News
மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்
இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க தேரர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ள ஜனாதிபதி, அதனையடுத்து அநுராதபுர நகரில் நடைபெறும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கவுள்ளார். அநுராதபுரத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தான் என்றைக்கும் விலகப் போவதில்லை என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைய தளங்களினூடாக பொய்யான, பொறுப்பற்ற தகவல்கள் கட்சி தாவல்கள் தொடர்பில் பரப்பப்படுகின்றன. இதனால் மோசமான நிலைமையே ஏற்படும். தன்னைப் பற்றி தெரிவிக்கப்படும் செய்திகளை தூசளவேனும் தான் பொருட்படுத்த வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய…
அமெரிக்கா திட்டமிட்டு முஸ்லிம்களை அழித்துக்கொண்டிருக்கின்றது-ஹிஸ்புல்லாஹ்
அமெரிக்கா திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தையும்,முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் 10-12-2014 நேற்று புதன்கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
‘விரைவில் பொது தேர்தல்” அனுர
ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிப்பெற்றாலும், நாட்டில் விரைவில் பொது தேர்தல் நடத்தப்படும் என்று ஜே வி பி தெரிவித்துள்ளது. ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த பொது தேர்தலின் போர் நேர்மையானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான தெளிவூட்டல் நடவடிக்கைகளை ஜே.வீ.வி மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை இறுதி முடிவு – மு.கா.
-அஷ்ரப் சமத் – ஜனாதிபதித் தேர்தலில் யாரை அறிவிப்பது என முஸ்லீம் காங்கிரஸ் செயலாளா’ நயகம் ஹசன் அலி சனிக்கிழமை 13ஆம் திகதி கட்சியின் இறுதி முடிபு அறிவிக்கப்படும். என ஆங்கில மிரர் வெப்தளத்திற்கு தெரிவித்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. The Sri Lanka Muslim Congress (SLMC) has decided to make its stand known on whether to continue supporting the government or not on Saturday (December 13),…
மு.கா. வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்றுதான் !
-அஷ்ரப் சமத் – ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என முடிவெடுப்பது போல நாடகமாடி வரும் முஸ்லிம் காங்கிரஸ்பொது வேட்பாளரை ஆதரிக்க அரசைவிட்டு வெளியே வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்று தான் “ஆவத் எக்கை நாவத் ஏக்கை” என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஹலால் விடயம் தொடக்கம் அளுத்கம பேருவளை கலவரம் இடம்பெற்ற போது கூட மஹிந்த அரசுக்கு வால் பிடித்துகொண்டு அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம்…
திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் திரணியில் இணைவு!
ஜே.எம். வஸீர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பங்காளி கட்சியாக அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் தாவரவியல் பொது பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன்…
வாசுதேவ நாணயக்கார பொது எதிரணியில் இணைகிறார்(?)
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா என்ற முடிவை அவர் இன்று புதன்கிழமை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகள் தன்னைக் கவர்ந்துள்ளதாக ஏற்கனவே வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
அமெரிக்க செனட் சபையில் வெளியிடப் பட்ட சி.ஐ.ஏ. இன் சித்திரவதை அறிக்கை தொடர்பில் சர்ச்சை
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அதிபர் ஜோர்ஜ் W. புஷ் இன் நிர்வாகத்தின் கீழ் மத்தியப் புலனாய்வுத் துறையான சிஐஏ தாம் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்திருந்த பலரிடம் இருந்து தகவல்களைப் பெற மனிதாபிமானம் அற்ற பல கொடூர சித்திரவதை முறைகளைக் கையாண்டிருந்தது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. மேலும் இது தொடர்பில் செனட் சபையில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வந்த நிலையில்…
திஸ்ஸ நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம்!
நாளை காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, திருப்தியில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் மத வழிபாடுகளில் திஸ்ஸ அத்தநாயக்கவும் பங்கேற்றுள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று நாடு திரும்ப உள்ளார். இதன்படி நாளை பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்தவின் அதிகாரத் திமிருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத் திமிருக்கு நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி பாடம் புகட்ட வேண்டும் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக விசேட ஆணைக்குழுவினூடாக விசாரணைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது எதிரணியின் முதலாவது உத்தியோகபூர்வ பிரச்சாரக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிமை கண்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன…
சர்வதேச மனித உரிமைகள் தினம் – இன்று
சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும். 1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் “மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. சிவில்…
