News
இவ்வாண்டில் சிறிலங்கா ரெலிகொம்மிற்கு அதிக இலாபம்!
இவ்வாண்டின் முதல் அரைப்பகுதியில் மட்டும் சிறிலங்கா ரெலிகொம் (SLT) 1324 மில்லியன் ரூபா இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளது என பாராளுமன்றத்தில் நேற்று (28) சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே இத்தரவுகள் நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தரவுகளின் படி சிறிலங்கா ரெலிகொம் 4000 மில்லியன் ரூபாவினை வருடாந்த இலாபமாக கொண்டுள்ளது. சிறிலங்கா…
புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி வழக்கு
டெல்லியில் புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் தவறி விழுந்த இளைஞரை, புலி தாக்கியதில் பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது . இந்நிலையில், புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரி அவரது…
இதுவரை 4 சடலங்கள் மீட்பு: ஏனையோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை? (படங்கள் இணைப்பு)
ஹப்புத்தளை – ஹல்துமுல்ல – மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார அத தெரணவிடம் தெரிவித்தார். மீறியபெந்த தோட்டம் முழுமையாக மண்சரிவில் சிக்கியுள்ளதால் அங்கு இருந்த மக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகின்றார். ஒட்டுமொத்த அரச அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் முக்கிய…
உலகில் முதல் ஜன்னல் இல்லாத விமானம் தயார்
உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்குவரவுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமாவதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம்…
இலங்கையில் பக்கவாத நோயால் தினமும் 30 பேர் சாவு
இன்று உலக பக்கவாத நோய் தினமாகும். அதனை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்கவாத நோய் காரணமாக இலங்கையில் தினமும் 30 பேர் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்படும் பாதிப்பு பக்கவாதம் எனப்படும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பக்கவாதம் வராமல் தடுப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 29ஆம் திகதி உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகைத்தல் மற்றும் அதிகமாக உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல் பக்கவாதம் ஏற்படக் காரணமாக உள்ளதாக…
BREAKING NEWS மண்சரிவில் இருவர் சாவு ; 400 பேர் மாயம்(இரண்டாம் இணைப்பு )
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் இருவர் பலியானதுடன் 400 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. மீரியபெத்தையில் 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புகளே இவ்வாறு மண்ணில் புதையுண்டுள்ளன. 7 ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில்…
புலி கதைகூறி, தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது அரசு – அனுரகுமார
அரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புலம்பெயர் சமூகத்துடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றது. புலம்பெயர் சமூகத்திற்கு என்ன விலை கொடுத்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. தங்களது தேவைக்காக எவருடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடியவர்களே இந்த ராஜபக்சக்கள். நாடு முழுவதிலும் பல்வேறு வழிகளில்…
மகிந்த ரொம்ப நல்லவர் – கூறுகிறார் ஞானசாரர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே ஆதரவளிக்க முடியும் என பொதுபல சேனா மீண்டும் அறிவித்துள்ளது. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என தாம் கருதுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேர்தலின் போது இன்னும் சிறப்பான வேட்பாளர் ஒருவர் போட்டியிட முன்வருவாரானால், அவர் எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அவருக்கு நாம் ஆதரவளிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்….
”மலையகத்தில் பயங்கரம்” 50 வீடுகள் புதையுண்டு, பலர் காணாமல் போயிருப்பதாக தகவல்..?
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆறு லயன்களிலும் 50 வீடுகள் இருந்ததாகவும் அதிலிருந்த சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு குறித்து கொஸ்லாந்தை காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ள போதும், பாதிப்புகள் குறித்த விபரங்களை உடனடியாக வழங்க முடியாதிருப்பதாக தெரிவித்தனர். TM
நான் கூறும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – ஞானசார சவால்
பௌத்த மதத்தை பாதுகாக்கும் சட்டமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பௌத்தர்களையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் வகையிலான சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும். வெட்கம் இருந்தால் இந்த சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு ஆட்சியாளரும் பௌத்தர்களை பாதுகாக்க மெய்யாகவே நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டவிரோத மதமாற்றம், பௌத்த பிரசூர நியமச் சட்டம், பௌத்த…
கல்குடா ஆட்டோ சாரதிகளுக்கு எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, டயர்கள் கையளிப்பு
எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா ஆட்டோ சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவையொட்டி ஆட்டோக்களுக்கான டயா் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு அரங்கில் நேற்று ஓக் 28.2014 சங்கத்தின் தலைவா் ஏ.எல்.எம். புகாரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் கே.பீ.எஸ் .ஹமீட், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்….
வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை !
கிருஷ்ணி இபாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் கீழ், எமது அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் றப்பர் தொழில் துறை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதற்கான ஒர் இலட்சியத்தில் உள்ளது. ஒரு சாத்தியமான முறையில் மூன்று பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டிக்ககொள்வதெனில் எமது சிறிய றப்பர் தொழில் சார் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப்படுதல் அவசியமாகும.; இன்று (28) காலை சினமன் கிராண்;ட் ஹோட்டலில் முதல் முறையாக இலங்கையில் நடைபெற்ற உலக…
