News
மஹிந்த சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றால் 10 லட்சம் பேரைத் திரட்டி அதிகாரத்தை கைப்பற்றுவோம்!
அரசு எந்த சூழ்ச்சிகளையும் செய்து வெற்றி பெற முடியாது. அவ்வாறு வெற்றி பெற முனைந்தால் பத்து லட்சம் பேரைத் திரட்டி கொழும்பை முற்றுகையிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் அத்துலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் சர்வதேச சூழ்ச்சி என்று கூறி வாக்குகளைப் பெற முயற்சிப்பதாகவும் அவ்வாறு ஒரு சூழ்ச்சியும் இல்லை அரசிற்குள்ளேயே சூழ்ச்சிக்காரர்கள் உள்ளனர். இதேவேளை…
ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் 6 லட்சம் பேர் விண்ணப்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கு 6 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் இதனை உறுப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும் தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தின்போது தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரிபால
மஹிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார். அவர் ஒரு மனிதராக செயற்படவில்லை. அனைத்து அதிகாரங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மு.கா. உயர்பீடத்தில் மைத்திரிக்கு அதிக ஆதரவு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஜின் உயர்பீடக் கூட்டம் (09-12-2014) நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி இன்று (10-12-2014) அதிகாலை வரை நீடித்துச்சென்றுள்ளது. கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமயில் நடைபெற்றுள்ள உயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு அபிப்பிராயங்களையும் வெளியிட்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இணையதளம் ஒன்றிற்கு தகவல் வழங்கும்போது, பெரும் எண்ணிக்கையிலான அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டதில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கோ வாக்களிக்க…
ஜனாதிபதி மஹிந்தவை காணவில்லை – மைத்திரிபால சிறிசேன
நாட்டில் பல அமைச்சர்கள் பெயரளவு அமைச்சர்களாகவே கடமையாற்றி வருவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் செயலாளர்களுக்கு அலரி மாளிகையிலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மாஹிந்த ராஜபக்ஸ மாற்றமடைந்துள்ளதாகவும், எனக்கு தெரிந்த ராஜபக்ஸவை தற்போது காண முடியவில்லை…
இந்த மௌலவிக்கு என்ன நடந்திருக்கும்..??
உலமாக் கட்சித் தலைவர் முபாறக் மௌலவிற்கு மக்கள் வாக்களிக்காவிட்டாலும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அவரின் கொதிப்புக்கள் மக்களை சற்று ஈர்த்திருந்தது.இப்போது எல்லாம் புஸ்வனமாகி போய் விட்டது.யாருக்கு ஏசினாரோ?அவருக்கே வக்காலத்து வாங்குகிறார் முபாறக் மௌலவி. எதிரணிகள் பொது வேட்பாளரை தேடி அலையும் போது கூட இவர் எவ் எதிர்க் கருத்தினையும் கூற வில்லை.பொது வேட்பாளர் தேர்வான பிறகே பல அரசியல் மாற்றங்கள் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.அந்த நேரம் கூட அரசுடன் இருக்கின்ற மு.கா விமர்சித்தே…
‘இஸ்லாமிய நாகரீகம்’ மாணவி புஹாரி நபீலா எழுதிய நூல் வெளியீட்டு விழா
அப்துல் சலாம் யாசீம் கஹடகஸ்திகிலிய-முக்கிரியாவ புஹாரி நபீலா எழுதிய நூல் வெளியீட்டு விழா முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியால மண்டபத்தில் இடம் பெற்றது! மண் வீட்டில் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் இம்மாணவி ‘இஸ்லாமிய நாகரீகம்’ எனும் நூலை வெளியிட்டது வடமத்திய மாகாணத்திலேயே வெளியிடப்பட்ட முதல் நூல் எனவும் தெரிய வருகின்றது. தனது முயற்சியில் கிராமத்துக்கும், பாடசாலைக்கும் பெருமையை பாராட்டி கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நூல், அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் பயன்பெற வேண்டும் எனும் நோக்கில்…
தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்;ஹிருனிகா
தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மூன்று வருடங்களாகியும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்றில்லாததால் நான் பொறுமையுடன் காத்திருந்தேன். தற்போது அதற்கான சூழ்நிலை உருவாகியிருப்பதால் நான் பொது வேட்பாளரைப் பலப்படுத்தி அவரது வெற்றிகாக உழைக்க முடிவெடுத்திருக்கிறேன். அரசிலிருந்து வெளியில் இருந்து வருபவர்களுக்கு பதவிகளும் அமைச்சுகளும் முன்னரிமையுடன் வழங்கப்படுவதைக் கொண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த…
இலங்கை அதிகாரிகள் கனடாவருவதற்கு தடைவிதிக்க வேண்டும் ; பற்றிக் பிரவுன்
இலங்கையின் இராஜதந்திரிகளும், இராணுவ உயரதிகாரிகளும் கனடாவிற்கு வருவதிற்கு தடை விதிக்கவேண்டுமென ஆளும்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் கடிதம் மூலம் கனடியப் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கனடிய மனிதவுரிமை மையத்தினால் நடாத்தப்பட்ட விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டபோது இந்த செய்தியினை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை நிலவரம் பற்றித் தெரிவிக்கையில், இலங்கையில் மற்றயை இனங்களும் நீதியுடனும் சமாதானத்துடனும் வாழும் சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே கனடா இவ்வாறு தடைகளை விதிப்பதன் மூலம்…
மைத்திரிபாலவின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது; திஸ்ஸ அத்தநாயக்க
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பது எனத் தீர்மானித்தது. இவற்றில், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குதல், அரசிலுள்ள 20 அமைச்சர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துவருதல், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக…
அரச உத்தியோகத்தர் எவரும் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது
அரச உத்தியோகத்தர்கள், அமைச் சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் உரிமையற்ற அனைத்து அரச உத்தி யோகத்தர்களும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்றுக் காலை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஜனாதிப தித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக் கலின்போது, வேட்பாளர்க ளுக்கிடை யில் உரையாற்றியபோதே மேற் கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,…
மஹிந்தவின் தோல்வி உறுதி!
லும் மஹிந்த ராஜபக்வையே பிரதான மாக காண்பித்தார்கள். அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு தேர் தல் ஆணையகத்திற்கு வருகைத் தந் தது வரை அனைத்தும் நேரலை யாகவே ஒளிபரப்பப்பட்டது. இது தேர்தல் விதிமுறை மூறல் என் பது மட்டுமன்றி ஊடகச் சுதந்திரமும் இல்லை என்பதை காட்டுகின்றது. அத்தோடு, இவர் தேர்தல் ஆணை யகத்திற்கு வந்திருந்த போதும் நிறைய அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருந் தமையைக் காணக்கூடியதாக இருந் தது. இவ்வாறு, அரச சொத்துக்களை பயன்படுத்துவதன் மூலமாகவே…
