2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர்…
தனியார் பாடசாலை மாணவர்கள் அரச பாடசாலைகளில் உயர்தரம் கற்கலாம்
தனியார் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பொதுதராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்களை அரசாங்க பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு அனுமதிப்பது குறித்த சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குறித்த பிரச்சினை இந்த வாரத்தில் கடும் வாக்குவாதங்களுக்கு உட்படும் பிரச்சினையாக இருக்கும் என்று கல்வி அமைச்சின் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த சுற்று நிருபத்தை உடனடியாக அனுப்புமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கட்டளையிட்டுள்ளார். எனினும் கடந்த…
