News
பொதுபல சேனாவும் முஸ்லிம் மக்களும்! (சிறப்புக்கட்டுரை)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியி டும் மஹிந்த ராஜபக்வுக்கு பொதுபல சேனா ஆதரவு வழங் குமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளமை எவருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை. பொதுபல சேனா அரசின் வளர்ப்புப் பிள்ளை என்பதால் அதனால் இத்தகைய தொரு தீர்மானத்தையே எடுக்க முடியும். பொதுபல சேனா தீவிரமான சிங்கள பெளத்தவாதத்தை தன்னகத்தே கொண்டு செயற் பட்டு வருகின்றது. அதன் செய லாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக் கும் பூரணமான சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றார். அவரை…
சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலை கண்டித்த சிரியா மற்றும் ஈரான்
ஞாயிற்றுக்கிழமை சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையாக ஓர் தாக்குதலையும் லெபனான் எல்லைக்கு அருகே டிமாஸ் நகருக்கு அண்மையில் ஓர் தாக்குதலும் என இரு விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியிருப்பதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. 4 வருடங்களுக்கு முன்னர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்தே சிரியா மீது இஸ்ரேல் அத்துமீறி சில தடவைகள் விமானத் தாக்குதல் நடத்தியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்…
“கட்அவுட் ஜனாதிபதியாக மாறியுள்ள மஹிந்த”!– ரணில் கேலி
அண்மையில் பாணந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அநேக பகுதிகளிலும் கட்அவுட்கள் அடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி கட்அவுட் ஜனாதிபதியாக மாற்றமடைந்துள்ளார். நாடு முழுதிலும் கட்அவுட் அடித்து மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது. இந்த கட்அவுட் அடிக்கும் நபர்கள் கூட ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. எந்த நாளும் மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசாங்கம் ஓர் கொள்ளைக் கூட்டம் என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நாடு சீரழிந்துள்ளது. பொலிஸார் சுயாதீனமான முறையில் கடமைகளை…
திஸ்ஸ அத்தநாயக்க மட்டுமல்ல, ரணில் விக்ரமசிங்கவே இங்கு வர தயாராகி விடுவார்!- கெஹலிய
ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சி மற்றும் வர்ணத்தைப் பார்த்தல்ல. சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மிக முக்கியமானதொன்று. திஸ்ஸ அத்த நாயக்க எனக்கு மிக நெருக்கமானவர் நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்….
உயிர் இருக்கும்வரை ஐதேகவில் இருந்து விலக மாட்டேன் – சந்திராணி பண்டார
தான் உயிருடன் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை சிறந்த ஐதேக செயற்பாட்டாளர் என்பதால் கட்சியை விட்டு செல்லும் அவசியம் தனக்கு இல்லை என அவர் கூறினார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…
சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் 48 ஆண்டுக்குப்பின் திரும்பி வந்த மகனால் தாய் இன்ப அதிர்ச்சி!!
இந்தியாவில்பொன்னேரி என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் கைரூன்பீவி (84). இவருக்கு 5 மகன்கள். சொந்த ஊர் மதுராந்தகம் அடுத்த இரண்யசித்தி எனும் கிராமம். இதில், இளைய மகனான ஷேக் இஸ்மாயில், 16 வயதில் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடந்த 48 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். ஆனால், அவரது தாய் மட்டும் மகன் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைரூன்பீவி, தனது கணவர்…
பாதுகாப்பு அமைச்சில் முஸ்லிம் காங்கிரஸ் குழு சந்திப்பு -நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, மீன்பிடி மற்றும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் குழுவினருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று (08) திங்கட்கிழமை பிற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையொன்றின்போது, அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக…
மலேசியாவி்ன் முன்னாள் பிரதமர் மஹதீா் முஹம்மத் இன்று இலங்கை வந்தடைந்தார்
அஸ்ரப் ஏ. சமத் மலேசியாவி்ன் முன்னாள் பிரதமரும் மலேசியாவை அபிவிருத்தியாக்கிய தலைவருமான மஹதீா் முஹம்மத் இன்று (09) இலங்கை வந்தடைந்துள்ளாா். இவா் இன்று பி.எம்.ஜ.சி.எச்.ல் வைத்து இலங்கை அபிவிருத்தி பற்றி உரையாடுவாா். அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய நகரம், கட்டுநாயக்க பொருளாதார ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பாா். இக்காலகட்டத்தில் வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அழைப்புவிடுத்திருந்தாா். இவரது சகல ஏற்பாடுகளையும் நாமல் ராஜபக்ச செய்துள்ளாா். மேற்படி திட்டங்களுக்கு மலேசியா தனியாா் கம்பணிகள் முதலிடுகின்றன. அத்துடன்…
முஸ்லிம்களை கௌரவித்த ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளராக கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார். இந்த வெற்றிடத்திற்காக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக அக்கட்சியின் செயலாளர் பதவிக்கு ஒரு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெட்கித் தலை குணிய நேரிட்டுள்ளது – சரத் பொன்சேகா
பணத்திற்காக கட்சி தாவுவோரின் நடவடிக்கைகளினால் வெட்கித் தலை குணிய நேரிட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்றைய தினம் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார். இது குறித்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சரத்பொன்சேகா கருத்து வெளிடியிட்டிருந்தார். பண ஆசை காரணமாக கட்சியின் சில உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில் எம்மை வெட்கப்பட வகையில் அமைந்துள்ளது என அவர்…
மக்களுக்கு இடையிலான போராட்டமே இந்த தேர்தலாகும் – மைத்திரிபால
அகிம்சாவாத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். 08-12-2014 பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக நாம் எமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடுகின்றோம். அரச ஊடகங்கள் தேர்தல் ஒன்றின் போது நடுநிலையாக செயற்பட வேண்டும். அந்த நிலைமையை மீறிய சந்தர்ப்பத்தையும் தேர்தல் சட்டத்தை மீறிய…
சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 4,279 நிலையங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை சாதாரண தரப் பரீட்சையில் 370,739 பாடசாலை பரீட்சார்த்திகளும், 206,481 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர் இதேவேளை, பரீட்சை நிலையங்கள் மற்றும் இணைப்பு நிலையங்களுக்குள் அனுமதியற்ற எவரும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகள்…
