News
அதாவுல்லாவின் கோட்டையில் ரணில் விக்கிரமசிங்க – கூட்டம் நிரம்பி வழிந்தது (படங்கள் இணைப்பு)
எம்.ஏ.றமீஸ் யுத்தத்தின் பின்னர் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதிலாக இன மத வாதங்களைத் தூண்டி மீண்டும் ஒரு யுத்தத்தைத் தோற்றுவிக்க மஹிந்த ராஜபக்ஷ முற்படுகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தின்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் வாழும் அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்க மைத்திரிபால…
சம்மாந்துறையில் மைத்திரி பங்கேற்ற, தேர்தல் பிரச்சாரத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (படங்கள்)
யு.எல்.எம். றியாஸ் எதிரணிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (28.12.2014) மாலை சம்மாந்துறை வருகை சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் வெள்ளத்தினை படங்களில் காணலாம்.
புறப்படுங்கள்..
மிஹ்வார் அஹமட் மஹ்ரூப் இன்றைய சூழலில் நமது உரிமைகளை வாக்குகள் மூலம் வென்றெடுப்பதும் ஒரு போராட்டமாகவே இருக்கின்றது. ஒரே நாட்டில் பிறந்து வாழும் நம்மிடையில் மக்கள் கணக்கெடுப்பில் மட்டுமே பிரயோகிக்கப்பட்ட “சிறுபான்மை” “பெரும்பான்மை” என்ற வார்த்தை பிரயோகம், கடந்த காலத்தில் உருப்பெற்று அரசாங்கத்தினால் வளம்பெற்று வாழும் இயக்கத்தின் கொள்கைவாதிகளினால் இனக்கலவரமும், உயிர், சொத்து என அனைத்து வகையான சேதங்களையும் பார்த்துவிட்டோம். தமது சுயநலத்திற்காக சிறுபான்மை மக்கள் மீது அபாண்டமான பொய்களை சுமத்தி தமது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கு…
றிஷாத் – ஹக்கீம் தொலைபேசியில் மனம் விட்டு உரையாடினர்
இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் ஸ்ரீலங்கா முஸ்லிம் நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும்,நாட்டின் நல்லாட்சிக்குமாக எடுத்திருக்கும் முடிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வரவேற்றுள்ளதுடன்,தமது பாராட்டினையும் தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் கூட்டத்தினையடுத்து கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,தாம் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருடன் இணைந்து கொள்வதாக அறிவித்ததையடுத்து,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய…
றிஷாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு
அஸ்ரப் ஏ சமத் மன்னார் அண்டிய வில்பத்து காட்டில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், சட்டவிரோதமாக காடுகளை அழித்து கட்டடங்களையும் வீடுகளையும் அமைத்துள்ளதாகவும் அதற்கு எதிராக வனவளத் திணைக்களம் றிசாத் பதியுத்தீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகம் மேற்படி விடயமாக சகல தஸ்தவேஜிகளை சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் சம்பந்தமாக இன்று வெளிவந்த சிங்கள இதழான மவ்பிம பத்திரிகையில் முற்பக்கத்தில் அமைச்சர் றிசாத்தின் படத்தை பிரசுரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இவ் வீடமைப்புத்திட்டத்தினை அமைப்பதற்காக அமைச்சர் றிசாத் அதிகாரிகளுக்கு…
மைத்திரிபால மற்றும் றிஷாத் பதியுதீன் குழுவினர் நாளை கல்முனைக்கு விஜயம்
எஸ்.அஸ்ரப்கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் அழைப்பை ஏற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ஆகியோர் கல்முனைக்கு நாளை திங்கட்கிழமை (29) காலை 8 மணிக்கு வருகை தரவுள்ளதாக வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அவரது விஜயத்தின்போது, கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும் மக்கள் சந்திப்பிலும் துஆ பிரார்த்தனையிலும் கலந்துகொள்ளும் மைத்திரிபால சிறிசேன…
அஸ்வர் ஒரு அப்பாவி – மஹிந்த ராஜபக்ஸ
மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டுரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சகலதையும் அனுபவித்து விட்டு ஒரே நாளில் கட்சி மாறிச் செல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இவர் போன்றவர்களால் அவரது சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமக்கு உறுதுணையாக இருந்த அஸ்வர் அவர்களது பாராளுமன்ற ஆசனத்தை நயவஞ்சகமாக அபகரித்தது மட்டுமல்லாது அதற்கு வியாக்கியானம் வேறு கூறித்திரிகிறார்கள். இவர்களை “முனாபிக்” என்று…
எங்களை முனாபிக் என்று சொல்லுமாறு ஜனாதிபதியிடம் ஊதிக் கொடுக்கப்படுகிறது – அமீர் அலி
-அனா- பேருவளையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து முனாபிக் என்று சொல்லியுள்ளார் நாங்கள் அவரை விட்டு விலகியதால் அவர் பயப்பட்டதாலயே அவ்வாறு பேசுகின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபல ஸ்ரீசேனவை ஆதரித்து சனிக்கிழமை (27.12.2014) ஓட்டமாவடியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர்…
யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் 30 ஆம் திகதி மைத்திரி, 2 ஆம் திகதி மஹிந்த
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை பொது எதிரணி விடுத்துள்ளது. இதன்படி 30ம் திகதி பொது எதிரணியினரின் வடமாகாணத்தில் 3வது பிரச்சாரக் கூட்டம் மன்னார் மாவட்டத்தில் காலை நடைபெறவுள்ளது. தொடர்ந்து மதியம் வவுனியா மாவட்டத்திலும், பிற்பகல் யாழ்.மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது. மேலும் பொது எதிரணியினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யாத நிலையில், குறித்த மாவட்டங்களில் வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது…
161 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானத்தை காணவில்லை
இந்தோனேசியாவின் சுரயபோ நகரத்திலிருந்து சிங்கப்பூரிற்கு 161 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த எயர்ஏசியா விமாசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமொன்று காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விமானத்துடனான தொடர்புகள் இன்று 28-12-2014 காலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுரபாயோவிற்கும், சிங்கப்பூரிற்கும் இடையிலான ஜாவா கடற்பகுதிக்கு மேலாகவே குறிப்பிட்ட விமானம் காணமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விமானம் காணமல்போவதற்கு முன்னர் வழமைக்கு மாறான பாதையில் பயணிப்பதற்கான அனுமதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2 மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள்…
காத்தான்குடியில் ACMCயின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும், மக்கள் சந்திப்பும்
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனஅவர்களால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும், மக்கள் சந்திப்பும் இடம்பெற ஏற்பாடகியிருக்கின்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். தலைமை: பொறியியலாளர் சிப்லி பாரூக்,(MPC – EP, Chief Organizer – Batticaloa Electorate – ACMC) காலம்: 29.12.2014 திங்கட் கிழமை, காலை 9:00மணி இடம்: கொழும்பு ஸ்டோர் கட்டடம்(அமானா வங்கி அருகாமையில்), பிரதான வீதி,…
அன்று புலிகளால் இன்று அரசாங்கத்தால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்
பொது வேட்பாளரை ஆதரிக்கும் திருமலை மாவட்டத்துக்கான கூட்டம் ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை அமைப்பாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் நேற்று (28) காலை காங்கிரசின் திருமலை கோட்டை என கருதப்படும் புல்மோட்டையில் இடம்பெற்றது.இதில் இம்ரான் மகரூப்,முன்னால்அமைச்சர்களும் பாரளுமன்ற உறுப்பினர்க்களுமான ரிசாத் பதியுதீன்,குணவர்த்தன,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அசாத் சாலி,லாபிர் ஹாஜியார் முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த கிண்ணியா நகர சபை எதிர்கட்சி தலைவர் ஹாரிஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி…
