News
சர்வதேச மனித உரிமைகள் தினம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மார்கழி பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘மனித உரிமைகள்-365′ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித உரிமைகள்தான். ஒரு நாட்டில் அனைவர்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். மனித உரிமைகள் அரசாங்கங்கள் விரும்பியவாறு வழங்கும் கொடைகள் அல்ல. அரசாங்கங்கள் அவற்றை மறுக்கவோ ஒரு சிலர் விடயத்தில் பிரயோகித்து ஏனையோருக்கு மறுக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அதற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்….
மைத்திரி வேட்புமனுவை கையளித்தார்
பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை கையளித்துள்ளார். இாஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று காலை சென்ற இவர் தனது வேட்புமனுவை தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்தார். -Tamilmirror-
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறி விட்ட அ ரசாங்கம் – ராஜித
நாட்டில் மத சுதந்திரத்தை ஏற்படுத்தி புதிய கலாசார யுகமொன்றை உருவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ மீதான நட்பினை மறந்து கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அரசிலிருந்து வெளியேறினோம். எமக்கு நட்பை விடவும் கொள்கையே முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து பின்பு நாட்டில் மத நல்லிணக்கத்தை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. ஆகவே, ஜனவரி 9 ஆம் திகதி இலட்சக்கான விருப்பு வாக்கு வித்தியாசத்தில் பொது வேட்பாளர் வெற்றி பெறுவார். குறித்த…
ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் முழு விபரம்
1. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் – ஜனசெத பெரமுன 2. திரு. எம்.பி. தெமிணிமுல்ல ஒக்கொம வெஸியோ – ஒக்கொம ரஜவரு அமைப்பு 3. திரு. பாணி விஜேசிறிவர்தன – சோசலிச சமத்துவக் கட்சி 4. திரு. சிறிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிச கட்சி 5. திரு. ராஜபக்ஷ பேர்சி மஹேந்திர (மஹிந்த ராஜபக்ஷ) – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6. திரு. ஜயந்த குலதுங்க – எக்ஸத் லங்கா மகா சபா 7….
ஜனாதிபதித் தேர்தல் 2015: வேட்புமனுக்கள் இன்று ஏற்பு!
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2014) இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. வேட்புமனுக்கள் இன்று காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் செயலகம் பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வந்தது. இதற்கிணங்க 19…
பாதாளத்தில் விழுந்துள்ள நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க
ஆதாள பாதாளத்தில் தற்போது விழுந்துள்ள நாட்டை மீட்பதற்கு நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை போன்று, பொது மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதவாளர்களுடன் அத்தனகல்ல தொகுதியில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனது தந்தை, தாய் மற்றும் எனது காலப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சமாதானமாக வாழ்ந்தனர். ஆனால், கடந்த ஓரிரு…
ராஜீவ் கொலை! இலங்கையிடம் இருந்து தகவல்களை பெற்றுத்தருமாறு இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை
இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பில் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்டர்போல் இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் சிபிஐ (மத்திய புலனாய்வு பிரிவு) கோரியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் இலங்கையிடம் இருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவிட்டால் அந்த வழக்கை முடிவுறுத்த முடியும் என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு கே.பி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். இதன்பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் 2012ஆம் ஆண்டு…
திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய இளைஞன் ஏறாவூரில் கைது
19 வயதான யுவதியிடமே மேற்படி இளைஞன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். குறித்த யுவதி ஏறாவூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, நேற்று அந்த இளைஞனைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.
மைத்திரிபால பொது வேட்பாளரானது சர்வதேச சதித்திட்டம்: பொதுபல சேனா
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார். போரில் வெற்றி பெற அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய தலைவருக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் இம்முறை முன்னெடுக்கப்படுகிறது.இன்று வைக்கப்பட்டுள்ள பொறியே அன்றும் வைக்கப்பட்டது.இதே எதிர்சக்திகள் அன்றும் செயற்பட்டன. நாட்டை வெற்றிபெற செய்த தலைவருக்கு அவரே கட்டளைகளை வழங்கிய இராணுவ தலைவர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி எதிரணி வேட்பாளராக மாற்றினார். போரை வென்ற…
ஆளும் கட்சியின் பலர் இரகசியமாக உதவுகின்றனர்!– ராஜித
சிவில் மற்றும் வெகுசன அமைப்புக்கள் பல பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து வருகின்றன. எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள விரும்பும் பலரை அரசாங்கம் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கி தக்க வைத்துக் கொள்ளும் பலவீனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த தோற்க வேண்டுமென்ற நோக்கில் பலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அண்மையில் கட்சி காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்று நடத்திய போது பாதுகாப்பு படையினர் புகுந்து இடையூறு விளைவித்தனர். கட்சிக் காரியாலயத்தை கடுமையாக சோதனையிட்டனர். நாட்டின் பாதுகாப்பு குறித்து திருப்தி அடைய…
ஐ.எஸ். சிரியாவில் போர் விமான தளமொன்றைக் கைப்பற்றியது
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) சிரியாவில் போர் விமான தளமொன்றைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 – குஜராத் நீதிமன்றம்!
முஸ்லீம் பெண்களின் திருமணவயது 15 என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 17 வயதான முஸ்லீம் இளம் பெண்ணை திருமணம் செய்தவர் மீது குழந்தைத் திருமண சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்து உள்ளது. முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம். இந்நிலையில்…
