News
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நீதியை நிலைநாட்டும் படி கோரி வாழைச்சேனையில் கவனயீர்ப்பு போராட்டம்
அன்மைக்காலமாக கல்குடாத் தொகுதியில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் மற்றும் கொலைச் சம்பவங்களை கண்டித்தும், மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வேண்டி, வாழைச்சேனை பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன. குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், அண்மையில் இப்பிரதேசத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்துவதாக மக்கள் சந்தேகம் கொள்வதனால், போலிஸ் தரப்பு நீதமான முறையில் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்…
வெற்றி நிச்சயம்- மார்தட்டும் மஹிந்த
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றி குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வெற்றி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. வாக்குகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளை தொகுதி அமைப்பாளர்கள் எடுக்க வேண்டும். எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லாத காரணத்தினால் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க…
மகிந்தவை 2005 ஆம் ஆண்டு சிறையிலடைத்திருக்க வேண்டும் : சரத் என். சில்வா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை என்ற சுனாமி நிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது. அப்போது, அவரது வேட்பாளர் அந்தஸ்து கேள்விக்குறியானபோது, அவர் மீதான குற்ற விசாரணையை நிறுத்தி சரத் என்.சில்வா தலைமையிலான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது….
சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது: சூறா சபை
பொதுபலசேனா அமைப்பும் மியான்மர் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான 989வும் இலங்கையினுள் இணைந்து செயற்படப் போவது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தேசிய சூறா சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய சூரா சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பொதுபலசேனா அமைப்பு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டைத் தொடர்ந்து இந்த இரண்டு முஸ்லிம் விரோத தீவிர வாதக் குழுக்களும் ஒன்றிணைந்து…
பாம்பை தேடும் ஞானசரர் !
“இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானது நாட்டுக்குள் பயங்கரமான சூழ்நிலை உருவாகும். எனவே, அரசாங்கம் படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் பொது பல சேனா இந்நிலை ஏற்பட ராயப்பு ஜோசப்பே காரணமாகும். எனவே, அவரை கைது செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தது. கொழும்பில் கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு…
அவுஸ்திரேலியாவிலிருந்து 20.000 மாடுகள் இலங்கை வருகின்றன
இலங்கையில் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் அவுஸ்திரேலிய கால்நடை நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்கொட் பேரெட்வேட் இடையே உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்துக்கிணங்கவே அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இறக்குமதி…
அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர்;மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அரசியல்வாதி
மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. அப்போது, ஆட்சியிலிருந்த மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதியாக அவர் 1998 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினராக இருந்துள்ளார். நால்வருடன் சேர்ந்து 2002 இல் ஒரு முஸ்லிம் வர்த்தகரை கொலை செய்த இவர், நாட்டை விட்டு ஓடினார்….
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் UNP செயற்திட்ட குழு இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் செயற்திட்ட குழு இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவால் செயற்திட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் 20 பேர் இக்குழுவில் அடங்குகின்றனர். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் செயற்படவேண்டிய விதம்…
பொது பல சேனாவின் விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! ACJU சார்பாக BBS உடன் SLTJ விவாதிக்கத் தயார்!
(sltj) கடந்த 28.09.2014 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பொது பல சேனா அமைப்பின் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம் தொடர்பாகவும், இந்த உலகுக்கு இறைவனால் அருளப் பெற்ற இறுதி வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கள் தொடர்பாகவும் பலவிதமான விமர்சனங்களும், இனவாததத்தை ஊக்குவிக்கும் விதமான கருத்துக்களும் பகிரங்கமாக வெளியிடப்பட்டமை தாங்கள் அறிந்ததே. பொது பல சேனாவின் இனவாத கருத்துக்களுக்கு எதிராகவும், திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்…
ஜாதிக ஹெல உறுமயவுக்குள் வெடிக்கும் முரண்பாடு!
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த தினத்தில் முன்வைத்த உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் சில சரத்துக்கள் தொடர்பில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த கட்சியின் ஊடக பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஸாந்த ஸ்ரீ வர்ணசிஙக தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் 19ஆம் திகதி மஹரகமவில் இடம்பெறவுள்ள கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிலமைகள், ஜாதிக ஹெல…
காடையர்களினால் சேதமாக்கப்பட்ட தர்காநகர் பள்ளிவாசல் இன்று திறப்பு!
மர்லின் மரிக்கார்’ அளுத்கம, தர்காநகர் கலவரத்தின்போது சேதமடைந்த தர்காநகர், மரிக்கார் வீதி வீட்டுத் திட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு 17ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு அஸர் தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வைபவத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாகவும் மேற்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஒபேமெதவல கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்ளுகின்றனர். இவ்வைபவத்தில் இப்பிரதேசத்திலுள்ள கந்த விகாரை, நாகந்த பெகொட, அம்பகஹகந்திய, மாலெவன்கொட,…
உண்மையில் நான் வெட்கப்பட்டேன் – முன்னாள் பிரதம நீதியரசர்
கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சியினால் இந்த கரத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சாதாரண குடிமகனாக அன்றாட தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நான் நரஹேன்பிட்டி பொது சந்தைக்கே செல்வேன். பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலத்திலும் பையை எடுத்துச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வது எனது வழக்கமாகும். அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, இவ்வாறு அண்மையில் நான்…
