News
அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா – பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்
ஏ.எச்.எம்.பூமுதீன் அலிகார் அஹதியா பாடசாலையின் 11ம் ஆண்டு நிறைவு விழா இன்று 02 புத்தளம் ஹதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பாடசாலை மணவர்ககு பரிசில்களை வழங்குவதையும் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.
புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா(படங்கள்)
பழுலுல்லாஹ் பர்ஹான் சர்வதேச சிறுலர் தினத்தை முன்னிட்டு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா 31-10-2014 நேற்றுவெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் புதிய காத்தான்குடி அபிவிருத்தி மத்திய குழு ஆகியவற்றின் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்;டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்;புல்லாஹ் கலந்து கொண்டார்….
பள்ளிவாசல் சுவர் விழுந்து ஒருவர் வபாத், 3 பேர் காயம்
திருகோணமலை கணேஷ் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாயலின் பழைய கட்டடத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சுவர் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரவித்தனர். இன்று காலை(1) இடம்பெற்ற இச் சம்பவத்தில், நவாஸ்- சாஹிபு (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிவாயலில் புதிய கட்டட மொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டடத்தை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. இதன் போதே…
ஆதரித்து ஏதாவது பிடிங்கிக் கொள்ள மு.கா முயற்சிக்கலாம் அல்லவா?
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 2015 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது.நிபந்தனை அற்ற ஆதரவு என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.கிழக்கு மாகாண சபையில் அரசுடன் மு.கா செய்து கொண்ட எந்த ஒரு விடயத்தையும் இது வரை காலப் பகுதியில் அரசு நிறை வேற்றியதாக அறிய முடிய வில்லை. நிலைமை இவ்வாறு இருந்தும் மு.கா இனது போக்கு…
வரவு-செலவுத் திட்டம் 2015 : 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றபோது. அதற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன்படி இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்-கிம்மா நிறுவனம் உதவி பதுளையில் மன்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணபணி
எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தையில் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டது. அதன் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்;களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பதுளை மாவட்ட மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும்,அம்மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காவும் அல்-கிம்மா நிறுவனம் நேற்று காலை 6.00மணிக்கு பதுளை நோக்கி பயணித்தது. இனஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் மேம்படுத்தும் நோக்கில் இம் மனித நேயப்பணிகள் நிறுவனத்தினால் முன்னொடுக்கப்பட்டது. நிறுவனத்தின்…
தர்கா நகர் பதட்ட நிலை.. தற்போதைய நிலைமையின் அப்டேட்.
தர்கா நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றினால் சிறு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. தர்கா நகர் பத்திராஜாகொட பகுதியின் ஊடாக உதைபந்தாட்டம் விளையாடி விட்டு சென்றுகொண்டிருந்த முஸ்லிம் வாலிபர்களுக்கும் சிங்கள வாலிபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பில் முடிந்துள்ளது. அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் வீடு ஒன்றில் இருந்த முஸ்லிம் பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார் அதுதவிர அப்பிரதேச விகாரை மணி தொடர்ச்சியாக அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மின்சாரம் தடைப்படதாகவும் அங்கிருந்து…
பாலஸ்தீனத்தை தனிநாடாக சுவீடன் அங்கீகரித்தது: இஸ்ரேல் எதிர்ப்பு
பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக சுவீடன் அங்கீகரித்துள்ளது. அதற்கு அண்டை நாடான இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், மேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்கனவே தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளன. பல்கேரியா, சைப்ரஸ், செக்குடியரசு, ஹங்கேரி, மால்டா, போலந்து, ருமேனியா நாடுகளும், ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் அல்லாத ஐஸ்லாந்தும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது சுவீடனும் பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சுவீடன் வெளியுறவுத்துறை…
மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா
16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிறுமியின் சித்தப்பா கைதுசெய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசமக்கள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணி புரிவதாகவும் தந்தை வியாபாரி எனவும், இதனால் சிறுமி தனது சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார். மேற்படி சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி பொலிஸாரின் உத்திரவின் படி…
எதுவித நிபந்தனைகளுமின்றி அரசுக்கு முழு, ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அடுத்த வருட (2014) வரவு- செலவுத் திட்டத்துக்கான வாக்களிப்பின் போது எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென இன்றிரவு (31-10-2014) கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, கருத்தறிந்தே தீர்மானம் மேற்கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் கலந்து கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.
அமைச்சர் மேர்வின் சில்வாவிவன் மகனுக்கு செம அடி
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியில் இன்று சனிக்கிழமை(01) அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர். Tm
இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும் – முன்னணி சோசலிச கட்சி
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்னணி சோசலிச கட்சி தீர்மானித்துள்ளது. ஏனைய இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய சோசலிச கட்சி, மாவோவத கம்யூனிஸ்ட் கட்சி, பராக்ஸிக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின்…
