News
சிறுமியை கடத்திய பௌத்த பிக்கு – பொலிஸார் தேடுதல்
ஹொரணை, பட்டுவட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை கடத்திச்சென்றதாக சந்தேகிக்கப்படும் காவியுடையணிந்த நபரொருவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். – TM
தடைநீக்கத்தால் புலிகள் பலமடையக்கூடும் விழிப்பாகவே இருக்கிறது பாதுகாப்புத்துறை
புலிகள்மீதான தடையை ஐரோப் பிய ஒன்றிய நாடுகள் நீக்கு மானால், இதைப் பயன்படுத்தி தம்மை பலப்படுத் திக் கொள்வதற்கான முயற்சியில் இவ்வமைப்பு இறங்கக்கூடும் என்றும், எனவே, இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விழிப்புடனேயே இருக்கின் றது எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாள ரும் இராணுவப் பேச்சாளருமான பிரி கேடியர் ருவான் வணிகசூரிய நேற்று தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபி விருத்தி அமைச்சில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கேள்வி…
ஐ.நா.பொதுச்சபைக்கு மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இலங்கை விடயமும்!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கை யயான்றில் ஐ.நாவின் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் அல் d ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப் பிட்டுள்ளார். தன்னுடைய அலுவலகம் முன் னைய ஆணையாளர் நவநீதம்பிள் ளையின் கீழ் கடந்த ஒரு வருட காலப் பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையி லேயே அவர் இதனைக் குறிப்பிட் டுள்ளார். குறிப்பிட்ட காலப் பகுதியில் ஆணைக் குழு மூன்று நாடுகள் குறித்து விசா ரணைகளை முன்னெடுத்துள்ளது. சிரியா,…
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் ஆலோசிக்க விசேட குழு நியமனம்
2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவுசெய் யப்பட்ட அமைச்சர்களுக்கு ஒதுக் கப்பட்ட நிதித்தொகை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபை முதல் வரும் அமைச்சருமான நிமல் சிறி பாலடி சில்வா தலைமையில் 20 பேர் கொண்ட நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட் டுள்ளது என பிரதியமைச்சர் சந்திர வீரக்கொடி நேற்று சபை யில் அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை ஒரு மணிக்கு கூறியது. இதன்போது சபாநாயகரின் அநிவிப்பை விடுக்கும் வேளையிலேயே பிரதிசபாநாயகர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார்….
“தடுத்து நிறுத்தமுடியாத இலங்கை’ 2015 பட்ஜட் இன்று சமர்ப்பிப்பு!
ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட் டணி அரசு அடுத்த நிதி யாண்டுக்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் இதை பிற்பகல் 1 .30 மணிக்கு சபையில் சமர்ப்பித்து உரை யாற்றுவார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்குவதால், மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வானலவில் கனவு கள் தரும் வரவுசெலவுத்திட் டத்தையே அவர் சமர்ப்பிப் பார் என எதிர்பார்க்கப்படு கின்றது. ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான அரசின் இந்த பத்தாவது…
ஆயிரக்கணக்கானவர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பை அமைச்சர் றிஷாத் பெற்றுக்கொடுத்துள்ளார் – எஸ்.விஜிந்தன்
ஆர்.ரஸ்மின், ஏ.எச்.எம்.பூமுதீன் எமது மாவட்ட தமிழ் மக்கள் மீது அதிக பாசம் கொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு முல்லைத்தீவில் காமன்ட் ஒன்றை நிருவுவதற்கும் தீர்மானித்துள்ளார எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் முல்லை. மாவட்ட இணைப்பாளர் எஸ்.விஜிந்தன், ஒரே தடவையில் மூவாயிரம் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகளை வழங்குவது என்பது எவரும் செய்திராத பெரும் சாதனையாகும் எனவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மத்தி பொதுமண்டபத்தில்…
பாக். அரசின் நிதிக்கு மேலதிகமாக அமைச்சர் பெசில் ரூ. 130மி ஒதுக்கீடு
ஏ.எச்.எம் .பூமுதீன் வன்னி மக்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு வழங்கும் 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக – 130 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து குறித்த திட்டத்துக்கு உதவியளிக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன் வந்துள்ளார். இது தொடர்பான அதிகார பூர்வ அறிவித்தலை அமைச்சர் பசில் மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கபடவுள்ள வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்…
ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக அமெரிக்காவில் தாக்கப்பட்ட பெண் ??
ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக நதீம் மொஹ்சின் என்ற சகோதரி அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியின் பாரிக்லேஸ் வீதியில் தாக்கப்பட்டுள்ளார்.. இந்த கொடூரத்தை கண்டித்து அமெரிக்காவில் போராட்டாங்களை நடைபெற்றது.. காவல்துறை இந்த குற்றத்தை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.. நதீம் தாக்கப்பட்ட இடத்தில் தான் இஸ்ரேலிய கால்பந்தாட்ட அணி விளையாடியதும் அந்த நேரத்தில் சியோனிச ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இனவெறியை தூண்டும் பலத்த கோசங்களை எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.. அரைகுறை ஆடையுடன் பெண்களை போகப்பொருளாக காட்டுவதை பெண்…
நாளை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்
2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையொட்டி இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு எம்.பிக்களின் ஓய்வு அறைகள் அலுமாரிகள் என்பனவும் சோதனையிடப்பட இருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாளை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 22 வரை பாராளுமன்ற விவாதங்கள் இடம் பெறவுள்ளன. ஒக்டோபர் 25 முதல் நவம்பர் முதலாம் திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான…
விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லை- அத்துரலியே ரத்தன தேரர்
19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது கட்சியின் கொள்கையை எந்தவிலைக்கும் விற்க தயாரில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார் தமது கட்சியின் அரசியல் அமைப்பு திருத்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார். இதன்போது குழு ஒன்றை நியமித்து அது தொடர்பாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக தேரர் தெரிவித்தார். அந்தக்குழு தமது பரிந்துரையை ஐந்து நாட்களுக்குள் வழங்கவுள்ளது. எனினும் இதற்கிடையில் இடைக்கால உடன்பாடுகளுக்கு செல்ல தமது கட்சி தயாரில்லை…
இளம் பெண்ணை கட்டிபிடித்த ஒபாமா : துணிச்சலுடன் எச்சரித்த காதலன்
எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து…
க.பொ.த சா/த பரீட்சை டிசம்பர் 9 இல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சைக்கு 577,084 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் பரீட்சை நேர அட்டவணையில் இனி எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
