News
கிழக்கு உக்ரைனில் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவாளர் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு உக்ரைனின் சர்ச்சைக்குரிய டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கிளர்ச்சியாளர்களால் நடத்தப் பட்ட தேர்தலில் ரஷ்ய ஆதரவாளரும் அவர்களால் நியமிக்கப் பட்ட தற்போதைய பிரதமருமான அலெக்ஸாண்டர் ஜகார்சென்கோ வெற்றி பெற்றிருப்பதாகத் சுயமாகத் தன்னை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தியிருக்கும் பகுதியின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்ய ஆதரவாளர்களால் சுயமாக லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கும் பிரதேசத்தின் மத்திய தேர்தல் கமிசனின்…
ISIS இற்கு எதிரான யுத்தத்தில் சிங்கப்பூர்!
திங்கட்கிழமை சிங்கப்பூர் அரசு ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் நல்கப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய சில நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரபு தேசங்களும் ISIS மீது வான் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றன. தரை வழியாக ஈராக்கின் குர்து பேஷ்மெர்கா படையும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ISIS உடன் போராடி வரும் சர்வதேச கூட்டணி நாடுகளுக்கு ஆலோசகர்கள் அளித்தல்…
தேர்தல் என்றாலும் பாப்பரசர் இலங்கை வருவார்: திருகோணமலை ஆயர்
வத்திக்கானில் இருந்து பாப்பரசரின் விஜயம் தொடர்பில் வந்துள்ள குழுவினருக்கும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது தேர்தல் ஒன்று தொடர்பில் பேசப்படவில்லை, ஏனெனில் தேர்தல் திகதி ஒன்று இன்னும் அறிவிக்கப்படாமையாலாகும். இந்தநிலையில் பாப்பரசர் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் நாடு இயல்புக்கு திரும்ப அந்த நாட்கள் போதுமானதாக இருக்கும்…
கப்பல் மூழ்கியதில் 24 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மூழ்கியதால் குறைந்தபட்சம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் கரையோரத்துக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இக்கப்பல் மூழ்கியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படைக் கப்பல்களின் உதவியுடன் சுழியோடிகள் 06 பேரை காப்பாற்றியுள்ளனர். இதன்போது, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை. இக்கப்பலில் சுமார் 40 பேர் இருந்துள்ளதுடன், இவர்களில் அதிகளவான சிறுவர்கள் இருந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது
3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்
ஓகியோவில் உள்ள லோரைன் பகுதியில் 4 வயது சிறுவன் தனது 3 வயது தங்கையை துப்பாக்கியால் தலையில் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவனுக்கு கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. தன்னிடம் இருந்த .40 கேலிபர் கைத்துப்பாக்கியை கொண்டு தங்கையை விளையாட்டாக மிரட்டிய சிறுவன் எதிர்பாராத விதமாக சிறுமியின்…
110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, வபாத்தான அப்துல் ரஹ்மான்
மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான் என்பவர் பஸ் சாரதியாக பணியாற்றி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் நேற்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பஸ்ஸினை அப்துல் ரஹ்மானே செலுத்தியுள்ளார். ஊட்டியை…
”அலுத்கம சம்பவம் ஒரு நல்ல பாடம் ” பிரித்தானிய உயர்ஸ்தானிகர்
இலங்கையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரான்கீன், கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் மத ஐக்கியம் மற்றும் இலங்கையின் ஏனைய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மத நல்லிணக்கம் அவசியமானது என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகளும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அலுத்கமவில் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்தை…
ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளா் யார்? (சிறப்பு நேர்காணல்)
(நேர்காணல் – எம்.ரீ.எம்.பாரிஸ்) ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது சபை அமர்வு கடந்த ஓக்டோபர் 30.2014ந்திகதி நடை பெற இருத்த நிலையில் சபை உறுப்பினர்களால் பகிஷ்கரிக்கப்பட்டது இது தொடர்பிலும் அடுத்த தவிசாளர் யார்? என்ற கேள்விக்கு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்தார் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர்களால் பல்வேறு குற்றங்கள் சுமர்தப்பட்ட இந்நிலையில் தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரோரனையினை கொண்டு வருவதன் மூலம் தவிசாளரை மாற்றி புதிய தவிசாளர்…
சுனாமி வரவு செலவு திட்டம் -2015
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் வரவு செலவு திட்டம் 2015 பற்றி , இதை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் சாதாரண மக்களுக்கும் விளங்கும் மொழியில் இதை ஒரு சுனாமி வரவு செலவு திட்டம் என வர்ணிக்கிறார் . சுனாமி அனர்த்தம் நீங்கள் எல்லோரும் அறிந்தது , அதாவது கடல் தன்னை உள்வாங்கி பின்னேர் சீறிப் பாயும் . இதே போல்தான் முதலில் உங்களுக்கு ஆனந்தமாக இருக்கும் , ஆனால் சிறிது…
தலைவர் ஹக்கீம்,செயலாளர் ஹசன் அலி இற்கிடையிலான முறுகல் அரசாங்கத்திற்கு மு.கா சிவப்புக் கொடி காட்டுவதற்கான சமிஞ்சையா..??
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை? ஆதரிப்பது என்பதில் மிகப் பெரிய சாவாலை எதிர் கொண்டு வருகிறது.இவ் அரசாங்க ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் காரணாமாக முஸ்லிம்கள் தற்போதைய அரசின் மீது வெறுப்படைந்துள்ளதனால்,அரசை ஆதரிப்பது தங்கள் தலை மீது தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டும் செயலாய் அமைந்துவிடும் என்ற காரணத்தினாலும்,அரசின் செயற்பாடுகளை பொருந்திக்கொள்ள முடியாமையினாலும் அரசை விட்டு மு.கா வெளியேற வேண்டும் என்பதில் மு.கா உறுப்பினர்கள் பலர் உறுதியாக உள்ளனர்.இவ் விடயத்தில்…
சிலாவத்துறையில் வெள்ளப்பெருக்கு – ரிப்கான் பதியுதீன் துரித நடவடிக்கை
ஏ.எச்.எம் பூமுதீன் மன்னார்- சிலாவத்துறை பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து ஸ்தலத்திற்கு உடன் விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார். முள்ளிக்குளம், பாலைக்குளி, கரடிக்குளி ,காயாநகர் போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பது குறித்தும் அதிகாரிகள் ,கடற்படை மற்றும் இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். கல்லாத்து பாலத்தின் மேலாக நீர் பாய்ந்து ஓடுவதால் மேற்படி கிராமங்களுக்கான போக்குவரத்தில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாளை…
மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு
கொஸ்லாந்த மீரியபெத்தயில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஓரிடம் என எல்லையிடப்பட்டு தூண்களும் நடப்பட்டு இலக்கமிடப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராதனை பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானப் பேராசிரியர் கபில தஹநாயக்கா, மேல் நீர்பரப்பு பாதுகாப்பு திட்ட முன்னாள் பணிப்பாளரும் சுற்றாடல் ஆய்வாளருமான…
