Headlines

ஐ.நா. விசாரணைக்குழுவுக்கான சாட்சியம் 31ஆம் திகதி நிறைவு

இலங்கையில் இடம்பெற்ற இறு திக்கட்டப் போரின்போது நிகழ்ந்தன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவ தற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு சாட்சியங்க ளைக் கையளிப்பதற்காக வழங்கப் பட்டிருந்த காலஅவகாசம் இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதிமுதல் 2011 நவம்பர் 15ஆம் திகதிவரை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் சாட்சியங்களைச் சமர்ப் பிப்பதற்காக தனி நபர்கள் மற்றும்…

Read More

காஷ்மீர் விவகாரம்: லண்டனில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்த போராட்டம்

இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட பாகிஸ்தான் சார்பு குழு, லண்டனின் மத்திய பகுதியில் காஷ்மீரில் விவகாரத்தில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களே கலந்து கொண்டு கொடிகளை பதாகளையும் ஏந்தி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டதால் போராட்டம் பிசுபிசுத்து போனது. ”மில்லியன் மார்ச்” என்று கூறப்பட்ட இந்த போரட்டம் லண்டனில் உள்ள டிராபால்கார் சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானின் மக்கள் கட்சி  தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி பேசுவதற்கு…

Read More

மூளையில் புற்றுநோயை எதிர்க்கும் ஸ்டெம் செல்கள் கண்டுபிடிப்பு

உலகில் பல்வேறு புதிய நோய்கள் தோன்றினாலும் மற்றோரு புறம் அதற்கான‌ மாற்று மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது அவ்வகையில் பல்வேறு மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியை குணப்படுத்த,  விஞ்ஞானி டாக்டர் காலித் ஷா என்பவர், ஸ்டெம் செல்களை கண்டறிந்து உள்ளார். அமெரிக்கா ஹார்வர்டு ஸ்டெம் செல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அங்குள்ள மாசேசூசெட்ஸ் தலைமை மருத்துவமனையில்  டாக்டர் காலித் ஷா தலைமையில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பரிசோதனைகளில், புற்றுநோய் செல்களை கொல்லும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஸ்டெம்…

Read More

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை நேர அட்டவணை வெளியீடு (அட்டவணை இணைப்பு )

click here … download இந்த ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 84 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜெ.புஷ்பகுமார தெரிவித்தார். திட்டமிட்டபடி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதிவரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்;சை நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார். 2015 ஜனவரி மாதத்தில் பாப்பரசரின் இலங்கை வருகையும் ஜனாதிபதித் தேர்தலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், பரீட்சை தினங்களிலும் மாற்றம் வரலாம் என…

Read More

குடும்பத்தை கொலை செய்வோம் : 17 வயது சிறுமி துஸ்பிரயோகம்

குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த  22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெண்கள் அமைப்பினர் இணைந்து நேற்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்த குறித்த 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த…

Read More

முஸ்லிம்கள் ஜனநாயகப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி

முஸ்லிம் தரப்புக்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனநாயக ரீதியான ஆட்சியொன்று இருக்கின்றது. ஆனால் அதனைத் தாண்டி இரணுவ ஆட்சி, ஆளுநர் ஆட்சி என்பன தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் இன்று இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது இன, மத, சமூக அடையாங்களை நிலைநிறுத்தி எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நாம் போராடாது…

Read More

பிள்ளையுடன் பிச்சையெடுத்தால் கைது

சிறு பிள்ளைகளைக் காண்பித்து பிச்சையெடுக்கும் யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்தனர். பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களைக் காண்பித்து பிச்சையெடுப்பவர்களைக் கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தினூடாக கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த பிள்ளைகளின் உண்மையான பெற்றோர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்…

Read More

புலமைப் பரிசில் பரீட்சை ; ஆசிரியர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

புதிய முறைமையின் கீழ், அடுத்தாண்டு நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் ஆசிரியர்களை தெளிவுபடுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்  பரீட்சை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாப்பத்திரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்தார். ஆசிரியர்களுக்கு பரீட்சை தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஒரு வினாப் பத்திரமே வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார். ஆசிரியர்கள், தெளிவுபடுத்த திட்டம், தொடர்பில்,…

Read More

வடக்கு மக்களை கைவிட மாட்டோம்- சுசில் பிரேமஜயந்த

வடமாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களிலிருந்து விலகி செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த வரவு – செலவு திட்டத்தில் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வித தேவைக்காகவும் பயன்படுத்தப்படாமலிருப்பதே இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஏனைய மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, போதுமானதாக இல்லாத சந்தர்ப்பத்தில் வடமாகாண சபை மாத்திரம் மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் இருப்பது அறியாமையா? அல்லது அப்பணம் வேண்டாமென முடிவு செய்துள்ளார்களா என்பது எமக்கு புரியாத…

Read More

போர்க்குற்ற விசாரணைக்கு பகிரங்கமாக ஆதரவளித்தவர் கைது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பான போர்குற்ற விசாரணைக்கு பகிரங்கமாக ஆதரவளித்த ஒருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது அவரிடம் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்கு சாட்சியமளிப்பதற்கான படிவங்கள் கையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கிராஞ்சியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிருஸ்ணராசா (வயது 57) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினருக்கு நாச்சிக் குடா பொலிஸார் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.(u)

Read More

கடும்போக்குவாதிகளால் நாட்டில் பிளவு ஏற்பட்டுவிடும்

தேசப்பற்று என்ற பெயரில் சில கடும்போக்குவாதிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போர் வென்றெடுக்கப்பட்டுள்ளது.  போர் வெற்றியின் கௌரவத்தை ஆட்சி அதிகாரத்திற்கு வழங்குவதனைப் போன்றே நாம் வருந்துகின்றோம். ஏனெனில் போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சமாதானம் நாட்டில் நிலைநாட்டப்படவில்லை. இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாடு என்ற ரீதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதனை…

Read More

ஜாதிக ஹெல உறுமய இன்று அலரி மாளிகை செல்கிறது

ஜாதிக ஹெல உறுமைய இன்று 27-10-2014 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்கின்றது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, முக்கியமான சில அரசியல் விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதன் பொருட்டு ஜாதிக்க ஹெல உறுமயவின்  விசேட மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த நிலையிலேயே, ஜாதிக்க ஹெல உறுமய இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More