News
ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்துள்ள 4 கேள்விகள்…!
கொழும்பில் மகளிர் அணியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் போது அரசாங்கத்திடம் நான்கு கேள்விகளை தொடுத்தார். இதற்கமைய ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரிற்காக அமெரிக்கா சென்ற போது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை சந்தித்து யார்? ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் விடுதலைப் புலிகள் தடை நீக்க வழக்கில் அரசு தலையிடாமைக்கான காரணம் என்ன? இதன் பின்பாவது இவ்வழக்கில் அரசு தலையிடுமா ? விடுதலைப் புலிகளிடம் அமெரிக்காவில் இருக்கும் 300 பெற்றோல் நிலையங்கள்,…
இருண்டுபோன அந்த ஒக்டோபர்…!
யாழ் ரமீசா உருகிப்போனோம் உடைந்து போனோம் விடிவைத்தேடி உறைந்து போனோம் விதியே என முடங்கிப்போனோம்..! சொத்திழந்தோம் சொர்க்கமென வாழ்ந்த சொந்தங்களை இழந்தோம் சோகத்தை ஆடையாய் அணிந்து கொண்டோம்..! நாங்கள் முத்திரை குத்தப்பட்ட அகதிகள்..! எதிர்காலம் தெரியாத அபலைகள்..! பட்டுப்போன எம் வாழ்வு கண்கட்டி விட்டாற் போலானது..! துரதிஷ்டம் எம்மை விடாமல் துரத்தியது துக்கம் தொண்டையில் சிக்கி சீரழித்தது..! இருண்டுபோன அந்த ஒக்டோபர் வரட்சியை மீண்டும் உமிழ்கிறது..! சன்னங்களின் ஓசை பயத்தை…
நெருங்கி வந்த ஹரின்; மகிழ்ச்சியில் காருக்குள் துள்ளிக் குதித்த ஹிருணிக்கா……..
ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹரினுக்கும், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவுக்கும் இடையில் பிரிக்கவே முடியாத இறுக்கமான நட்பு நிலவுகின்றது. இந்நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஹிருணிக்காவும் பதுளை சென்றிருந்தார். அரசாங்கத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர், ஹரினின் பரம எதிரியான தயாசிறி ஜயசேகரவுடன் ஒன்றாக சுற்றித்திரிந்தார். இதன் காரணமாக ஹரின்-ஹிருணிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நாட்களில் ஹிருணிக்காவும் கனத்த மௌனத்துடன் அமைதியாக இருந்தார்….
இணையத்தளங்கள் சொல்வது போல் செய்ய இந்த அரசு தயாரில்லை நிமால் சிரிபால டி சில்வா
இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள அநாவசிய விடயங்கள் மற்றும் பொய்யான விடயங்களை கருத்திற்கொண்டு பணியாற்ற இந்த அரசாங்கம் தயாராக இல்லை என நீர்பாச மற்றும் நீ முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார் 19 திருத்தச்சட்டம் தொடர்பில் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (25) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை பாராளுமன்றத்தில் முன்வைக்காத சட்டம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் எவ்வாறு…
கமலேஷ் சர்மா யாழ்.விஜயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவையாக வரும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரி களையும் சந்திக்க உள்ளார். 5 நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கமலேஷ் சர்மா வடக்கின் அபிவிருத்தி குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் அறிந்து கொள்ளவுள்ளார். எனினும் 2011 ஆம் ஆண்டு வடக்கிற்கு பயணித்திருந்தார் என்றும் 3 வருடங்களின் பின்னர் இம்முறை வருகை தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது….
வரலாற்றில் முதல்தடவையாக, இலங்கையர் மலேசிய பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக தேர்வு
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மாணவர் ஒருவர் மலேசியாவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ”மொனாஷ்” பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரியாத் நகரில் உள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் பழைய மாணவரும் மொனாஷ் பல்கலைக்கழக பொறியியல் பீட இரண்டாம் ஆண்டு மாணவருமான ஷிஹாப் அஸ்கர் அவர்கள் கடந்த மாதம் மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 6000க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட வாக்கெடுப்பில் 52 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று அமோக வெற்றியீட்டினார்….
“காட்டிக் கொடுத்தவர்கள்” என்று கூறியதை தாங்க முடியவில்லை…! (கவிதை)
மூதாதையர்கள் வாழ்ந்த பூமியைவிட்டும் மூன்றே நாட்களில் துரத்தியதை நினைக்கும்போதும் – வலிக்கவில்லை… ஐந்து சதம் கூட இல்லாமல் உடுத்த உடையுடன் போகும் போது காதில் இருந்து இரத்தம் சொட்ட பிடுங்கப்பட்ட நகைகளையும், பதின்னான்கு நாள் வயது மகனை மழையில் நனைந்து கொண்டே நான் மடியில் சுமந்ததை நினைக்கும் போதும் வலிக்கவில்லை… சோற்றுக்கே அல்லல்படும் நேரம் எங்கே பூர்வீகத்தை மீண்டும் அடைவது என்ற முகாம்களின் முனகல்களை மீண்டும் அசைபோடும் போதும் வலிக்கவில்லை… என் வீட்டுக் கூரை உனது வீட்டுக்…
மஹிந்த ராஜபக்ஸவினால் ஏமாற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி !
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியையான எனது மனைவியும் ஏமாற்றப்பட்டுவிட்டால் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. சுனில் ஹந்துன் நெத்தி இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு நிவாரணங்கள் தொடர்பான அறிவிப்புக்களை அடுக்கிச்…
எங்கள் ஆதரவு மஹிந்த ராஜபக்ஸவுக்கே – ஞானசாரர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்க அமைச்சர்களும் அடக்கி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுபல சேனாவும் எச்சரித்துள்ளது. இதற்கு முன்னர் இதே எச்சரிக்கையை சரத் பொன்சேகாவும் விடுத்திருந்தார். எனினும் பொதுபல சேனா இந்த எச்சரிக்கையை வித்தியாசமான முறையில் விடுத்துள்ளது. இது தொடர்பாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் சிங்கள ஊடகம் ஒன்றில் பிரசுரமாகியுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர்….
ரணிலை ஏற்க முடியாது – கட்சிக்குள் கிளர்ச்சி!
நஜீப் பின் கபூர் 2015 நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்ஹாவை வேட்பாளராக ஏற்க முடியாது. அப்படி அவர் வேட்பளராக வந்தால் வெற்றி பெறவும் மாட்டர். எனவே மீண்டும் இவ்வாறான ஒரு வாய்ப்பான நேரம் மீண்டும் கிடைக்க ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள்லேயே ஒரு தரப்பினர் தற்போது கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த நேரத்தில் யானைச் சின்னத்தில் போட்டி போடுவது என்பது பொருத்தமான வேலையல்ல எல்லாத் தரப்பினரையும் ஒன்றாக இணைத்துக்…
எபோலா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 600 கோடி: மைக்ரோஸாஃப்ட் துணை நிறுவனர் உதவி
எபோலா நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 600 கோடி) அளிப்பதாக மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கெனவே அவர் 15 மில்லியன் (சுமார் ரூ. 90 கோடி) அளித்துள்ள நிலையில், கூடுதலாக உதவித் தொகையை அறிவித்துள்ளார். இப்போது அறிவித்துள்ள தொகையைத் தவிர, எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் விதத்தில், உலக சுகாதார அமைப்புக்கு நிதி உதவி அளிப்பதாக, அவர் வாஷிங்டனில்…
இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் பணி நீக்கம்!
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் இலஞ்சம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இருவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து தனது மோட்டார் சைக்கிளில் சிறு தவறு ஒன்றிருப்பதாகக் கூறி கடமையிலிருந்த குறித்த பொலிஸார் இருவரும் 300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக வாழைச்சேனையைச் சேர்ந்த ஆர். ஜெயராஜ் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் கடந்த…
