News
சிக்கலில் ஜனாதிபதி!
ஆளும் கட்சியின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குமாறு பொலனறுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ கரலியத்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி…
அதிரடித் தீர்மானம் எடுக்குமா சமசமாஜக் கட்சி?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் ஆராயவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறையை ரத்துச் செய்யுமாறு தனது கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்தும் ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்ற போதிலும், ஜனாதிபதி அது தொடர்பில் கரிசனை காட்டவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கும் சமசமாஜக் கட்சி சில நிபந்தனைகளை முன்வைக்கும் என்று கூறப்படுகின்றது. 17வது திருத்தச்…
பரா ஆசிய விளையாட்டுப் போட்டி ; இலங்கைக்கு தங்கம்
பரா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. ஆடவருக்கான 200 டி-42 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் பிரசன்ன ஜெயலத் குறித்த தூரத்தை 25.87 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இலங்கையின் சார்பாக உபுல் இந்திக பெற்றுக்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையில் சந்தேகம்- டிலான் பெரெரா
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் எதிரான தடை நீக்கம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் சட்டரீதியான தீர்ப்பாகும். இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான தீர்மானமல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய…
நிந்தவூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான அவசர கலந்துரையாடல்
சுலைமான் றாபி ஆட்சி மாற்றம் எனும் அறைகூவலுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் சிரேஷ்ட அரசியல் பிரமுககர்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் வருடம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கான அவசர கலந்துரையாடல் 22.10.2014 ஐக்கிய தேசிய கட்சியின் நிந்தவூர் கிளையில் பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் நிந்தவூர் அமைப்பாளர் எம். றிபாக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், அனோமா கமகே, மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்…
சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வந்த விமானத்தில் இலங்கையர் திடீர் மரணம்
சிங்கப்பூரில் இருந்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையரொருவர், திடீரென அவ்விமானத்தினுள் மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. பொல்காவலையைச் சேர்ந்த 57 வயது நபரொருவரே இன்று (22) அதிகாலை 1.35 மணியளவில் திடீரென சுகயீனமுற்ற நிலையில் இவ்வாறு விமானத்தினுள் மரணமாகியுள்ளார். பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தை கவிழ்ப்போம்: ஐ.தே.க. சவால்!
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தை கவிழ்ப்போம் என ஐ.தே.க உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தற்போதிலிருந்தே தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றது. இதற்கமைய தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்களை ஜனாதிபதியின் சோதிடருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் விருப்பின்படியே தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் குற்றம் சுமத்தினார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; ஜனாதிபதி தேர்தலை ஜனவரி…
காணாமல் போன சிறுவன் பிச்சைகாரரிடமிருந்து மீட்பு
அம்பலாங்கொடை பஸ் தரிப்பிடத்தில் காணாமல் போன மூன்று வயதான சிறுவனை தம்புள்ளையிலுள்ள ஒரு பிச்சைக்காரரிடமிருந்து நேற்று புதன்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர். சிறுவனின் தாய், வேலைவாய்ப்பு தேடி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் இதனால் தனது தாயிடம் சிறுவனை விட்டு சென்றுள்ளார்.சிறுவன் அக்குரஸையை வசிப்பிடமாக கொண்ட பாட்டியிடம் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தனது பேரனுடன் பாட்டி அம்பலங் கொடையிலுள்ள பஸ் தரிப்பிடத்துக்கு சென்றபோது பிச்சைக்காரர் ஒருவர், பாட்டியை ஏமாற்றி சிறுவனை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் படங்கள் அனைத்து…
சமூக அலுவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் திவிநெகும வெற்றி பாதையை நோக்கி செல்கின்றது!
‘திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தினை நிறுவுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எவ்வளவு தடைகள் இருந்த போதிலும் அதன் நடவடிக்கைளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ இறுதியில் வெற்றி கண்டு அதனை அமைத்தனர். திவிநெகும ஒரு அபிவிருத்தி திணைக்களம். நிர்வாக அமைப்பு முறைமை இன்றி உத்தியோகபூர்வ இல்லாமல் இயங்கும் இலங்கையின் பொதுப்பணி துறையான இவ் திவிநெகுமவின் நடவடிக்கை சமூக மக்கள் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட்டதை தொடர்ந்து அது வெற்றியளிக்கப்பட்டது’ திவிநெகும…
குள்ளநரிக் கூட்டங்களின் சலசலப்புக்கு நாங்கள் ஒரு போதும் அஞ்சோம் – வடமாகாண சபை உறுப்பினர் – வை.ஜனூபர்
ஏ.எச்.எம்.பூமுதீன் குள்ளநரிக் கூட்டங்களின் சலசலப்புக்கு நாங்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டோம் என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் வை. ஜனூபர் வன்னி மாவட்டத்திலிருந்து இந்தக் குள்ளநரிக் கூட்டங்களை துரத்தியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் சூழ் உரைத்தார். முல்லைத்தீவு ஹிஜ்ரா புரத்தில் தையல் பயிற்சி நிலை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கொண்டவாறு காட்டமாக தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வனிகத்துறை அமைச்சருமான ரிசாத்…
”எனக்கு தெரியாது மஹிந்த ராஜபக்சவிற்கு சிங்களம் வாசிக்க தெரியுமா என்று” சரத் என் சில்வா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். “மஹிந்தவிற்கு மூன்றாம் தவணை முடியாது” என்ற தலைப்பில் மாத்தளை சணச அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அமைப்பிற்கு அமைவாக எந்தவொரு மஹிந்த ராஜபக்சவிற்கும் ஜனாதிபதி தேர்தலை தற்போதைக்கு நடாத்த அவகாசம் கிடையாது. எனக்கு தெரியாது மஹிந்த ராஜபக்சவிற்கு சிங்களம் வாசிக்க தெரியுமா என்று. தேவையென்றால் நீதிமன்றம் செல்லவும் தயார் அங்கு…
5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது
வன்முறையால் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது என ‘யூனிசெப்’ தெரிவித்துள்ளது. ஐ.நா. குழந்தைகள் நல நிறுவனமான ‘யூனிசெப்’பின் அமெரிக்க கிளை சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை வன்முறைக்கு பலியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் தங்கள் வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாயத்தில் பாதுகாப்பின்றி உள்ளனர். அதிகவேகமாக நகர்புறமயமாகுதல், வேலையின்மை, சமத்துவம் இன்மை போன்றவைகளால் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. உலகில் நாள் ஒன்றுக்கு…
